டி. என். சேஷன்
திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் | |
---|---|
10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | |
பதவியில் திசம்பர் 12, 1990 – திசம்பர் 11, 1996 | |
பிரதமர் | வி. பி. சிங் |
முன்னையவர் | வி. எஸ். ரமாதேவி |
பின்னவர் | எம். எஸ். கில் |
18வது ஆய அவை செயலாளர் இந்தியக் குடியியல் பணிகள் | |
பதவியில் 1989–1989 | |
முன்னையவர் | பி.ஜி.தேஷ்முக் |
பின்னவர் | வி. சி. பாண்டே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் 15 திசம்பர் 1932 பாலக்காடு, கேரளம், இந்தியா |
இறப்பு | 10 நவம்பர் 2019 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 86)
தேசியம் | இந்தியர் |
முன்னாள் கல்லூரி | சென்னை கிருத்துவக் கல்லூரி ஹார்வர்டு பல்கலைக்கழகம் |
திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் (Tirunellai Narayana Iyer Seshan) அல்லது டி. என். சேஷன் (15 டிசம்பர் 1932 - 10 நவம்பர் 2019) இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப் பொறுப்புக்களை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக திசம்பர் 12, 1990 முதல் திசம்பர் 11, 1996 வரை பொறுப்பேற்றவர்.[1] இந்த காலகட்டத்தில் அவர் தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவதில் எடுத்த முனைப்பான நடவடிக்கைகளால் பெரிதும் அறியப்படுகிறார்.[2][3]
வாழ்க்கை
[தொகு]சென்னை மாகாணம், பாலக்காட்டில் உள்ள திருநெல்லை எனும் சிற்றூரில் தந்தை டி. எஸ். நாராயணய்யர், தாயார் சீதாலட்சுமிக்கு பிறந்தவர் டி. என்.சேஷன்.
கல்வி
[தொகு]பள்ளிப்படிப்பு பாலக்காடு பி.இ.எம். உயர்நிலைப்பள்ளி. பாலக்காடு அரசினர் விக்டோரியா கல்லூரியில் இண்டர் மீடியட். சென்னை தாம்பரம் கிருத்தவக் கல்லூரியில் பி.எஸ்.சி.(ஹானர்ஸ்), அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. (பொது நிர்வாகம்), இந்திய ஆட்சிப் பணி (1954) முடித்தார்.
பணிகள்
[தொகு]கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறை இயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். 1990 திசம்பர் 12ஆம் தேதி முதல் 6 ஆண்டுகளுக்கு இவர் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பல. இவரது சில நடவடிக்கைகள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானபோதிலும் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர்திருத்தங்களை செய்தது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
[தொகு]- ரமோன் மக்சேசே விருது (1995)
- அலகாபாத் பல்கலைக்கழகம் வழங்கிய எல்.எல்.டி. பட்டம் (1996) [4]
இறப்பு
[தொகு]அவர் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நவம்பர் 10, 2019 அன்று 86 வயதில் காலமானார். அவரது மறைவை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ். வை. குரைஷி அறிவித்தார்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Previous Chief Election Commissioners". Election Commission of India. Archived from the original on 2008-11-21. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.
- ↑ ‘1990 - 1996’ இந்தியத் தேர்தல் களத்தில் டி என் சேஷனின் அதிரடி ஆட்ட காலம்!
- ↑ http://zeenews.india.com/blog/empowering-the-ec_658.html
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999, பக்கம்127