புதிய எசுப்பானியா
புதிய எசுப்பானியா, (New Spain), முன்னதாக புதிய எசுப்பானிய அரச சார்பாளுமை (Viceroyalty of New Spain, எசுப்பானியம்: Virreinato de Nueva España),காஸ்டீல் முடியாட்சியின் ஓர் அரச சார்பாளுமை பகுதியாகும். எசுப்பானியப் பேரரசின் எல்லைகள் வட அமெரிக்கா மற்றும் கரிபியனிலிருந்து, பிலிப்பீன்சு வரை பரவியிருந்த காலத்தில் இது 1535இல் உருவாக்கப்பட்டது.[1][2][3][4]
அசுடெக் பேரரசை எசுப்பானியா கைப்பற்றிய பிறகு 1521இல் புதிய எசுப்பானியா உருவானது. புதிய எசுப்பானியா ஒரு காலகட்டத்தில் கனடாவின் கீழான வட அமெரிக்காவின் பெரும்பகுதியையும் தற்கால மெக்சிக்கோ மற்றும் பனாமா தவிர்த்த நடு அமெரிக்கா கொண்டிருந்தது ; மிசிசிப்பி ஆற்றுக்கு மேற்கிலிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டையும் புளோரிடாக்களையும் தன்னகத்தேக் கொண்டிருந்தது.
அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்கிலிருந்த புதிய எசுப்பானியாவில் எசுப்பானிய கிழக்கிந்தியத் தீவுகள் எனப்படும் ( பிலிப்பீன்சு, மரியானா தீவுகள், கரோலீன் தீவுகள், எசுப்பானிய பார்மோசா (தைவான்) பகுதிகள், மலுக்கு தீவுகளின் பகுதிகள்) இருந்தன. அமெரிக்கக் கண்டத்திற்கு கிழக்கிலிருந்த புதிய எசுப்பானியாவில் எசுப்பானிய மேற்கிந்தியத் தீவுகள், (கூபா, (தற்கால நாடுகளான எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு உள்ளடக்கிய) லா எசுப்பானியோலா, புவேர்ட்டோ ரிக்கோ, யமேக்கா, கேமன் தீவுகள், டிரினிடாட், மற்றும் வளைகுடாத் தீவுகளை உள்ளடக்கி இருந்தது.
அமெரிக்காக்களில் நிர்வாகப் பிரிவுகளாக, கலிபோர்னியாக்கள், அதாவது (தற்கால அரிசோனா, கலிபோர்னியா, நெவாடா, யூட்டா, மேற்கு கொலராடோ, தெற்கு வயோமிங் உள்ளடக்கிய) ஆல்ட்டா கலிபோர்னியா; வடக்கு பாகா கலிபோர்னியா தெற்கு பாகா கலிபோர்னியா, (தற்கால நாடுகளான கோயுல்லா மற்றும் டெக்சஸ் உள்ளடக்கிய) நுவோ எக்சுட்ரெமடுரா , ( டெக்சசின் சில பகுதிகளையும் நியூ மெக்சிகோவையும் உள்ளடக்கிய) சான்டா ஃபெ தெ நுவோ மெக்சிக்கோ[5] மற்றும் (மேற்கு மிசிசிப்பி ஆற்றுப் படுகையும் மிசௌரி ஆற்றுப் படுகையும் உள்ளடக்கிய) லூசியானாவைக் கொண்டிருந்தது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "LANIC: Colección Juan Bautista Muñoz. Archivo de la Real Academia de la Historia – España. (in Spanish)". Archived from the original on 2019-09-06. பார்க்கப்பட்ட நாள் 2013-11-01.
{{cite web}}
: no-break space character in|title=
at position 81 (help) - ↑ Selections from the National Library of Spain: Conquista del Reino de Nueva Galicia en la América Septrentrional..., Texas, Sonora, Sinaloa, con noticias de la California. (Conquest of the Kingdom of New Galicia in North America..., Texas, Sonora, Sinaloa, with news of California). (in Spanish)
- ↑ "Cervantes Virtual: Historia de la conquista de México (in Spanish)". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-11-01.
- ↑ "Worldcat: Historia de la conquista de México, poblacion y progresos de la América Septentrional, conocida por el nombre de Nueva España (in Spanish)". Archived from the original on 2013-01-20. பார்க்கப்பட்ட நாள் 2013-11-01.
- ↑ "Viceroyalty of New Spain (historical territory, Mexico) - Encyclopedia Britannica". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-08.