உள்ளடக்கத்துக்குச் செல்

குடியாத்தம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடியாத்தம் வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக குடியாத்தம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் குடியாத்தம் கிழக்கு மற்றும் குடியாத்தம் மேற்கு என 2 உள்வட்டங்களும், 45 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 425,353 ஆகும். அதில் 210,817 ஆண்களும், 214,536 பெண்களும் உள்ளனர். 98,233 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 55.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.92% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 47687 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 116,843 மற்றும் 3,065 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.72%, இசுலாமியர்கள் 15.86%, கிறித்தவர்கள் 2.04% மற்றும் பிறர் 0.36% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடியாத்தம்_வட்டம்&oldid=3618014" இலிருந்து மீள்விக்கப்பட்டது