வவுனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
Reverted 1 edit by 112.134.175.201 (talk): விளம்பரம். (TW)
வரிசை 58: வரிசை 58:
# CSC
# CSC
# Technoworld
# Technoworld
# Oxford
# Oxford
*ideyal kalvinilaiyam pandarikulam(m.m.rathan)

==தொலைத் தொடர்பு==
==தொலைத் தொடர்பு==
===அஞ்சல்===
===அஞ்சல்===

05:01, 25 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

வவுனியா
ஒரு தோற்றம்.
ஒரு தோற்றம்.
வவுனியா நகரின் ஒரு பகுதி.

வவுனியா
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - வவுனியா
அமைவிடம் 8°45′15″N 80°29′53″E / 8.754239°N 80.497971°E / 8.754239; 80.497971
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 30-120 மீட்டர் மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
அரச அதிபர் திருமதி சாள்ஸ்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 43000
 - +94-24,
 - NP

வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். வவுனியா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள். இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் மிகவும் வளர்ச்சியுடைய நகரமாக அமைந்துள்ளது. ஈழப்போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இம்மாவட்டத்திலேயே உள்ளனர். மெனிக்பாம் நலன்புரி நிலையம் இங்கு அமைந்துள்ளது.

கல்வி

பல்கலைக்கழகம்

வவுனியா மாவட்ட அளவிடைக்கான படம்
வவுனியா மாவட்ட அளவிடைக்கான படம்

யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் வளாகத்திற்காக ஒரு தொகுதி நிலப்பரப்பானது A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ள பம்பைமடுப் பகுதியில் ஒதுக்கப்பட்டு விடுதிகளிற்கான ஆரம்பவேலைகள் தொடங்கியுள்ளபோதிலும் உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டட வேலைகள் முடிவடையவில்லை.

இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளது.

பாடசாலைகள்

தொழில் நுட்பக் கல்லூரி

வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.

விவசாயக் கல்லூரி

வவுனியா யாழ்ப்பாணம் வீதியில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் வவுனியா விவசாயக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, 1989 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தில், விவசாய diploma படிப்பை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலையங்கள்

  1. வவுனியா விஞ்ஞான தொழிநுட்ப முன்னேற்ற கல்விக் கழகம் - வஸ்டெக் - (VASTEC Institute of Computer Studies) வவுனியா புகையிரதநிலைய வீதியில் அமைந்துள்ள இலாபநோக்கற்ற தனியார் கணினிக் கல்வி நிறுவனம். இந்தக் கல்வி நிறுவனம் 1992 ஏப்ரல் 18 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
  2. IDM
  3. NIITA
  4. GATEWAY
  5. CSC
  6. Technoworld
  7. Oxford
  • ideyal kalvinilaiyam pandarikulam(m.m.rathan)

தொலைத் தொடர்பு

அஞ்சல்

வவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் (Agency) அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன.

  • அஞ்சற் குறியீடு: 43000

தொலைபேசி

குறியீடு: 024 (வேறு மாவட்டங்களில் இருந்தும் நகர்பேசியூடாகத் தொடர்பு கொள்ள).

கம்பி இணைப்புக்கள்

இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனம்

கம்பியற்ற இணைப்பு (நகர்பேசி)

  • CDMA இணைப்புக்கள்
    • சண்ரெல்
    • இலங்கைத் தொலைத் தொடர்புநிறுவனம்
    • லங்காபெல்
  • TDMA (GSM) இணைப்புக்கள்

இணைய இணைப்பு

அக்டோபர் 2007 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கைத் தொலைத் தொடர்பு நிலைய இலக்கங்களுக்கு அகலப்பட்டை இணைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டயொக் வைமாக்ஸ், மொபிட்டல் மற்றும் டயலொக் நிறுவ்னத்தில் ஹெசெஸ்டீபிஏ (HSDPA) இணைப்புக்களும் கிடைக்கின்றன.

வானொலிகள்

பத்திரிகைகள்/சஞ்சிகைகள்

மத வழிபாட்டுத் தலங்கள்

வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

சைவக் கோயில்கள்

காவடி எடுக்கும் பக்தர்கள்
  • சித்திவிநாயகர் ஆலயம், குடியிருப்பு
  • வவுனியா கோவில்குளம் சிவன் கோயில்
  • லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம், பூந்தோட்டம்
  • வவுனியா சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு கோயில்
  • காளிகோயில்-குருமன்காடு
  • ஸ்ரீ கந்தசாமி கோயில்
  • சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
  • பழனி மலை முருகன் கோயில்-சிதம்பரபுரம்
  • ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்-வெளிக்குளம்
  • சமளன்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில்
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- சமளன்குளம்
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- தெற்கிலுப்பைக்குளம்
  • ஸ்ரீ நரசிம்மர் ஆலயம்-தெற்கிலுப்பைக்குளம்
  • ஐயப்பன் தேவஸ்தானம்-கோவில்குளம்.
  • கருமாரி அம்மன் கோவில் (வைஜயந்த் சர்மா)
  • தேடிவந்த பிள்ளையார் கோவில் (வைத்தீஸ்வரக்குருக்கள்)

கிறித்தவ ஆலயங்கள்

  • கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
  • புனித அந்தோனியார் தேவாலயம்-இறம்பைக்குளம்
  • புனித செபஸ்ரியார் தேவாலயம்-தெற்கிலுப்பை
  • குருசாண்டவர் தேவாலயம்- தச்சன்கு
  • ஜெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ஜ மன்றம் - உக்குளாம் குளம்

போக்குவரத்து

வவுனியாவினூடான தொடருந்து சேவைகள் ஓமந்தை முதல் கொழும்பு வரை நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து சேவைகள் வவுனியா ஊடாக கொழும்பு மற்றும் பிர நகரங்களுக்குச் செல்கின்றன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வவுனியா&oldid=1306933" இலிருந்து மீள்விக்கப்பட்டது