அக்னி நட்சத்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரை அக்னி நட்சத்திரம் என்ற உச்ச வெயில் காலம் பற்றியது. அக்னி நட்சத்திரம் என்ற பெயரில் வெளியான திரைப்படம் பற்றி அறிய, அக்னி நட்சத்திரம் (திரைப்படம்) என்பதைப் பார்க்கவும்.
சூரியன் மேட இராசியில் உலவும் உச்ச வெயில் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படும். இது அக்கினி நாள் எனவும் அழைக்கப்படும். இக்காலப்பகுதியில் அதிக வெப்பம் நிலவும். அருச்சுனன் காண்டாவனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் எனக் கூறப்படுகின்றது.