எஸ். ஜானகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எஸ். ஜானகி

2007 இல் எஸ். ஜானகி
பின்னணித் தகவல்கள்
பிறப்பு ஏப்ரல் 23, 1938 (1938-04-23) (அகவை 77)
குண்டூர், ஆந்திரப் பிரதேசம்
இசை வகை(கள்) பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி
தொழில்(கள்) பாடகி
இசைத்துறையில் 1957-இன்று வரை

எஸ். ஜானகி (பிறப்பு: ஏப்ரல் 23, 1938) இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.

இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.

1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.

குடும்பம்[தொகு]

இவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

விருதுகள்[தொகு]

 • 1986 இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
 • 2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது
 • நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது
 • 1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
 • பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
 • ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
 • பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது

தேசிய விருதுகள்[தொகு]

நான்கு தடவைகள் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுகள் கிடைத்தன.

 1. 1976, பதினாறு வயதினிலே படத்தில் செந்தூரப் பூவே பாடல்
 2. 1980, ஒப்போல் மலையாளத் திரைப்படத்தில் எட்டுமனூரம்பழத்தில் பாடல்
 3. 1984, சித்தாரா தெலுங்குப் படத்தில் வென்னெல்லோ கோடாரி அந்தம் பாடல்
 4. 1992, தேவர் மகன் படத்தில், இஞ்சி இடுப்பழகா பாடல்

வெளி இணைப்புகள்[தொகு]

எஸ்.ஜானகி பாடிய சில பாடல்கள்[தொகு]

