காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் | |
அமைவிடம்: காவேரிப்பாக்கம், தமிழ்நாடு
| |
ஆள்கூறு | 12°54′19″N 79°27′43″E / 12.9053°N 79.4620°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
வட்டம் | நெமிலி |
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |
மக்களவைத் தொகுதி | காவேரிப்பாக்கம் |
மக்கள் தொகை • அடர்த்தி |
14,583 (2011[update]) • 2,815/km2 (7,291/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
5.18 சதுர கிலோமீட்டர்கள் (2.00 sq mi) • 165 மீட்டர்கள் (541 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/kaveripakkam |
காவேரிப்பாக்கம் (ஆங்கில மொழி: Kaveripakkam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காவேரிப்பாக்கத்தில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]காவேரிப்பாக்கம், வேலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையங்கள், 15 கி.மீ. தொலைவில் உள்ள சோளிங்கர் மற்றும் 17 கி.மீ. தொலைவில் உள்ள 'வாலாஜாபேட்டை சாலை' ஆகும். இதன் கிழக்கில் காஞ்சிபுரம் 35 கி.மீ.; மேற்கில் வாலாசாபேட்டை 15 கி.மீ.; வடக்கில் அரக்கோணம் 40 கி.மீ. மற்றும் தெற்கில் செய்யாறு 50 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]5.18 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 84 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டதாகும்.[1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,323 வீடுகளும், 14,583 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.28% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1007 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]
புகழ்பெற்ற வாசிகள்
[தொகு]- வாசுகி (பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்கு முன்னர்), தமிழ்ப் புலவர் வள்ளுவரின் மனைவி[3]
- அரியநாத முதலியார், விஜயநகர அரசின் அரசப் பிரதிநிதி[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ காவேரிப்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Kaveripakkam Population Census 2011". Archived from the original on 2019-04-19. பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
- ↑ G. Devaneya Paavaanar (2017). திருக்குறள் [Tirukkural: Tamil Traditional Commentary] (4 ed.). Chennai: Sri Indhu Publications. pp. 32–33.