உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல் லத்தீப் மிர்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்துல் லத்தீப் மிர்சா என்பவர் உலுக் பெக்கின் மூன்றாவது மகன் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் பால்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். சாருக்கின் இறப்பிற்கு பிறகு ஹெராத்தை ஆக்கிரமித்தார்.

தனது தந்தைக்கு விசுவாசமானவராக தொடர்ந்து இருக்கவில்லை. சமர்கந்தை ஆட்சி செய்யும் பொறுப்புக்கு தன்னை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்காக தனது தந்தைக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். தனது தந்தையை தோற்கடித்தார்.

உலுக் பெக் சரண் அடைய முடிவு செய்தார். மெக்காவிற்கு புனித பயணம் செல்ல அவருக்கு மிர்சா அனுமதியளித்தார். எனினும் பயண வழியிலேயே மிர்சாவின் ஆணைப்படி உலுக் பெக் கொல்லப்பட்டார்.

இதன் காரணமாக இவருக்கு பதர்குஷ் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த பாரசீகச் சொல்லுக்குத் தந்தையைக் கொன்றவன் என்று பொருள். சில நாட்களுக்குப் பிறகு இவர் தன் சகோதரன் அப்துல் அசீசையும் கொல்லப்படுமாறு செய்தார்.

இறப்பு[தொகு]

இவ்வாறாக இவர் ஆட்சிக்கு வந்தார். மத ஈடுபாடு அதிகமாக இருந்ததால் உள்ளூர் மதக் குழுக்களின் ஆதரவைப் பெற்றார். எனினும் இந்த ஆதரவு அமீர்கள் இவருக்கு எதிராக செய்த சதித் திட்டத்திலிருந்து இவரைக் காப்பாற்றவில்லை. இவரது ஆட்சி ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது. இவருக்குப் பிறகு இவரது உறவினர் அப்துல்லா மிர்சா ஆட்சிக்கு வந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_லத்தீப்_மிர்சா&oldid=3614926" இலிருந்து மீள்விக்கப்பட்டது