கோழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கோழி | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஒரு கறிக்கோழி
|
||||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||||
|
கொல்லைப்படுத்தப்பட்டவை
|
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| முச்சொற்பெயர் | ||||||||||||||||
| Gallus gallus domesticus |
கோழி மனிதனால் வீடுகளிலும் அதற்கான கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு பறவையாகும். இதில் பெண்ணினம் கோழி எனவும், ஆணினம் சேவல் எனவும் வழங்கப்படுகிறது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது ([1]). இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் தொழில்முறை கோழிப் பண்ணைகளுக்கு பெயர் பெற்றது.
உலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட காட்டுக் கோழியில் (Red Jungle Fowl) இருந்து தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது[2].
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Firefly Encyclopedia of Birds என்ற நூலின் தகவலின் அடிப்படையில்.
- ↑ தியடோர் பாஸ்கரன், சு (2011). வானில் பறக்கும் புள்ளெலாம். பக்கம் 27: உயிர்மை பதிப்பகம். pp. 144. ISBN 978-93-81095-59-1.