திருசுதிவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Use Indian English

திருசுதிவாதம்
தகவல்கள்
சமயம்சமணம்

திருசுதிவாதம் என்பது சமண சமயத்துக்குரிய தொலைந்து போன புனைவு நூலாகும். சுவேதாம்பர மரபின் படி, மகாவீரரால் வெளிப்படுத்தப்பட்டு கணாதரர் சுதர்மசுவாமியால் தொகுக்கப்பட்ட 12 சமண ஆகமங்களில் இறுதியானதாகும். திருசுதி வாதம் என்பது "கருத்துக்கள் பற்றிய வேறுபாடுகள்" எனப் பொருள்படும். இது தற்போது முழுவதுமாக இழக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்படும் பதினான்கு பூர்வங்கள் அலது முன்னைய அறிவு பற்றிய முழுமையான அறிவைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இதன் உள்ளடக்கங்கள் நந்தி மற்றும் சமவயங்க சூத்திரத்தில் மேற்கோள்காட்டப்பட்டும் விளக்கப்பட்டும் உள்ளன.

ஆகமத்தின் உள்ளடக்கத் தகவல்கள்[தொகு]

திருசுதிவாதம் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது. அவையாவன:

  1. பரிகர்மா
  2. சூத்திர
  3. பூர்வனயோக
  4. பூர்வகத
  5. சூலிகா

பரிகர்மா சமணக் கணிப்பு அறிவியலை உள்ளடக்கியுள்ளதோடு, சூத்திர பகுதி கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகள் பற்றிய விளக்கங்களைக் கொண்டுள்ளது. பூர்வனயோக பகுதியில் புராண விவரிப்புக்கள், சமய வாழ்க்கை வரலாறுகள் மற்றும் விளக்கமான கதைகள் இடம்பெற்றுள்ளன. பூர்வகத பதினான்கு துணைப்பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, சமணக் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள் பற்றிய விவரிப்புக்களை உள்ளடக்கியுள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவது போன்று, பூர்வங்கள் மகாவீரருக்கு முன்னரான, வாய்மொழி வடிவில் கடத்தப்பட்ட அறிவைக் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருசுதிவாதம்&oldid=3274629" இலிருந்து மீள்விக்கப்பட்டது