அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அக்னி நட்சத்திரம்
இயக்குனர் மணிரத்னம்
தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஷ்வரன்
கதை மணிரத்னம்
நடிப்பு கார்த்திக்
பிரபு
விஜயகுமார்
அமலா
நிரோஷா
ஜெயச்சித்ரா
வி.கே. ராமசாமி
ஜனகராஜ்
இசையமைப்பு இளையராஜா
ஒளிப்பதிவு பி. சி. ஸ்ரீராம்
விநியோகம் சுஜாதா பிலிம்ஸ்
வெளியீடு 1988
கால நீளம் 146 நிமிடங்கள்
மொழி தமிழ்

அக்னி நட்சத்திரம் 1988 இல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த இத்திரைப்படத்தில் பிரபு, கார்த்திக், அமலா, விஜயகுமார், ஜனகராஜ் போன்ற பலர் நடித்திருந்தனர்.

வகை[தொகு]

நாடகப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கௌதம் (பிரபு) மற்றும் அஷோக் (கார்த்திக்) இருவரும் பகையின் காரணமாக சண்டைகள் கொள்வர். இதன் காரணம் அஷோக்கின் தாயாரையும் கௌதமின் தாயாரையும் இவர்களது தந்தை மணம் செய்து கொண்டார் என்பதே ஆகும். மேலும் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பகை காரணமாக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இவர்கள் தந்தையின் அலுவலகப் பிரச்சினைகள் காரணமாக இவரைக் கொலை செய்யப்பட இவரின் எதிரியின் முயற்சியால் இரு சகோதரர்களும் ஒற்றுமை கொள்கின்றனர். பின்னர் தம் தந்தையினைக் கொலை செய்ய முயன்றவனை இருவரும் பழி தீர்க்கின்றனர்.

பாடல்கள்[தொகு]

இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 நின்னுக்கோரி வர்ணம் சித்ரா வாலி 04:37
2 ஒரு பூங்காவனம் எஸ். ஜானகி 04:25
3 ராஜா ராஜாதி இளையராஜா 04:42
4 ரோஜாப்பூ ஆடி வந்தது எஸ். ஜானகி 04:27
5 தூங்காத விழிகள் கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 04:41
6 வா வா அன்பே கே. ஜே. யேசுதாஸ், சித்ரா 04:40

மேற்கோள்கள்[தொகு]

  1. "Agni Natchathiram Songs". raaga. பார்த்த நாள் சனவரி 02, 2015.

வெளியிணைப்புக்கள்[தொகு]