லங்கா பெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லங்காபெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

லங்கா பெல், CDMA தொழில் நுட்பத்தை இலங்கையில் முதன் முறையாக அறிமுகப் படுத்திய நிறுவனமாகும்.[1] இது மே 1, 2007 இன்படி 500,000 இற்கும் மேற்பட்ட CDMA வாடிக்கையாளர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கையில் இதுவே வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 150 மணித்தியாலங்களுக்கு இணைய இணைப்பை வழங்கிவருகின்றது. அத்துடன் கம்பியற்ற அகனற அலை இணைப்புக்களை கொழும்பு கண்டி ஆகிய பகுதிகளில் வழங்கிவருகின்றபோதிலும் இதன் ஆதிக்கம் இலங்கைத் தொலைத் தொடர்புநிலையத்தின் அகன்ற அலை (அகலப் பட்டை) இணைப்புடன் போட்டியிட முடியாமலே உள்ளது. லங்காபெல்லின் விளம்பரப்படி 153 கிலோபிட்ஸ்/செக்கண் வேகத்தில் CDMA தொலைபேசிகளுக்கு இணைப்பானது வழங்கப் படுகின்றது.

லங்காபெல் சண்டெல் போன்றல்லாது ஒரு பிரதேசத்தில் இருந்து பிறிதோர் பிரதேசத்திற்குச் CDMA தொலைபேசியை எடுத்துச் சென்றால் வாடிக்கையாளர் சேவைக்கு கையொப்பமிட்ட கடிதம் அனுப்பினால் அன்றி வேலை செய்யாது. எனவே இது வாகனங்களில் பாவிப்பதற்குப் பொருத்தமானதல்ல. எனினும் இது ஒப்பீட்டளவில் கட்டணம் குறைவானது என்பதால் கூடுதலான CDMA வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவை இலக்கம்[தொகு]

  • தொலைபேசி வாடிக்கையாளர்கள் சேவை : 011-5375375

வெளியிணைப்பு[தொகு]


இலங்கையின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் {{{படிம தலைப்பு}}}
லங்காபெல் | ஹட்ச் | எட்டிசலட் | ஸ்ரீ லங்கா டெலிகொம் | டயலொக் | மோபிட்டல் | எயார்டெல் | டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஒரு நேரத்தில் ஓரடி (ஆங்கில மொழியில்)". லங்கா பெல். பார்த்த நாள் நவம்பர் 11, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லங்கா_பெல்&oldid=2756766" இருந்து மீள்விக்கப்பட்டது