உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Njaanam

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Njaanam, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran 04:44, 8 ஏப்ரல் 2006 (UTC)

வாருங்கள் ஞானவெட்டியான் ஐயா அவர்களே:

இந்த தகவலை வாசித்தால், எதாவது பதில் இங்கு இடுங்களேன். --Natkeeran 04:55, 8 ஏப்ரல் 2006 (UTC)

குறிப்பு

[தொகு]

சமுதாய வலை வாசலில் நீங்கள் இட்டிருந்த கட்டுரைப் பகுதிகளை தற்போதைக்கு இங்கு வெட்டி ஒட்டுகிறேன். வலை வாசல் பயனர்களுக்கு ஒரு வழிகாட்டு பக்கம் மட்டுமே. எப்படி கட்டுரைப் பக்கம் உருவாக்குவது என்பது அறிய இந்த உதவிப் பக்கத்தைப் பார்க்கவும். நன்றி.--ரவி 19:57, 13 ஏப்ரல் 2006 (UTC)


ஆரியர் வருகையின்பொழுது, தமிழினம் (திராவிட இனமல்ல)காட்டுமிராண்டிகளாக இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்ள இயலவில்லை.

ஆரியர் தொல்லகம் பற்றிச் சிறிது நோக்குவம்:

"ஆரிய வரணத்தின் தொல்லகம் ஆசியாவினின்று, பால்டிக் நாடுகளிலும் காண்டினேவிய நாட்டிலுமே யிருந்தது. அங்கே ஆரிய மொழிகள் எழுந்தன.அவற்றைப்புழங்கிய உயரமான நீலக்கண்ணும் வெளுத்த முடியும் வாலமுகமுங்கொண்ட மக்கள், அங்குநின்றும் பரவினபோது, அம்மொழிகளும் அவர்களுடன் பரவின. அவர்கள் மணக்கலப்பாலேயே, தங்கட்கு இனமாகவும் அயலாகவுமுள்ள மக்கள்மேல், தங்கள் தலைமையையும் மொழிகளையும் ஏற்றுவதில் வெற்றி பெற்றார்கள். இந்தியாவிலும் ஐரானிலும் உள்ள கீழையாரியர், ஆரிய வரணத்தின் கடைசியும் மிகச் சேய்மையுமான கிளையினராவார். அவர்கள் பெரிய ஆற்றொழுக்கங்களைப் பின்பற்றி வந்து, கடைசியில் பஞ்சாப்பில் தங்கினார்கள்." என முதலாம் லதாம்(LATHAAM) விளக்குகிறார். இதை,POESCHE யும் PENKAவும் ஒத்துக் கொள்கின்றனர். SAYCEம் எல்லாவற்றையும் முழுமையாக ஒப்புக்கொள்கிறார்.[Principles of Comparative Philosophy - Preface].

ஆரியர் இந்தியாவுக்குள் நுழையுமுன்பே, வட இந்தியர்கள் நல்ல நாகரீகத்தை அடைந்திருந்தனர். சர் ஜான் மார்ஷல் மொகஞ்சதாரோவைப் பற்றி குறிப்பிடுகையில்: "5000 ஆண்டுகட்கு முன்பு ஆரியப் பெயரையே கேள்விப்படுமுன்,இந்தியாவில், மற்றநாடுகளுமில்லாவிடினும், குறைந்தது பஞ்சாபும் சிந்தும் மிக முன்னேறியதும், இணையற்றபடி ஓரியலானதும், சமகால மெசபடோமிய எகிப்திய நாகரீகத்திற்கு மிகநெருங்கியதும், சில விடயங்களில் அதினும் சிறந்ததுமான ஒரு சொந்த நாகரீகத்தை நுகர்ந்துகொண்டிருந்தது......."

