தெற்கு பாகா கலிபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு பாகா கலிபோர்னியா
Baja California Sur
மாநிலம்
Estado Libre y Soberano de
Baja California Sur
தெற்கு பாகா கலிபோர்னியா Baja California Sur-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் தெற்கு பாகா கலிபோர்னியா Baja California Sur
சின்னம்
அடைபெயர்(கள்): El Acuario Del Mundo
(உலகின் மீன் காட்சியகம்)
பண்: கான்டோ அ பாகா கலிபோர்னியா
மெக்சிக்கோவில் தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலம்
மெக்சிக்கோவில் தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலம்
நாடுமெக்சிக்கோ
CapitalLa Paz
Municipalities5
Largest CityLa Paz
AdmissionOctober 8, 1974[1]
Order31st
அரசு
 • GovernorPRD Marcos Covarrubias Villaseñor
 • Senators[2]PT Francisco J. Obregón
PRD Josefina Cota
PAN Luis Coppola Joffroy
 • Deputies[3]
பரப்பளவு[4]
 • மொத்தம்73,909 km2 (28,536 sq mi)
 Ranked 9th
உயர் புள்ளி[5]2,080 m (6,820 ft)
மக்கள்தொகை (2012)[6]
 • மொத்தம்691,161
 • தரவரிசை31st
 • அடர்த்தி9.4/km2 (24/sq mi)
 • அடர்த்தி தரவரிசை32nd
இனங்கள்Sudcaliforniano (a)
நேர வலயம்MST (ஒசநே-7)
 • கோடை (பசேநே)MDT (ஒசநே-6)
Postal code23
Area code
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுMX-BCS
HDIRed Arrow Down.svg 0.7851 Very High Ranked 3rd
மொத்த உள்நாட்டு உற்பத்திUS$ 3,967,628.2 thousands or US$ 3.968 billion [a]
இணையதளம்Official Web Site
^ a. The state's GDP was 50,785,641 thousands of pesos in 2006,[7] amount corresponding to 3,967,628.2 thousands of dollars, being a dollar worth 12,80 pesos (value of June 3, 2010).[8]

தெற்கு பாகா கலிபோர்னியா (பாகா கலிபோர்னியா சுர், Baja California Sur, /ˈbaxa kaliˈfornja sur/ ), அல்லது "கீழுள்ள கலிபோர்னியாவின் தெற்கு", அலுவல்முறையில் கட்டற்றதும் இறையாண்மையுடையதுமான தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலம் (எசுப்பானியம்: Estado Libre y Soberano de Baja California Sur)எனப்படுவது மக்கள்தொகைப்படி மெக்சிக்கோ நாட்டின் இரண்டாவது மிகச் சிறிய மாநிலமாகும். 32 மாநிலங்கள் உள்ள மெக்சிக்கோ நாட்டின் 31வது மாநிலமாக அக்டோபர் 8, 1974இல் இணைந்தது. அதற்கு முன்னதாக இப்பகுதி பாகா கலிபோர்னியாவின் தெற்கு ஆள்புலம் என அழைக்கப்பட்டு வந்தது. பாகா கலிபோர்னியா மூவலந்தீவின் தென்பகுதியில் 73,475 km2 (28,369 sq mi)பரப்பில் அமைந்துள்ள இந்த மாநிலம் மெக்சிக்கோவின் நிலப்பகுதியில் 3.57% ஆக உள்ளது. இதன் வடக்கில் பாகா கலிபோர்னியாவும் மேற்கில் அமைதிப் பெருங்கடலும், கிழக்கில் கலிபோர்னியா வளைகுடாவும் அமைந்துள்ளன. கலிபோர்னியா வளைகுடாக் கடல்கடந்த எல்லைகளை கிழக்கில் சோனோரா மற்றும் சினலோவா மாநிலங்களுடன் கொண்டுள்ளது.


2010கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 637,026 ஆக இருந்தது. இதன் மிகப் பெரிய நகரமும் தலைநகருமாக லா பாஸ் உள்ளது.இது ஓர் சுற்றுலாத் தலமாகவும் வரலாற்றுச் சின்னமாகவும் விளங்குகிறது. இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க லோரெட்டோ நகரம் மூன்று கலிபோர்னியாக்களுக்கும் (தெற்கு பாகா கலிபோர்னியா, பாகா கலிபோர்னியா, மற்றும் கலிபோர்னியா) முதல் தலைநகரமாக இருந்துள்ளது. அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் வடிவமைத்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் உள்ள சான்ட்டா ரோசாலியா நகரமும் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Poder Legislativo del Estado de Quintana Roo" (in Spanish). Archived from the original on 2018-12-25. https://web.archive.org/web/20181225031602/http://www.congresoqroo.gob.mx/dependencias/DIR_biblioteca/historia/palacio.pdf.  (எசுப்பானியம்)
  2. "Senadores por Baja California Sur LXI Legislatura". Senado de la Republica. October 1, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Listado de Diputados por Grupo Parlamentario del Estado de Baja California Sur". Camara de Diputados. டிசம்பர் 25, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 1, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Baja California Sur". SRE. ஜூலை 22, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 12, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. Saldierna, J. F.. Mexico y sus estados. Editorial Emán. பக். 68. 
  6. "ENOE". August 24, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Sistema de Cuantas Nacionales de Mexico" (PDF). 2010. p. 40. October 1, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Reporte: Jueves 3 de Junio del 2010. Cierre del peso mexicano". www.pesomexicano.com.mx. August 10, 2010 அன்று பார்க்கப்பட்டது.