விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2023
முன்னெடுப்பு
[தொகு]இவ்வாண்டின் செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. அந்நாளிலோ (சனிக்கிழமை) அல்லது அதற்கடுத்த நாளிலோ (அக்டோபர் 1, ஞாயிற்றுக்கிழமை) விக்கி மாரத்தானை நடத்தலாம் என்பது எனது பரிந்துரை. அக்டோபர் 2, திங்கட்கிழமையன்று இந்தியாவில் விடுமுறை என்பதால், ஞாயிறன்று நேரடி நிகழ்வொன்றை தமிழகத்தில் நடத்தவும் வாய்ப்புள்ளது. பயனர்கள் தமது கருத்துகளை இந்தப் பேச்சுப் பக்கத்தில் இடலாம். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
- நிதி நல்கை விக்கியிலிருந்து கிடைக்கும் பட்சத்தில் நேரடி நிகழ்வாக தஞ்சாவூரில் நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்க விருப்பம். அக்டோபர் 2 விடுமுறை நாள் என்பதால் அக்டோபர் 1 பலருக்கும் வசதியாக அமையும். --சத்திரத்தான் (பேச்சு) 13:43, 15 சூலை 2023 (UTC)
வணக்கம் தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் சமயத்தில் விக்கி மாரத்தான் நடத்துவது பொருத்தமாக இருக்கும். அந்த நாளில் வழக்கமான துப்புரவு பணிகளுடன், தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டுரைகளில் புதிய மாவட்டங்கள் குறித்த இற்றைப் பணிகளில் ஊராட்சி ஒன்றிய அடிப்படையில் சரிபார்த்து (சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி, வேலூர், நாகபட்டணம், விழுப்புரம், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதிலிருந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கபட்டன) மேற்கொள்ள பரிந்துரைக்கிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 15:17, 15 சூலை 2023 (UTC)
- @Arularasan. G: முன்மொழிவினை வரவேற்கின்றேன். மேற்கண்ட மாவட்டப் பயனர்கள் இதில் கூடுதல் பங்களிப்பினை வழங்கலாம்.--சத்திரத்தான் (பேச்சு) 15:51, 15 சூலை 2023 (UTC)
- //பயனர்கள் தமக்கு விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம். // என்பது மிகவும் சிறப்பான தொடக்கம். நேரடி நிகழ்வில் அதிக பலன்கள் உண்டு. தஞ்சைப் பல்கலைக் கழகம் பல அரிய நூல்களை கொண்ட நூலகத்தையும், பதிப்புத்துறையையும் கொண்டுள்ளது. மேலும் அதன் வெளியீடுகள் பொதுகள உரிமத்தில் கிடைக்கிறது. c:Category:Tamil Wikipedia Free Content Advocacy அண்ணா பிறந்த நாள் அன்று அந்நூல்களில் தள்ளுபடியும் தருவர். சென்று பயன்பெறுவோம். நிதியுதவி கிடைக்காவிட்டாலும், பயணிக்க உள்ளேன். உடன் வர விரும்பும் நண்பர்கள் தங்கள் எண்ணங்களைத் தெரிவிக்கவும்.--த♥உழவன் (உரை) 00:26, 16 சூலை 2023 (UTC)
வணக்கம். நல்ல முயற்சி. விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள எனது விருப்பத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. -- வசந்தலட்சுமி
- //புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விக்கி மாரத்தான் ஒரு சிறப்பான திட்டம். ஆனால் நேரடி சந்திப்பின்போது இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன என கருதுகிறேன். கூடுபவர்கள் அனைவருக்கும் கணினி, இணைய வசதி, நிகழ்விடத்திற்கு வருதல், வீட்டுக்குத் திரும்புதல் பயணத் திட்டமிடல்கள், உரையாடல்கள், சந்தேகங்கள் மற்றும் இயல்பாக பங்களிக்கத் தேவையான சில தனிமனித வசதிகள் போன்றவை மாரத்தான் நிகழ்வின் நேரத்தைக் குறைக்கும்.
- எனது பரிந்துரைகள்
1. செப்டம்பர் 30 - ஒரு நாள் நேரடி சந்திப்பு: நம் இருபது ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கவும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான பாதையை உருவாக்கவும் தமிழகத்திலுள்ள தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் நண்பர் சத்திரத்தான் பரிந்துரைக்கும் கல்லூரியில் சந்திக்கலாம். அக்கல்லூரியின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சில தலைப்புகளில் கட்டுரையை உருவாக்கவும் மொழிபெயர்க்கவும் பயிற்சியளிக்கலாம். இயலுமெனில் மாரத்தான் நிகழ்வில் மொழிபெயர்க்க சில நூறு தலைப்புகளையும் பரிந்துரைக்கலாம்.