இது ஒருபுறமிருக்க. தமிழக எல்லை என்ன? "வடவேங்கடம் தென்குமரி - ஆயுடைத்

தமிழ்கூறும் நல்லுலகத்து" - பனம்பரனார்(தொல்காப்பியரின் உடன் மாணவர்)

ஆரியன் தமிழகத்துள் பெருங்கூட்டமாய் வராது, சிறு சிறு கூட்டமாய் பலமுறையாக வந்தனர். முதலாவது, காசியபன், விசிரவசு முதலியவர் தமித்துவந்து அசுரப்பெண்களை மணந்தனர். பின்பு தமிழ் கற்றுத் தமிழாசிரியராயும், பின்பு மதவாசிரியராயும் அமர்ந்தபின், தம் கூட்டத்தாரைத் தமிழரசர்களின் அனுமதியுடனே கூட்டங் கூட்டமாய் வரவழைத்துக் குடியேற்றினர். ஆக, ஆரியர் வருகைக்கு முன்னரே தமிழக மக்கள், கல்வி,கேல்வி,கலைகளிலுந்தேர்ந்திருந்தனர். ஆரியர் தமிழரிடமிருந்து தமிழையும்,நாகரீகத்தையும் கற்று அதைவைத்தே தமிழர்களை வீழ்த்தியுள்ளார்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆரியப் புலவர் குமட்டூர் கண்ணனாருக்குப் பரிசில் கொடுத்ததை, பதிற்றுப்பத்தில்(இரண்டாம் பத்தில்) கூறியவை விளக்கும். ஆரியர்கள் இங்கு வந்து தமிழ் கற்றுப் பாக்கள் இயற்றும்பொழுது தமிழன் அரசாண்டுள்ளான். ஆனால், எல்லோரையும் நம்பும் வெகுளித்தனத்தால் நம்பிக் கெட்டனர்.

இந்து சமயம், திராவிட சமயம் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. ஆரியர் முதலில் வந்திறங்கிய இடம் சிந்துநதி தீரம். சிந்து நாடென அழைத்தனர். பாரசீகர்கள், சகரத்தைத் தங்கள் வழக்கப்படி ஹகரமாக்கி, ஹிந்து நாடென்றனர். கிரேக்கர்கள் அதை இந்தியாகச் சிதைத்தனர். ஆங்கிலேயரோ,இந்தியாவாக்கிவிட்டனர். ஆக இந்து சமயம் என எப்படிக் கூறுவது?

தமிழரின் சமயம் மட்டுமே உள்ளது. காலவழக்கில் தங்களின் போக்குக்கு ஏற்றார்போல் வளைக்கப் பட்டுவிட்டது. மொழியாராய்ச்சிக்குச் செல்வதால் காலம்தான் வீணாகும். இருந்ததும் இருப்பதும் தமிழ்ச் சமயமே.

நமக்குத் தேவை:

தமிழ்ச் சமயம் இருந்தது.இருக்கின்றது.

அது பிளவுபட்டு 6 அகச்சமயங்களாகவும், 6 புறச்சமயங்களாகவும் இருக்கிறது. மொகஞ்சதாரோ, ஹாரப்பா நாகரீகத்தொடு ஒத்திருப்பதால் சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் ஒற்றுமைகள் இருக்கலாம். மொழிக்கூற்றை அலசிப் பார்த்தால் விளங்கும். காலமில்லை. காலன் வந்துவிடுவான். அவனை எதிர்க்கும் வல்லபம் தேடவேண்டும். அதற்குக் காலம் மிகவும் அவசியம். அவனன்றி ஓர் அணுவுமசையாது; அவனே சர்வ வியாபி. அப்படி இருக்கையில், மந்திரமும் அவனுள்தான். மந்திரத்துக்குள் அவனில்லை. அவனைக் கட்ட மந்திரமும்,மந்திர சாத்திரங்களும் ஒரு கயிறு (சகாதேவன் கிருட்டிணனைக் கட்டிய கயிறு). அவனனனுமதியின்றி அக் கயிற்றால்கூட அவனைக் கட்டவியலாது. ஏதோ எனக்குத் தெரிந்தது. தவறிருப்பின் திருத்துக.

அன்பு, - ஞானவெட்டியான் - திண்டுக்கல்(தமிழகம்)

நன்று

[தொகு]

இன்று தான் உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள கட்டுரையை கண்டேன். சிந்தனையைத் தூண்டியது. நன்று--ரவி 09:13, 19 ஜூலை 2006 (UTC)

இன்று கலை என்னும் பகுதியில் இரு வாக்கியங்கள் இட்டுள்ளேன். பிறகு என்ன செய்வதென அறியேன். வழிகாட்டுங்கள்.

