பி. சி. ஸ்ரீராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பி. சி. ஸ்ரீராம் ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குனர். இவர், சென்னை திரைத்துறை பயிலகத்தின் மாணவர்களுள் ஒருவராவார். இவர் இயக்கிய 'குருதிப்புனல்' எனும் திரைப்படம், ஆஸ்கார் விருதிற்காக அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நாயகன், அலைபாயுதே, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

ஒளிப்பதிவாளராக[தொகு]

பி. சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த திரைப்படங்களின் பட்டியல்:

தமிழ்த் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களான ஜீவா, கே. வி. ஆனந்த், கே. வி. குகன் ஆகியோர் பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளர்களாக பணிபுரிந்துள்ளனர்.

இயக்குனராக[தொகு]

  • 1992ஆம் ஆண்டில் 'மீரா' எனும் தமிழ்த் திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார்.
  • தொடர்ந்து 'குருதிப்புனல்' எனும் திரைப்படம் (1995).
  • ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ‘வானம் வசப்படும்’ எனும் திரைப்படம் (2004)

விருதுகள்[தொகு]

1988 ஆம் ஆண்டு - சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய திரைத்துறை விருது - 'நாயகன்' திரைப்படத்திற்காக

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பி._சி._ஸ்ரீராம்&oldid=1381777" இருந்து மீள்விக்கப்பட்டது