பில் சோல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில் சோல்ட்
2022 இல் சோல்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிலிப் டீன் சோல்ட்
பிறப்பு28 ஆகத்து 1996 (1996-08-28) (அகவை 27)
போடெல்விடான், டென்பிக்சயர், வேல்ஸ்
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை எதிர்ச்சுழல்
பங்குகுச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 262)8 சூலை 2021 எ. பாகிஸ்தான்
கடைசி ஒநாப6 மார்ச் 2023 எ. வங்காளதேசம்
ஒநாப சட்டை எண்61
இ20ப அறிமுகம் (தொப்பி 94)26 சனவரி 2022 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி இ20ப14 மார்ச் 2023 எ. வங்காளதேசம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–2021சசெக்சு (squad no. 28)
2018லாகூர் கலண்டர்ஸ் (squad no. 28)
2019–2021இஸ்லாமாபாத் யுனைட்டட் (squad no. 28)
2019பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ்
2019/20–2020/21அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் (squad no. 1)
2021–2022மன்செஸ்டர் ஒரிஜினல்ஸ்
2021Dambulla Giants
2022லாகூர் கலண்டர்ஸ் (squad no. 7)
2022-தற்போதுலங்காசயர் (squad no. 7)
2023–தற்போதுபிரிட்டோரியா கப்பிட்டல்ஸ்
2023–தற்போதுடெல்லி கேப்பிடல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது பஇ20 முத பஅ
ஆட்டங்கள் 10 11 47 24
ஓட்டங்கள் 406 235 2,532 863
மட்டையாட்ட சராசரி 52.71 23.50 33.31 39.22
100கள்/50கள் 1/2 0/2 5/14 2/4
அதியுயர் ஓட்டம் 122 88* 148 137*
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 7/1 61/1 6/0

பிலிப் டீன் சோல்ட் (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1996) ஒரு தொழில்முறைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்துக்காகவும் உள்நாட்டில் தற்போது லங்காசயர் கவுண்டி துடுப்பாட்டக் கழகத்திற்காகவும் விளையாடி வருகிறார். முன்பு சசெக்ஸ் அணிக்காகவும் விளையாடினார். முதன்மையாக ஒரு ஆக்ரோஷமான வலது கை தொடக்க மட்டையாளரான [1] அவர் சில சமயங்களில் குச்சக் காப்பிலும் ஈடுபடுவார். அரிதாக வலது கை நடுத்தர வேகத்தில் பந்துவீசுவார். [2] சோல்ட் ஜூலை 2021 இல் இங்கிலாந்துக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். வேல்ஸில் பிறந்த அவர் தனது இளமைப் பருவத்தில் பார்படாஸுக்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் குடிபெயர்ந்தார். 2022 ஐசிசி இருபது20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் சோல்ட் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பில் சோல்ட் வேல்சில் உள்ள போடெல்விடானில் பிறந்தார். அவர் செயின்ட் அசாப்பில் துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார். அவர் 11 வயதுக்குட்பட்ட வடகிழக்கு வேல்ஸ் அணிக்காக விளையாடினார்.[3] அவர் செஸ்டரில் உள்ள பள்ளியில் பயின்றார். அவருக்கு 10 வயதாக இருந்தபோது அவரது குடும்பம் பார்படாசுக்குக் குடிபெயர்ந்தது. அவர் பார்படாஸ் வதிவிடத் தேவையைப் பூர்த்தி செய்ததனால் இங்கிலாந்து அல்லது மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடத் தகுதி பெற்றார். [4] பார்படாசில் இருந்தபோது அவர் எதிர்கால சசெக்ஸ் மற்றும் இங்கிலாந்து சக வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சருடன் விளையாடினார். [5] சோல்ட் தனது 15வது வயதில் ஐக்கிய இராச்சியம் திரும்பினார். [5]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

2013 இல், சோல்ட் கில்ட்ஃபோர்ட் துடுப்பாட்டக் கழகத்திற்காக விளையாடினார். [6] 2014 பருவகாலத்துக்காக சசெக்ஸ் அகாடமியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [7] அங்கு சோல்ட் இரண்டாவது XI போட்டிகளில் விளையாடினார். அதே போல் 2014 சசெக்ஸ் துடுப்பாட்ட லீக் பிரீமியர் பிரிவில் சசெக்ஸ் கிரிக்கெட் வாரிய அபிவிருத்தி அணிக்காகவும் பிரைட்டன் அன்ட் ஹோவ் அணிக்காகவும் விளையாடினார்.[8] சசெக்ஸ் பிரீமியர் லீக்கில், ஹார்ஷாமுக்கு எதிரான போட்டியில் சோல்ட் 129 பந்துகளில் 200 * ஓட்டங்கள் எடுத்ததுடன் பிரஸ்டன் நோமட்ஸ் அணிக்கு எதிராக 147* ஓட்டங்கள் எடுத்தார். மேலும் லீக் வெற்றியாளர் ரோஃபிக்கு எதிராக 33 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார். ஆகஸ்ட் 2014 இல், அவருக்கு மாதத்தின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டது. [9] [10]

10 செப்டம்பர் 2019 அன்று, 2019-20 பிக் பாஷ் லீக் தொடருக்கான அவர்களின் வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக சோல்ட் ஒப்பந்தம் செய்தார். [11]

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சோல்ட் 2021 கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் தொடக்கத்தைத் தவறவிட்டார். [12] சோல்ட் 2022 தொடருக்காக சசெக்ஸில் இருந்து லங்காஷயர் சிசிசிக்கு மாறினார். [13] ஏப்ரல் 2022 இல், நூறு துடுப்பாட்டத் தொடர் 2022 தொடருக்காக அவர் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸால் வாங்கப்பட்டார். [14]