களப்பிரர்

[தொகு]
  • களப்பிரர் கட்டுரையில் நீங்கள் சுட்டிய கருத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் கலை கட்டுரையில் நீங்கள் இட்ட வாக்கியங்களை சேமிக்காமல் விட்டுவிட்டீர்களோ என்று எண்ண தோன்றுகின்றது. இங்கு எழுதுவது போன்றே மற்ற கட்டுரகளிலும் எழுதலாம். இதை வாசித்தீர்கள் என்றால், வாசித்தேன் என்றோ எப்படியோ தெரியப்படுத்தனால் நன்று. --Natkeeran 18:43, 9 மார்ச் 2007 (UTC)
ஞானவெட்டியான் அவர்களுக்கு, நீங்கள் களப்பிரர் கட்டுரையில் தந்த குறிப்புகளை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். இது பற்றி அங்கு கலந்துரையாடுங்கள். கட்டுரையில் சிறு திருத்தங்கள் செய்ய வேண்டுமென்றாலோ வேறு தகவல்கள் சேர்க்க வேண்டுமென்றாலோ கட்டுரையில் நீங்களே அத்திருத்தங்களைச் செய்யலாம். நன்றி.--Kanags 21:56, 9 மார்ச் 2007 (UTC)

அன்பு நக்கீரன், kanags, மிக்க நன்றி.

ஞானவெட்டியார் அண்ணா, நீங்கள் மீண்டும் விக்கிப்பீடியாவிற்கு வந்தது மகிழ்ச்சி. ஏதாவது தேவையென்றால் தயவு செய்து தயங்காமல் உங்கள் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். அப்படியே முடியுமென்றால் உங்கள் தொலைபேசி இலக்கம் மற்றும் தொடர்புகொள்ளப் பொருத்தமான நேரம் போன்றவற்றைக் குறிப்பிட்டால் நல்லது. --Umapathy 07:45, 10 மார்ச் 2007 (UTC)

அன்பு உமாபதி, என் தொலைபேசி எண்: 0451-2436844 நேரம்: காலை 10 மணி முதல் 1 மணி வரை - மாலை 4.30 முதல் 8 மணி வரை

நன்றி ஞானவெட்டியான் அண்ணா, உங்களுடன் இன்றுதான் உரையாட முடிந்தது. --Umapathy 16:25, 13 மார்ச் 2007 (UTC)

மிக்க நன்றி உமாபதி. தொலைவிலிருந்து தொலைபேசி மூலம் உரையாடியதற்கு நன்றி.--ஞானவெட்டியான் 16:51, 13 மார்ச் 2007 (UTC)

இதை எத்தலைப்பில் இடவேண்டுமென அறியாததால் இங்கு இட்டுள்ளேன். "இந்து சமயம் என ஒன்று இருந்தது" என்பதில் உடன்பாடு இல்லை. இந்து சமயம், திராவிட சமயம் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. ஆரியர் முதலில் வந்திறங்கிய இடம் சிந்துநதி தீரம். சிந்து நாடென அழைத்தனர்.

பாரசீகர்கள், சகரத்தைத் தங்கள் வழக்கப்படி ஹகரமாக்கி,ஹிந்து நாடென்றனர். கிரேக்கர்கள் அதை இந்தியாகச் சிதைத்தனர். ஆங்கிலேயரோ, இந்தியாவாக்கிவிட்டனர். ஆக இந்து சமயம் என எப்படிக் கூறுவது? வட இந்தியாவில் இருந்த சமயங்களை ஒன்று சேர்த்து, இந்து சமயம் என்றனர். தமிழகத்தில், தமிழரின் சமயம் மட்டுமே இருந்தது; உள்ளது. காலவழக்கில் தங்களின் போக்குக்கு ஏற்றார்போல் வளைக்கப் பட்டுவிட்டது. மொழியாராய்ச்சிக்குச் செல்வதால் காலம்தான் வீணாகும். இருந்ததும் இருப்பதும் தமிழ்ச் சமயமே.

