உள்ளடக்கத்துக்குச் செல்

மூலசார

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலசார
தகவல்கள்
சமயம்சமணம்
நூலாசிரியர்ஆசார்ய வட்டகேர
மொழிபிராகிருதம்
காலம்கி.பி. 150
பகுதிகள்12
வரிகள்1243

மூலசார (Mūlacāra) (அடிப்படை நடத்தை) என்பது திகம்பரப் பிரிவைச் சேர்ந்த ஆசார்ய வட்டகேர[1] என்பவரால் கி.பி. 150 அளவில் எழுதப்பட்ட சமண நூலாகும்.[2][3] மூலசார, அநகார-தர்ம எனப்படும் திகம்பரத் துறவியின் நடத்தை நெறிமுறைகள் தொடர்பில் விளக்குகிறது.[4] இந்நூல் பன்னிரண்டு அத்தியாயங்களையும் 1,243 வரிகளையும் கொண்டு பிச்சையேற்கும் நடைமுறை தொடர்பில் விளக்குகிறது. இது திகம்பர ஆச்சாராங்க எனவும் அழைக்கப்படுகிறது.[5]

இந்நூல், அர்த்தமாகதி மொழியின் சாயலுடைய, எனினும் தனித்துவமுடைய ஒரு மொழியில் எழுதப்பட்டுள்ளது.[1] இவ் வட்டார வழக்கு திகம்பர சௌரசேனி (அல்லது சமண சௌரசேனி) என அழைக்கப்படுவதோடு, இம்மொழி பண்டைய மதுராப் பகுதியின் மொழியைப் பிரதிபலிப்பதாக இந்திய அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] கர்நாடகாவில் காணப்படும் மூலசார நூலின் பெரும்பாலான பண்புகள் சுவேதாம்பர நூல்களில் காணப்படும் துறவு நடத்தைமுறைகளை ஒத்துள்ளன.[1] மூலசாரத்தில் காணப்படும் சில வரிகள், சுவேதாம்பரப் பிரிவின் தசவைகாலிகவில் காணப்படும் வரிகளோடு பெருமளவில் ஒத்திருக்கின்றன. இதன் மூலம், திகம்பர மற்றும் சுவேதாம்பரப் பிரிவுகளிடையே நூல்மரபுகள் துவக்கத்தில் ஒன்றாக இருந்து பின்னர் பிளவுபட்டுப் பிரிந்ததாகவே கருத முடிகிறது.[1][6]

வசுநந்தி, மூலசார நூலுக்கு சமசுகிருதத்தில் உரையெழுதியுள்ளார். இதற்கு ஆசாரவிருத்தி எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.[6]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Dundas 2002, ப. 80.
  2. Jaini 1991, ப. 47.
  3. Bhakti in the Early Jain Tradition: Understanding Devotional Religion in South Asia, John E. Cort , History of Religions, Vol. 42, No. 1 (Aug., 2002), pp. 59-86
  4. Mulachara Ka Samikshatmaka Adhyayana; Premi, Phulchand Jain, 1987
  5. Jaini 1998, ப. 79.
  6. 6.0 6.1 A.M. Ghatage (1954). Bulletin of the Deccan College Post-Graduate and Research Institute, Volume 16. Deccan College Postgraduate and Research Institute. pp. 36–37.

நூற்பட்டியல்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]


வார்ப்புரு:Jainism-book-stub வார்ப்புரு:India-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலசார&oldid=3760394" இலிருந்து மீள்விக்கப்பட்டது