மிக்-27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| மிக்-27 | |
|---|---|
| இந்திய வான்படையின் மிக்-27 | |
| வகை | சண்டை விமானம் |
| தயாரிப்பாளர் | மிகோயன்-குருவிச் OKB |
| வெள்ளோட்டம் | 1972 |
| அறிமுகப்படுத்தியது | 1975 |
| நிலை | பயன்பாட்டில் உள்ளது |
| முக்கிய பயனாளர்கள் | சோவியத் வான்படை இலங்கை வான்படை, இந்திய வான்படை |
| முந்தைய வடிவம் | மிக்-23 |
மிக்-27 அல்லது மிகோயன்-குருவிச் மிக்-27 தரைத்தாக்குதல் விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன்-குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது பகதூர் என்றப் பெயருடன் சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் இந்துஸ்தான் விமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இலங்கை வான்படை 2000 ஆம் ஆண்டு முதல் ஈழப் போரில் இதைப் பயன்படுத்தி வருகின்றது.
[தொகு] பயனர்கள்
- அப்கானிஸ்தான் வான் படை 1979 முதல் 1993 30 மிக்-27 விமானங்களைக் கொண்டிருந்தது
- பல்கேரிய வான்படை தனது மிக்-27 ஐ சேவையில் இருந்து நிறுத்தியுள்ளன.
- கியூப வான்படை
- ஈரான் வான்படை
- கசகிசுதான் வான்படை
- இரசிய வான்படை
- சோவியத் வான்படை பின்னர் பிரிவு நாடுகளுக்கு வழங்கியது.
- சிரிய வான்படை