பெர்வேஸ் முஷாரஃப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| பெர்வேஸ் முஷாரஃப் Pervez Musharraf پرويز مشرف |
|
|
பாகிஸ்தானின் 12வது அதிபர்
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு ஜூன் 20, 2001 |
|
| பிரதமர் | சஃபாருல்லா கான் ஜமாலி, சௌத்திரி ஹுசேன் மற்றும் ஷௌக்காத் அசீஸ் |
|---|---|
| முன்னிருந்தவர் | முகமது ரஃபீக் தரார் |
| அரசியல் கட்சி | பாகிஸ்தான் முஸ்லிம் லீக் |
|
|
|
| பிறப்பு | ஆகஸ்ட் 11 1943 (வயது 66) |
பெர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் களைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார். இனிவரும் தேர்தலில் வெற்றிப் பெற்றால் இராணுவத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். இவர் அமெரிக்கச் சார்ப்புக் கொள்கையை கையாண்டு வருகின்றார்.[1]
2007 மார்ச் மாதம் நாட்டின் உயநீதிமன்ற நீதிபதியை பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்கு குறையத் தொடங்கியது. மேலும் 2007 ஜூலை மாதம் இவரது கட்டளைப் படி இஸ்லாமாபாத்தின் செம்மசூதியை ஒரு வாரம் வரையில் முற்றுகையிட்டிருந்த பாகிஸ்தானிய இராணுவம் உள்நுழைந்து அதில் தங்கியிருந்த அல்-கைடா ஆதரவுத் தீவிரவாதிகளை கொன்றார்.[1]
2008இல் ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Haider, Kamran. "Musharraf imposes emergency rule", ரொய்டர்ஸ், நவம்பர் 3 2007. 2007-11-03 அன்று தகவல் பெறப்பட்டது.