1450
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1450 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1450 MCDL |
திருவள்ளுவர் ஆண்டு | 1481 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2203 |
அர்மீனிய நாட்காட்டி | 899 ԹՎ ՊՂԹ |
சீன நாட்காட்டி | 4146-4147 |
எபிரேய நாட்காட்டி | 5209-5210 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1505-1506 1372-1373 4551-4552 |
இரானிய நாட்காட்டி | 828-829 |
இசுலாமிய நாட்காட்டி | 853 – 854 |
சப்பானிய நாட்காட்டி | Hōtoku 2 (宝徳2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1700 |
யூலியன் நாட்காட்டி | 1450 MCDL |
கொரிய நாட்காட்டி | 3783 |
1450 (MCDL) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 26 – பிரான்சிசுக்கோ சிபோர்சா மிலனைக் கைப்பற்றி, அதன் இளவரசனானான். இதன் மூலம் இவனது வம்சம் அடுத்த நூறாண்டுகளுக்கு மிலன் நகரை ஆட்சி செய்தது.
- மே 8 – இங்கிலாந்தின் ஆறாம் என்றிக்கு எதிராக கென்ட் நகரத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- சூலை 6 – கன் பிரான்சிடம் வீழந்தது.
- ஆகத்து 12 – நார்மாண்டியின் கடைசி ஆங்கிலேயப் பகுதியான செர்போர்க் பிரான்சிடம் வீழ்ந்தது.
- அக்டோபர் 5 – யூதர்கள் கீழ் பவேரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- நவம்பர் 3 – பார்செலோனா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- முன்-கொலம்பியக்கால இன்கா நகரமான மச்சு பிச்சு கடல்மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டது.[1]
- குட்டன்பேர்க் தனது முதலாவது அச்சியந்திரத்தை செருமனியின் மாயின்சு நகரில் நிறுவினார்.[2]
- யாழ்ப்பாணத்தில் செண்பகப் பெருமாள் ஆட்சி ஆரம்பமானது.
பிறப்புகள்
[தொகு]- இப்ராகிம் லௌதி, தில்லி சுல்தானகத்தின் 31வது சுல்தான் மற்றும் லௌதி வம்சத்தின் 3வது சுல்தான் (இ. 1526)
- இரண்டாம் நரசிம்ம ராயன், விஜயநகரப் பேரரசின் சாளுவ மரபின் முதல் அரசனான சாளுவ நரசிம்ம தேவ ராயனின் இரண்டாவது மகன் (இ. 1505)
- இரானிமசு போசு, இடச்சு/நெதர்லாந்திய ஓவியர் (இ. 1516)
- சிக்கந்தர் லௌதி, லௌதி வம்சத்தின் 2வது சுல்தான் (இ. 1517)
- திம்ம பூபாலன், விஜயநகரப் பேரரசின் அரசன் (இ. 1491)
- பிரான்சிஸ் கோ டீ அல்மெய்டா, இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வாணிபத்தை கவனித்த முதல் ஆளுநர் (இ. 1510)
- பிரௌத ராயன், விஜயநகரப் பேரரசின் அரசன் (இ. 1401)
- ரவிதாசர், வட இந்திய துறவி (இ. 1520)
- வீரநரசிம்ம ராயன், விஜயநகரப் பேரரசின் அரசன் (இ. 1509)
- ஜான் கபோட், இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1498)
இறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 2 - அகமது இப்னு அரபுசா, நடுக்காலத்தில் வாழ்ந்த ஒரு அரபு எழுத்தாளர் மற்றும் பயணி (பி. 1389)
- மே 18 - அப்துல் லத்தீப் மிர்சா, பால்கின் ஆளுநர் (பி. 1420)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Historic Sanctuary of Machu Picchu — UNESCO World Heritage Centre". யுனெசுக்கோ. 2006. பார்க்கப்பட்ட நாள் 9 December 2006.
- ↑ Klooster, John W. (2009). Icons of invention: the makers of the modern world from Gutenberg to Gates. Santa Barbara, CA: ABC-CLIO. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-34745-0.