 • 1.மச்சானை பார்த்திங்களா ( அன்னக்கிளி ) பாடல் : பஞ்சு அருணாச்சலம்
 • 2.வாழவைக்கும் காதலுக்கு ஜே ( அபூர்வ சகோதரர்கள் ) பாடல் : வாலி
 • 3.தாஜ்மகால் தேவையில்லை ( அமராவதி )
 • 4.இரவு நிலவு ( அஞ்சலி )
 • 5.தூங்காத விழிகள் ( அக்னி நட்சத்திரம் )
 • 6.சிறிய பறவை சிறகை ( அந்த ஒரு நிமிடம் )
 • 7.கண்ணிலே என்ன ( அவள் ஒரு தொடர்கதை ) பாடல் : கண்ணதாசன்
 • 8.ரோஜாப்பூ நாடி ( அக்னி நட்சத்திரம் )
 • 9.ராசாவே உன்னை விடமாட்டேன் ( அரண்மனைக்கிளி )
 • 10.ஆயிரம் தாமரை மொட்டுகளே ( அலைகள் ஒய்வதில்லை )
 • 11.மாதா உன் கோயிலில் ( அச்சாணி )
 • 12.என்னைப் பாடச் சொல்லாதே ( ஆண்பாவம் )
 • 13.விளக்கு வைப்போம் ( ஆத்மா )
 • 14.தானாத் தலையாடுண்டா ( ஆராரோ ஆரிரரோ )
 • 15.தூக்கம் உன் கண்களை ( ஆலயமணி )
 • 16.கண்மணியே காதல் ( ஆறிலிருந்து அறுபது வரை )
 • 17.ஒரு கிளி உருகுது ( ஆனந்த கும்மி )
 • 18.வசந்தம் பாடிவர ( இரயில் பயணங்களில் )
 • 19.வானுயர்ந்த சோலையிலே ( இதய கோயில் )
 • 20.நான் ஆளான ( இது நம்ம ஆளு )
 • 21.பன்னீரில் நனைந்த ( உயிரே உனக்காக )
 • 22.தேனே தென்பாண்டி ( உதய கீதம் )
 • 23.தாலாட்டு மாறிப் போனதே ( உன்னை நான் சந்தித்தேன் )
 • 24.ஒரு நாள் உன்னோடு ( உறவாடும் நெஞ்சம் )
 • 25.இந்த மாமனோட மனசு ( உத்தம ராசா )
 • 26.நெஞ்சினிலே நெஞ்சினிலே ( உயிரே )
 • 27.ஜெர்மனியின் செந்தேன் ( உல்லாச பறவைகள் )
 • 28.சொர்க்கமே என்றாலும் ( ஊரு விட்டு ஊரு வந்து )
 • 29.ஒரு சந்தன காட்டுக்குள்ளே ( எல்லாமே என் ராசாதான் )
 • 30.பஞ்சு மிட்டாய் சீல ( எட்டுபட்டி ராசா )
 • 31.ஒரு நாளும் உன்னை ( எஜமான் )
 • 32.கட்டி வச்சுக்கோ ( என் ஜீவன் பாடுது )
 • 33.எங்கிருந்தோ என்னை ( ஐ லவ் இந்தியா )
 • 34.மலரே மெளனமா ( கர்ணா )
 • 35.அடி ஆத்தாடி இள ( கடலோர கவிதைகள் )
 • 36.மாங்குயிலே பூங்குயிலே ( கரகாட்டக்காரன் )
 • 37.எந்தன் நெஞ்சில் ( கலைஞன் )
 • 38.குயிலே கவிக்குயிலே ( கவிக்குயில் )
 • 39.பட்டு வண்ண ரோசாவாம் ( கன்னி பருவத்திலே )
 • 40.காலம் காலமாய் பெண் ( கற்பூரதீபம் )
 • 41.வானிலே தேன்நிலா ( காக்கிச் சட்டை )
 • 42.நாதம் என் ஜீவனே ( காதல் ஓவியம் )
 • 43.எர்ராணி குர்ரதான்னி ( காதலன் )
 • 44.ஒரு வானவில் போலே ( காற்றினிலே வரும் கீதம் )
 • 45.பூவரசம் பூ பூத்தாச்சு ( கிழக்கே போகும் ரயில் )
 • 46.விழிகள் மேடையாம் ( கிளிஞ்சல்கள் )
 • 47.உன்னை நானறிவேன் ( குணா )
 • 48.தென்றல் காத்தே ( கும்பக்கரை தங்கைய்யா )
 • 49.பேரைச் சொல்லவா ( குரு )
 • 50.ரோஜா ஒன்று ( கொம்பேறி மூக்கன் )
 • 51.தாலாட்டும் பூங்காற்று ( கோபுர வாசலிலே )
 • 52.பள்ளிக்கூடம் போகலாமா ( கோயில் காளை )
 • 53.மார்கழி திங்களல்லவா ( சங்கமம் )
 • 54.பூட்டுக்கள் போட்டாலும் ( சத்ரியன் )
 • 55.மொட்டு விட்ட முல்லை ( இன்று நீ நாளை நான் )
 • 56.நேத்து ராத்திரி ( சகலகலா வல்லவன் )
 • 57.அடடட மாமரக்கிளியே ( சிட்டுக் குருவி )
 • 58.கூண்டுக்குள்ள என்ன ( சின்ன கவுண்டர் )
 • 59.என்னை மானமுள்ள ( சின்ன பசங்க நாங்க )
 • 60.ராதைக்கேற்ற கண்ணணோ ( சுமைதாங்கி )
 • 61.சலக்கு சலக்கு சேலை ( செம்பருத்தி )
 • 62.வளையல் சத்தம் யம்மா ( சேலம் விஷ்ணு )
 • 63.ராத்திரியில் பூத்திருக்கும் ( தங்க மகன் )
 • 64.சுந்தரி கண்ணால் ( தளபதி )
 • 65.சந்தைக்கு வந்த கிளி ( தர்மதுரை )
 • 66.நீதானா நீதானா ( தாலாட்டு பாட வா )
 • 67.சும்மா நிக்காதிங்க ( தூங்காதே தம்பி தூங்காதே )
 • 68.இஞ்சி இடுப்பழகா ( தேவர்மகன் )
 • 69.தேவ மல்லிகை பூவே ( நடிகன் )
 • 70.கொட்ட பாக்கும் ( நாட்டாமை )
 • 71.பெண் மானே சங்கீதம் ( நான் சிகப்பு மனிதன் )
 • 72.பிள்ளை நிலா ( நீங்கள் கேட்டவை )
 • 73.என் ஜீவன் பாடுது ( நீ தானா அந்தக்குயில் )
 • 74.மணி ஓசை கேட்டு ( பயணங்கள் முடிவதில்லை )
 • 75.அசைந்தாடும் காற்றுக்கும் ( பார்வை ஒன்றே போதுமே )
 • 76.கருத்த மச்சான் ( புது நெல்லு புது நாத்து )
 • 77.மெட்டி மெட்டி ( புள்ளக்குட்டிக்காரன் )
 • 78.நெஞ்சிக்குள்ளே இன்னாருன்னு ( பொன்னுமணி )
 • 79.ஆசை அதிகம் வச்சு ( மறுபடியும் )
 • 80.கன்னி மனம் கெட்டு ( மணமளே வா )
 • 81.முதல்வனே ( முதல்வன் )
 • 82.செக்க செக்க செவந்த ( வல்லரசு )
 • 83.பொன்மேனி உருகுதே ( மூன்றாம் பிறை )
 • 84.ஊருசனம் தூங்கிருச்சு ( மெல்ல திறந்தது கதவு )
 • 85.வா வா பூவே வா ( ரிஷி )
 • 86.வெள்ளை புறாவொன்று ( புதுக்கவிதை )
 • 87.கோழி கூவும் நேரத்துல ( வண்ண வண்ண பூக்கள் )
 • 88.சின்ன ராசாவே ( வால்டர் வெற்றிவேல் )
 • 89.வா வா அன்பே பூஜை ( ஈரமான ரோஜாவே )
 • 90.பாம்பே டையிங் ( சிஷ்யா )
 • 91.இவளொரு இளங்குருவி ( பிரம்மா )
 • 92.தாலாட்டுதே ( கடல் மீன்கள் )
 • 93.காற்றில் எந்தன் கீதம் ( ஜானி )
 • 94.ஒட்டகத்தை கட்டிக்கோ ( ஜென்டில்மேன் )
 • 95.காதல் கடிதம் தீட்டவே ( ஜோடி )
 • 96.கண்ணன் மனம் ( வசந்த ராகம் )
 • 97.மஞ்சள் பூசும் ( சக்கரை தேவன் )
 • 98.மூக்குத்தி பூ மேலே ( மெளன கீதங்கள் )ஞு
 • 99.மந்திரம் சொன்னேன் ( வேதம் புதிது )
 • 100.மல்லியப்பூ பூத்திருக்கு ( தாய் மேல் ஆணை )
"http://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜானகி&oldid=1810779" இருந்து மீள்விக்கப்பட்டது