பின்னமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பின்னமங்கலம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

பின்னமங்கலம் ( Binnamangalam ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த, [1] தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 68 கி.மீ. தொலைவிலும், தளியில் இருந்து 9 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 329 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தெடர்வண்டி நிலையமாகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்த கிராமத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊரில் 590 வீடுகளும், மொத்த மக்கள் தொகையானது 2463 ஆக உள்ளது. இதில் பெண்கள் விகிதம் 49.4% என்றும், எழுத்தறிவு விகிதம் 57.8% ஆகும், இதில் பெண்களின் எழுத்தறிவு விகிதமானது 25.2% என்று உள்ளது.[2]

குறிப்பு[தொகு]

  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Binnamangalam". அறிமுகம். onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னமங்கலம்&oldid=3563793" இலிருந்து மீள்விக்கப்பட்டது