நமக்குத் தேவை:

தமிழ்ச் சமயம் இருந்தது. இருக்கின்றது. அது பிளவுபட்டு 6 அகச்சமயங்களாகவும், 6 புறச்சமயங்களாகவும் இருக்கிறது. அகச்சமயங்கள் : சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம். புறச்சமயங்கள் : உலோகாதயம், பெளத்தம், ஆருகதம், மீமாஞ்சம், மாயாவாதம், பாஞ்சராத்திரம்.

அத்துடன் சோதிடம் என்னும் தலைப்பில் முன்னுரை தந்துள்ளேன். கண்டு ஆவன செய்தால் நலம்.

சிறு குறிப்புகள்

[தொகு]

உங்கள் தொடர்புத் தகவல்கள் தந்ததற்கு நன்றி. நானும் ஒரு நாள் அழைக்கிறேன். உங்களுக்கு நுட்ப வகையில் இருந்தால் தெளிவுபடுத்த மகிழ்வேன். பேச்சுப் பக்கங்களில் உள்ள எழுத்துப் பிழைகளை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் சிரமமெடுத்து திருத்தத் தேவையில்லை. ஆனால்,கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளை நீங்கள் திருத்துவது மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் கட்டுரை நடை குறித்த விரிவான சில குறிப்புகளையும் பின்னர் தருகிறேன். பொதுவாக, உங்கள் துறை குறித்த பின்புலம் இல்லாதவர்க்கும் புரியுமாறு சிறுகச் சிறுக கட்டுரையின் complexityஐ அதிகரிக்க வேண்டும். வலைப்பதிவில் எழுதுவது போன்ற எழுத்து நடை இதற்கு போதாததாக இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, ஞானம் கட்டுரை எனக்கு புரியவில்லை. அதை எளியவருக்கும் புரியும்படி அடிப்படையாக, எளிமையாக விளக்கலாம் என்பது குறித்து நீங்கள் யோசித்து மாற்றங்களை செய்யலாம். நன்றி.--Ravidreams 20:12, 10 மார்ச் 2007 (UTC)

அன்பு இரவி, எளிமையாய்த் தானே உள்ளது. யோகம், ஞானம் ஆகியவை கொஞ்சம் கரடு முரடாகத்தான் இருக்கும். எப்படி எழுதுவது என்று வழிகாட்டுங்கள். -பயனர்:Njaanam

விக்கிப்பீடியா நடையை ஏனைய கட்டுரைகளைப் பார்வையிடுவதன்மூலம் புரிந்து கொள்வது இலகுவாக இருக்கும் என்றே நினைக்கிறேன். குறிப்பாக மயூரநாதன் போன்றோர் எழுதும் கட்டுரைகள் நல்ல கலைக்களஞ்சிய நடையில் உள்ளன. [1] அண்மைய மாற்றங்கள் பக்கத்தைத் தொடர்ந்து பார்வையிட்டு வாருங்கள். உங்களுக்குப் பரிச்சயமான தலைப்பிலுள்ள கட்டுரைகளில் சிறியதாகப் பங்களிக்கத் தொடங்குவது பெரிய கட்டுரைகளைச் சிறப்பாக ஆக்க உதவலாம். நன்றி. --கோபி 14:40, 11 மார்ச் 2007 (UTC)

கையொப்பமிட

[தொகு]

பேச்சுப் பக்கங்களில் கையொப்பமிட ~~~~ என்ற குறியீட்டை பயன்படுத்துங்கள். அல்லது மேலே வலமிருந்து இரண்டாவதாக உள்ள கையொப்பக் குறியீட்டை அழுத்தலாம். நன்றி. --கோபி 14:36, 11 மார்ச் 2007 (UTC)

மேலும் கட்டுரைப்பக்கத்தில் பயனர் பெயர், கையொப்பம் இடுவது வழக்கமில்லை. பேச்சுப்பக்கங்களில் மட்டுமே கையொப்பமிடுவது வழக்கமாகும். நன்றி. --கோபி 14:44, 11 மார்ச் 2007 (UTC)

வழிகாட்டலுக்கு நன்றி --ஞானவெட்டியான் 15:08, 11 மார்ச் 2007 (UTC)