2. அக்டோபர் 1 - மாரத்தான். முதல் நாள் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் உருவாக்கும் கட்டுரைகள் அனைத்தையும் பிழை திருத்தி தக்க வைத்தல் மற்றும் புதிய கட்டுரைகளை உருவாக்குதல் செயல்களில் நாம் ஈடுபடலாம். நண்பர்கள் கனக்சு, ஆண்டன், போன்றவர்கள் வழக்கம் போல இணைவார்கள் என்பதால் நமக்கு கூடுதல் பலம் கிடைக்கும். மாரத்தான் நடத்திய அனுபவம் மிக்க நண்பர் செல்வசிவகுருநாதன் ஒருங்கிணைப்பில் மாரத்தான் நிகழ்வு அர்த்தமுடன் முடியும் என எதிர்பார்க்கலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 09:44, 22 சூலை 2023 (UTC)
விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:56, 22 சூலை 2023 (UTC)
விருப்பம் -- சுந்தர் \பேச்சு 08:15, 25 சூலை 2023 (UTC)
விருப்பம் --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:08, 28 சூலை 2023 (UTC)
விருப்பம் -- ஸ்ரீதர். ஞா (✉) 14:31, 28 சூலை 2023 (UTC)
விருப்பம் -- மகாலிங்கம் இரெத்தினவேலு
அடுத்தக் கட்டம்
[தொகு]இதுவரை நடந்த உரையாடல்களின் அடிப்படையில், அடுத்தக் கட்டம் நோக்கி நகரலாம் எனக் கருதுகிறேன். அதன்பேரில், நிகழ்வுகளுக்கான நாட்கள் குறித்தான தற்போதைய முடிவு:
- செப்டம்பர் 30, 2023 - தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரத்தில் ஒரு நாள் நேரடி சந்திப்பு.
- அக்டோபர் 1, 2023 - இணையவழி மாரத்தான் நிகழ்வு
வேறு கருத்துகள் இருப்பின் தெரிவிக்கலாம். அவற்றையும் உரையாடலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:51, 30 சூலை 2023 (UTC)
- கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறித்து முடிவு செய்தல் நல்லது (விக்கிப்பயனர்கள் எத்தனை பேர், கல்லூரி மானவர்கள் மற்றும் பேராசிரியர்கள் எண்ணிக்கை). வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் இரு நாட்கள் நடத்தலாம்.ஸ்ரீதர். ஞா (✉) 15:13, 31 சூலை 2023 (UTC)
பரிந்துரைகளின் பட்டியல்
[தொகு]நேரடி சந்திப்பு குறித்தான எனது பரிந்துரைகளை இங்கு பட்டியலிட்டுள்ளேன். கூடுதல் பரிந்துரைகளை வரவேற்கிறோம். தொடர்ந்து பயனர்கள் இடும் கருத்துகள், நிதி, வாய்ப்பு, வசதிகள் இவற்றின் அடிப்படையில் இறுதி முடிவினை அடையலாம்.
