இதயத்திசு இறப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| இதயத்திசு இறப்பு வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள் |
|
| Diagram of a myocardial infarction (2) of the tip of the anterior wall of the heart (an apical infarct) after occlusion (1) of a branch of the left coronary artery (LCA, right coronary artery = RCA). | |
| ICD-10 | I21.-I22. |
| ICD-9 | 410 |
| DiseasesDB | 8664 |
| MedlinePlus | 000195 |
| eMedicine | med/1567 emerg/327 ped/2520 |
| MeSH | D009203 |
இதயத்திசு இறப்பு (Myocardial infarction), இதயத்தின் ஒரு பகுதிக்கு குருதியோட்டம் தடைப்படும்போது ஏற்படுகிறது. பொதுவாக இது இதயக் கோளாறு, மாரடைப்பு போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுவது உண்டு. இது பெரும்பாலும் இதயத் தமனியில் தடை ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலாஸ்ட்ரால் போன்ற கொழுப்புப் பொருட்களும், வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்வதால் அத் தமனியின் உட்புறம் குறுகிவிடுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை உரிய காலத்தில் கவனிக்கப்படாவிட்டால் இதயத் திசுக்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படலாம்.
நெஞ்சை அழுத்துவது போன்ற வலி, வாந்தி, வியர்வை, மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள் ஆகும்.