கலைக்களஞ்சியக் குறுங்கட்டுரைகளும், கட்டுரைகளும்

[தொகு]

ஞானவெட்டியான் அவர்களே, வணக்கம். த.விக்கு உங்கள் வருகை உவகை அளிக்கின்றது. நீங்கள் அரும் பணி ஆற்றி பல கட்டுரைகள் எழுதி த.விக்கு வளம் சேர்க்க முடியும் என நம்புகிறேன். ஆனால், கலைக்களஞ்சியத்தின் நோக்கமும், நடையும், எழுத வேண்டிய முறையையும் தாங்கள் நன்கறிந்து போற்ற வேண்டும் என்று வேண்டுகிறேன். வலைப்பதிவுகளுக்கும், கலைக்கலஞ்சிய கட்டுரைகளுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. கலைக்கலஞ்சிய கட்டுரைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள், பெரியசாமித்தூரன் அவர்கள் தலைமையில் உருவான 10-தொகுதி கொண்ட தமிழ்க் கலைக்களஞ்சியம். அது கிடைக்கவில்லை என்றால், எந்த ஆங்கில கலைக்களஞ்சியத்தையும் தாங்கள் பார்க்கலாம். எழுதும் கருத்தும் நடையும், நடுநிலையோடு, உறுதி செய்யப்பட்டு உண்மை என்று நிறுவப்பட்டனனவாக இருத்தல் வேண்டும். ஒன்று வெறும் நம்பிக்கை என்றால், அது நம்பிக்கை என்றே குறிப்பிடல் வேண்டும். கொடுக்கப்பட்ட தகவல்களுக்குக் கூடியமட்டிலும் தக்க ஆதாரங்கள் இருத்தல் வேண்டும். கட்டுரைகள் எழுதப்படும் பொழுது, அதனைப்படிப்பவருக்கு அத் தலைப்பைப்பற்றி முன்பின் அறியாதிருந்தவராயினும், அவரை முறைப்படி வழிநடத்தி கட்டுரையின் பொருளை புரியும் படியாக செய்ய வேண்டுவது கட்டுரையின் நோக்கமாக இருத்தல் வேண்டும். சோதிடம், நாடி, மெய்யியல், பக்தி, வழிபாடு, யோகா, யாகம் முதலிய எதுவாயினும் அவை பற்றி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில், பொதுமையாக எழுதப்படல் வேண்டும். இவை அனைத்தும் தாங்கள் சிறப்பகாக செய்ய்க்கூடும். மீண்டும் உங்களை மற்ற பயனர்களுடன் சேர்ந்து நான் வரவேற்கிறேன்.--செல்வா 15:37, 11 மார்ச் 2007 (UTC)

அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். ஒரு சிறு தன்னிலை விளக்கம். எனக்கு சாதி சமய வேறுபாடு, விருப்பு வெறுப்பு, வேண்டிய மொழி வேண்டாத மொழி என்னும் மனநிலை கிடையாது. விக்கிக்கு புதிதாகையால் என்ன செய்வதென அறியாது விழித்துக்கொண்டுள்ளேன். அத்துடன் எனக்குத் தெரிந்தவைகளை என்னாலியன்றவரை எளிமைப்படுத்தித் தர முயலுகிறேன். ஞானம், நாடி, பஞ்ச பட்சி சாத்திரம், சோதிடம் ஆகியவைகளில் இருக்கும் சொல்லாட்சி சற்றே மிரள வைக்கத்தான் செய்யும். (எடுத்துக்)காட்டாக, சாலோகம் என்பதை எப்படி எளிமைப்படுத்த இயலும்?

தமிழ் - கட்டுரையைப் படித்தபின் சில திருத்தங்களையும், மேலதிக விவரங்களையும் சில இடங்களில் இட்டுள்ளேன். சரியோ தவறோ நானறியேன். தவறாக இருப்பின் பொறுத்தருள்க.