பரிந்துரை குறியீட்டெண் | பரிந்துரை | குறிப்புகள் |
---|---|---|
1 | தெரிவு செய்யப்பட்ட நாளின் முதல் பகுதியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி தருதல். அந்நாளின் இரண்டாம் பகுதியில் விக்கிப் பயனர்கள் தமக்குள் கலந்துரையாடல்களை நிகழ்த்துதல். |
ஒரு நாளில் இரு வகையான நிகழ்வுகளை நடத்தும்போது, முழுமை பெறுமா? எனும் ஐயம் ஏற்படுகிறது. |
2 | முதல் நாளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி தருதல். அடுத்த நாளில் விக்கிப் பயனர்கள் தமக்குள் கலந்துரையாடல்களை நிகழ்த்துதல். (விக்கி மாரத்தானை அடுத்த வாரத்து ஞாயிற்றுக்கிழமை நடத்தலாம்) |
இரண்டு நிகழ்வுகளை அடுத்தடுத்த நாட்களில் நடத்துவதால், இரண்டும் முழுமை பெறும். ஆனால், நிதித் தேவை அதிகரிக்கும். |
3 | தெரிவு செய்யப்பட்ட நாளில் காலை முதல் மாலை வரை, விக்கிப் பயனர்கள் தமக்குள் கலந்துரையாடல்களை நிகழ்த்துதல். | சந்திப்பு முழுமை பெற்ற நிறைவு ஏற்படும். |
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:01, 31 சூலை 2023 (UTC)
நேரடி நிகழ்வு குறித்தான உரையாடல்களின் தொடர்ச்சி
[தொகு]மேற்கொண்டு, இங்கு உரையாடுவோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:34, 5 ஆகத்து 2023 (UTC)
நிகழ்விற்கான நாளினை முடிவு செய்தல்
[தொகு]செப்டம்பர் 23 அன்று கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை, செப்டம்பர் 24 அன்று தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு ஆகியவற்றை நடத்துவதாக முடிவாகியுள்ளது. எனவே மாரத்தான் நிகழ்வை அக்டோபர் 1 அல்லது அக்டோபர் 8 அன்று நடத்தலாம் என்பது எனது பரிந்துரையாகும். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:41, 13 ஆகத்து 2023 (UTC)
செப்டம்பர் 23 அன்று கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை, செப்டம்பர் 24 அன்று தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு ஆகியன உறுதியாகியுள்ளன; அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்த நாள் அன்று 'இணையவழி விக்கி மாரத்தான்' நிகழ்வினை நடத்துதல், இந்த இயக்கத்திற்குப் பெருமை சேர்க்கும் எனக் கருதுகிறேன். எனவே செப்டம்பர் 30 (சனிக்கிழமை) அன்று விக்கி மாரத்தான் 2023 நடத்திடப் பரிந்துரைக்கிறேன். பயனர்களின் கருத்துகளின் அடிப்படையில் நிகழ்விற்கான நாளினை முடிவு செய்வோம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:13, 8 செப்டம்பர் 2023 (UTC)
- ஆதரவு - செப்டம்பர் 30 அல்லது அக்டோபர் 1 இரண்டு நாட்களில் எதுவாயினும் கலந்துகொள்ள இயலும். --சிவகோசரன் (பேச்சு) 10:18, 9 செப்டம்பர் 2023 (UTC)
- ஆதரவு--Balu1967 (பேச்சு) 10:24, 9 செப்டம்பர் 2023 (UTC)
- ஆதரவு-- ஸ்ரீதர். ஞா (✉) 13:30, 9 செப்டம்பர் 2023 (UTC)
- ஆதரவு--மகாலிங்கம் இரெத்தினவேலு
- கலந்து கொள்வேன் --த♥உழவன் (உரை) 05:59, 11 செப்டம்பர் 2023 (UTC)
- ஆதரவு--கு. அருளரசன் (பேச்சு) 11:10, 11 செப்டம்பர் 2023 (UTC)
நிகழ்வு நாளை இறுதிசெய்ய உதவியவர்களுக்கு நன்றி! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:17, 17 செப்டம்பர் 2023 (UTC)
பேச்சுக் கட்டுரைகள் உருவாக்க பரிந்துரைக
[தொகு]நான் தமிழ் விக்கி மாரத்தானில் பேச்சுக் கட்டுரைகளை (Spoken Wikipedia) உருவாக்க திட்டமிட்டு உள்ளேன். ஆதலால் நீங்கள் எனக்கு பேச்சு கட்டுரைகளாக உருவாக்க விக்கிப்பீடிய ட்டுரைகளை இங்கே அல்லது எனது பயனர் பேச்சு பக்கத்தில் பரிந்துரைக்கலாம். நன்றி மாரத்தான் துவங்குவதற்கு முன்பே பேச்சுக் கட்டுரைகளை உருவாக்க ஏழு நாட்கள் முன்பே தொடங்கி விடுவேன் :) மீண்டும் நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 16:34, 20 செப்டம்பர் 2023 (UTC)
- விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2023/பேச்சுக் கட்டுரைகள். வாழ்த்துகள்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:06, 25 செப்டம்பர் 2023 (UTC)
பயனர்களின் விருப்பம்/ இலக்கு/ திட்டம்
[தொகு]- (அ). 5 புதிய கட்டுரைகளை முழுமையாக எழுதி முடித்தல். ஆயிற்று (ஆ). மாரத்தான் நிகழ்வை நெறிப்படுத்தும் பணி. ஆயிற்று (இ). புதிய பயனர் ஒருவருக்கு நேரடிப் பயிற்சி. ஆயிற்று (ஈ). பங்களிக்கத் தொடங்கியிருக்கும் பயனர் ஒருவருக்கு, Google Meet வழியாக நுணுக்கங்களைக் கற்றுத் தருதல். ஆயிற்று - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:11, 25 செப்டம்பர் 2023 (UTC)
- 10 கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்தல் மற்றும் சுமார் 50 பக்கங்கள் கொண்ட ஒரு நூலினை மெய்ப்புப்பார்த்தல்--Balu1967 (பேச்சு) 03:34, 27 செப்டம்பர் 2023 (UTC)
- தொகுக்க உத்தேசித்துள்ள தலைப்புகள்
- ஹென்றிக் ஆண்டர்சன் (Henrik Andersen (musician))
- குன்வர் திர் (Kunwar Dhir)
- கடவுள் கோயில் (Kadavul Temple)
- பிந்தாரா, குசராத்து (Pindara, Gujarat)
- அபரந்தா (Aparanta)
- ஆர். பி. தீங்தோ (R. P. Diengdoh)
- முதலாம் உதய்சிங் (Udai Singh I)
- புனர்வசு (Punarvasu)
- ராஜா பிரதாப் சிங் (Raja Pratap Singh)
- இரண்டாம் அமர்சிங் (Amar Singh II)
- (டி. ஆர். சுப்ரமணியம் (T. R. Subramaniam)
- சௌராஷ்டிர மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு (Tirukkural translations into Saurashtra)
கட்டுரைகள் உருவாக்க பரிந்துரைக
[தொகு]விக்கிமாராத்தான் 2023 நிகழ்வில் கலந்துகொண்டு குறைந்தது பத்து கட்டுரைகள் எழுத திட்டமிட்டுள்ளேன். உருவாக்க வேண்டிய கட்டுரைகள் மற்றும் பிறமொழியில் உள்ள தமிழுக்கு தேவையான கட்டுரைகளை பட்டியலிட்டால், உருவாக்க வசதியாக இருக்கும்.
அதைப்போல துப்புரவு செய்யவேண்டிய கட்டுரைகள் தனியாக பட்டியலிட்டாலும் நலம்.
நன்றி
பிரயாணி (பேச்சு) 08:49, 27 செப்டம்பர் 2023 (UTC)
- தாங்கள் யார்? கையெழுத்திடவில்லை. --கி.மூர்த்தி (பேச்சு) 03:31, 27 செப்டம்பர் 2023 (UTC)
மன்னிக்கவும், கையெழுத்திட்டுவிட்டேன் --பிரயாணி (பேச்சு) 08:49, 27 செப்டம்பர் 2023 (UTC)
- @பிரயாணி: திட்டப் பக்கத்தில் இருக்கும் பரிந்துரைக்கப்படும் வழமையான தொகுப்புகள், செம்மைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு உதவக்கூடும். விக்கிப்பீடியா:மேம்பாடு எனும் பக்கத்திலுள்ள பணிகள் பட்டியலும் உங்களுக்கு உதவும். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:20, 27 செப்டம்பர் 2023 (UTC)
நன்றி --பிரயாணி (பேச்சு) 08:49, 27 செப்டம்பர் 2023 (UTC)
- 1.கணிப்பிய வேதியியல்
- 2.எழுத்தாளர்கள்
- 3.அரசியல்வாதிகள்
- 4.பழங்கால இந்தியா
- இந்தப் பக்கங்கள் தங்களுக்கு உதவும். இந்தக் கட்டுரைகள் புதிய பயனர்களுக்கு இலகுவாக இருக்கலாம்.
- @Selvasivagurunathan m@கி.மூர்த்தி இது போன்று வேறு துறைகள் தேவை எனில் கூறவும். நன்றி. -- ஸ்ரீதர். ஞா (✉) 13:01, 27 செப்டம்பர் 2023 (UTC)
செயல்பாடுகள் அளவீடு
[தொகு]இன்று செய்யப்படும் (எத்தனை புதிய கட்டுரைகள், மேற்கோள்கள், பகுப்புகள், மாற்றப்பட்ட கட்டுரைகள்) போன்ற விக்கி செயல்பாடுகளை அறிந்து கொள்ள கருவிகள் ஏதேனும் உள்ளதா??
- @பிரயாணி: இங்கு காணுங்கள்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2023/புள்ளிவிவரம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:01, 30 செப்டம்பர் 2023 (UTC)
- @பிரயாணி: திட்டப் பக்கத்தில் விளக்கப்படங்கள் இடப்பட்டுள்ளன. தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:20, 30 செப்டம்பர் 2023 (UTC)