23 டிசம்பர் 2022 அன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக 20 மில்லியன் ரூபாய்க்கு (2 கோடி, 200,000 பவுண்டுகள்) டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார் [15]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

மே 2019 இல், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டிக்கான இங்கிலாந்தின் பன்னாட்டு இருபது20 அணியில் காயமடைந்த டேவிட் மலனுக்குப் பதிலாக சோல்ட் சேர்க்கப்பட்டார், ஆனால் விளையாடவில்லை. [16]

ஜூலை 2021 இல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்தின் ஒருநாள் சுற்றுப்பயணத்திற்காக முதலில் தெரிவுசெய்யப்பட்ட அணி கோவிட் 19 சோதனைகளைத் தொடர்ந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, [17] அணியில் சோல்ட் பெயரிடப்பட்டார். [18] சோல்ட் தனது ஒருநாள் அறிமுகப் போட்டியில் 8 ஜூலை 2021 அன்று இங்கிலாந்துக்காக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். [19] டிசம்பர் 2021 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்தின் பன்னாட்டு இருபது20 அணியில் சோல்ட் இடம்பிடித்தார். [20] அவர் தனது பன்னாட்டு இருபது20 அறிமுகப் போட்டியை 26 ஜனவரி 2022 அன்று இங்கிலாந்துக்காக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடினார். [21]

ஜூன் 2022 இல், நெதர்லாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில், சோல்ட் 122 ஓட்டங்களுடன் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார். [22] போட்டியின் போது, இங்கிலாந்து 498 ஓட்டங்களை எடுத்தது, இது ஒருநாள் மற்றும் பட்டியல்-அ போட்டிகள் வரலாற்றில் அதிகபட்ச அணி ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது. டேவிட் மாலன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோருடன் அந்தப் போட்டியில் சதம் அடித்த மூவரில் சோல்ட் ஒருவராவார். [23]

13 நவம்பர் 2022 அன்று, 2022 இருபது20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் சோல்ட் விளையாடினார். அவர் அந்தத் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இரண்டிலும் விளையாடினார். [24]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sattar, Samshad. "Wright charged with rousing Sussex spirits". World Times 24. Archived from the original on 7 April 2016. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
  2. "Philip Salt". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
  3. "England hopeful Salt opens up on Welsh roots". BBC Sport. https://www.bbc.com/sport/cricket/53084487. 
  4. "'My job is to get the boys off to a flier' - Phil Salt quickly takes to life with England". ESPNcricinfo. 11 July 2021. பார்க்கப்பட்ட நாள் 11 July 2021.
  5. 5.0 5.1 "Phil Salt: From Barbados to England via T20 finishing school". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
  6. Spiller, Richard (9 September 2013). "Weybridge CC's Premier Division title dream wrecked". getsurrey. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
  7. "Sussex reveal academy players". Archived from the original on 21 April 2016. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
  8. "Sussex Premier League Matches Played By Philip Salt". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 19 April 2016.
  9. "Horsham CC – 1st XI Vs Sussex Cricket Board – Development XI". Horsham Cricket Club. 3 August 2014. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
  10. "JUNIORS: Academy batsman Salt wins Travel Places Player of the Month". Archived from the original on 21 April 2016. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
  11. "Strikers complete squad, with added Salt". Adelaide Strikers. 10 September 2019. https://www.adelaidestrikers.com.au/news/strikers-complete-squad-with-added-salt/2019-09-10. 
  12. "Sussex to be without Phil Salt until the end of May because of broken foot". The Cricketer. 15 April 2021. பார்க்கப்பட்ட நாள் 14 May 2021.
  13. "Chris Jordan and Phil Salt: Surrey & Lancashire to sign Sussex pair for 2022". 27 August 2021. https://www.bbc.co.uk/sport/cricket/58347869. 
  14. "The Hundred 2022: latest squads as Draft picks revealed". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 5 April 2022.
  15. Quint, The (23 December 2022). "IPL Auction 2023: Phil Salt Sold To Delhi Capitals for Rs 2 Crore". TheQuint. https://www.thequint.com/indian-premier-league-ipl/ipl-auction-2023-phil-salt-sold-to-delhi-capitals-for-rs-2-crore. 
  16. "Phil Salt replaces injured Dawid Malan in England T20 squad". BBC Sport. 4 May 2019. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  17. "Ben Stokes to captain England against Pakistan after seven members in bio-bubble test positive for COVID-19". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 6 July 2021.
  18. "England Men announce new squad for Royal London Series against Pakistan". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 6 July 2021.
  19. "1st ODI (D/N), Cardiff, Jul 8 2021, Pakistan tour of England". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  20. "England Men name squad for West Indies IT20s". England and Wales Cricket Board. https://www.ecb.co.uk/england/men/news/2426070/england-men-name-squad-for-west-indies-it20s. 
  21. "3rd T20I (D/N), Bridgetown, Jan 26 2022, England tour of West Indies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 January 2022.
  22. "Destructive England smash ODI world record against the Netherlands with three centuries in punishing innings". Evening Standard. பார்க்கப்பட்ட நாள் 17 June 2022.
  23. "Full Scorecard of England vs Netherlands 1st ODI 2022 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 June 2022.
  24. "Philip Salt". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016."Philip Salt". CricketArchive. Retrieved 12 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_சோல்ட்&oldid=3771623" இலிருந்து மீள்விக்கப்பட்டது