இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஓர் நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.

முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 பாகை அளவுள்ளது.13.33 பாகை என்பது 13o, 20 பாகைத்துளி (நிமிடவளைவுகள்). (1 பாகை = 60 பாகைத்துளி (நிமிடவளைவுகள்)).

பொருளடக்கம்

[தொகு] பாதம்

புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை.ஒவ்வொரு விண்மீனும் நான்கு பாதங்கள் கொண்டவை. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனக் குறிப்பிடப் படுகின்றன.ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள் (நிமிடவளைவுகள்). இதன் மூலம் இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்) 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இதிலிருந்து இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் (ஓரைகள்) ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை அடக்கியுள்ளது.

[தொகு] அட்டவணை

கீழேயுள்ள அட்டவணை நட்சத்திரங்களையும், பாதங்களையும், அவற்றோடொத்த இராசிகளையும் சூரியன் அந்த இராசிகளில் உள்ள மாதங்களையும் காட்டுகின்றது.


நட்சத்திரம் பாதம் இராசி இராசிக்கான தமிழ் மாதம்
1. அச்சுவினி முதலாம் பாதம் மேடம் சித்திரை
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
2. பரணி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
3. கார்த்திகை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம் இடபம் வைகாசி
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
4. ரோகிணி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
5. மிருகசீரிடம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் மிதுனம் ஆனி
நான்காம் பாதம்
6. திருவாதிரை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
7. புனர்பூசம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம் கர்க்கடகம் ஆடி
8. பூசம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
9. ஆயிலியம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
10. மகம் முதலாம் பாதம் சிங்கம் ஆவணி
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
11. பூரம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
12. உத்தரம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம் கன்னி புரட்டாசி
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
13. அத்தம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
14. சித்திரை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் துலாம் ஐப்பசி
நான்காம் பாதம்
15. சுவாதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
16. விசாகம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம் விருச்சிகம் கார்த்திகை
17. அனுஷம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
18. கேட்டை முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
19. மூலம் முதலாம் பாதம் தனு மார்கழி
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
20. பூராடம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
21. உத்திராடம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம் மகரம் தை
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
22. திருவோணம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
23. அவிட்டம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் கும்பம் மாசி
நான்காம் பாதம்
24. சதயம் முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
25. பூரட்டாதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம் மீனம் பங்குனி
26. உத்திரட்டாதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்
27. ரேவதி முதலாம் பாதம்
இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம்
நான்காம் பாதம்

[தொகு] தமிழ் பெயர்கள்

அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் பெயர்கள் தமிழ் அல்ல என்றும் அதன் தமிழ் பெயர்கள் புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி ஆகும் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்[1].

[தொகு] மேற்கோள்கள்

  1. தென்சொற் கட்டுரைகள் பக்கம்-72

[தொகு] external link

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்