பங்குனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் மாதங்களும் சூரியனின் நிலையும்

பங்குனி தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் கடைசி மாதமாகும். சித்திரை தொடக்கம் பங்குனி வரையான தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது சூரியனைப் பூமி சுற்றுவதனால் ஏற்படும் பூமிக்குச் சார்பான சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. சூரியன் இராசிச் சக்கரத்தில் மீன இராசிக்குச் செல்வது பங்குனி மாதப் பிறப்பைக் குறிக்கிறது. இந்த மாதம் முழுதும் சூரியன் மீன இராசியிலேயே சஞ்சரிக்கும். இந்த மாதம் 30 நாட்களைக் கொண்டது. ஆங்கில காலக்கணிப்பின் படி மார்ச் மாதம் 15 ஆம் நாளிலிருந்து ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் வரையான காலப்பகுதி தமிழ்ப் பங்குனி மாதத்துடன் பொருந்துகிறது.

வெளியிணைப்புக்கள்[தொகு]


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"http://ta.wikipedia.org/w/index.php?title=பங்குனி&oldid=1466399" இருந்து மீள்விக்கப்பட்டது