வேடபட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேடப்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 304

வேடப்பட்டி (Vedapatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது சந்திரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 254 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 204, மொத்த மக்கள் தொகை 782, இதில் 403 ஆண்களும், 379 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 57.8 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்[தொகு]

  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. "Vedapatti Village , Uthangarai Block , Krishnagiri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேடபட்டி&oldid=3647517" இலிருந்து மீள்விக்கப்பட்டது