வவுனியா விபுலாநந்தா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வவுனியா விபுலாநந்தா கல்லூரி இலங்கையின் வவுனியாவில் உள்ள பண்டாரிகுளம் எனும் கிராமத்தில் உள்ளது. இக்கல்லூரியில் சாதாரண தரம், உயர் தரம் ஆகியவற்றில் ஏறத்தாழ 3500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

முன்னர் வவுனியா விபுலானந்தர் வித்தியாலயம் என்ற பெயருடன் இருந்த பாடசாலையே தற்போது வவுனியா விபுலாநந்தா கல்லூரி என தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இக்கல்லூரியின் முன்னை நாள் அதிபர் திரு சி வீ பேரம்பலம் அவர்கள் கல்லூரியினை வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு ஆற்றியவர். ஆரம்பத்தில் மிக சிறிய பாடசாலையாக இருந்த இப் பாடசாலையினை முன்னணிப் பாடசாலையாக மாற்றியதில் பெரும் பங்குடையவர். அவருடைய பணி தற்போது மு ஜெயதரன் அவர்களால் முன்னெடுத்து செல்லப்படுகின்றது.

சுவாமி விபுலானந்தரின் பெயர் கொண்டு இயங்கும் இந்த பாடசாலை விபுலானந்தர் கழகம் என்னும் பெயரில் மாணவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு கழகம் ஒன்றையும் நடாத்தி வருகின்றது. கழக மாணவர்கள் தமது திறன்களை வெளிக்கொண்டுவர இக் கழகம் உதவி புரிகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]