ஞானவெட்டியான் அவர்களே, உங்கள் நடுநிலைத் தன்மையில் எங்களுக்கு ஒரு வித ஐயமும் இல்லை. உங்கள் நடை தான் மிரள வைக்கிறது. என்னைப் போல் இத்துறையில் ஒன்றும் அறியாத பிள்ளைகள் உங்களிடம் வந்தால் இவ்வளவு உயர்ந்த நடையில் சொல்லித் தர மாட்டீர்கள் தானே? முதலில் எங்களுக்குப் புரிந்த சொற்களை கொண்டு விளக்கத் தொடங்கி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக துறைக்குள் கொண்டு செல்வீர்கள் தானே? அது போன்ற ஒரு நடை பின்பற்றினால் நன்று. அதற்காக, பாடமாக விளக்கும் நடையும் இல்லை. சிக்கலான பணி தான் புரிகிறது. ஆனால், இத்துறையில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டின் காரணமாக சிறப்பாக செய்வீர்கள் என்று நம்பகிறேன். உங்கள் வலைப்பதிவைப் பார்த்ததில் இருந்து இத்துறையில் உங்களுக்கு ஆங்கிலச் சிந்தனைகளும் பழக்கமாக இருக்கலாம் என்று நம்புகிறேன். ஞானம் என்பதை wisdom என்று சொல்லலாமா? wisdom , meditation ஆகிய ஆங்கில விக்கிக் கட்டுரைகளை பாருங்கள். அக்கட்டுரைகளை மொழிபெயர்க்கத் தேவை இல்லை. நம் மரபுக்கேற்ப புதிதாகத் தமிழிலேயே கட்டுரைகளை உருவாக்கலாம். ஆனால், ஆங்கில விக்கியில் இருந்து இந்த கலைகளஞ்சிய நடை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆங்கில விக்கியில் உள்ள சமயம், சோதிடம் சார் கட்டுரைகளை பார்த்தீர்கள் என்றால் கலைக்களஞ்சிய நடையில் எப்படி கட்டுரைகள் உருவாக்குவது என்று தெளிவாகும். நன்றி--Ravidreams 21:55, 11 மார்ச் 2007 (UTC)

சமயக் கட்டுரைகள்

[தொகு]

சமயக் கட்டுரைகள் எழுதுவதில் உள்ள் சிக்கல் புரிந்துகொள்ள கூடியது. இது உங்கள் நம்பிக்கை தொடர்புடையது. ஆ. வேலுப்பிள்ளை. (1985). தமிழர் சமய வரலாறு. சென்னை: பாரி புத்தகப்பண்ணை. என்ற நூலில் அறிவியல் நோக்கில் எப்படி சமயக் கட்டுரைகளை எழுதலாம் என்று மிகவும் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளது. அதன் பொழிப்பை விரைவில் த.வி சேர்க்கவுள்ளேன். இப்போதைக்கு பின்வரும் குறிப்புகளை பார்க்கவும்: பேச்சு:சமயக் கட்டுரைகள் எழுதல் கையேடு.

உங்களுக்கு மிகவும் ஈடுபாடன துறைகளில் ஒன்று சமயம். அதில் எந்த தலைப்பில் கட்டுரை இடவும், தகுந்த மாதிரி திருத்தவும் உங்களுக்கு சுதந்திரம் உண்டும். அத்தோடு, பிற துறைகளில் சில கட்டுரைகள் தந்தாலும் நன்று. மிகவும் எளிமையான தலைப்புகளில் கூட பல கட்டுரைகள் இனித்தான் இங்கு தொடங்கப்படவேண்டும்.

உங்களின் ஆர்வத்துக்கும், பங்களிப்புக்கும் நன்றி. தொடர வாழ்த்துக்கள். --Natkeeran 16:58, 11 மார்ச் 2007 (UTC)

அன்பு நண்பர்களே, உங்கள் அனைவரின் சொற்களும் எனக்கு ஊக்கமளிக்கின்றன. இன்று "சிவவாக்கியர்" கட்டுரையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். விக்கியின் தரக்கட்டுப்பாட்டிற்குள் அவை சரியாக வருமா? எனத் தெளிவுபடுத்துங்கள். என் நடையினை எளிதாக்க முயலுகிறேன். --ஞானவெட்டியான் 06:54, 12 மார்ச் 2007 (UTC)

சமயம் பற்றி விக்கிக்குள் நுழைந்த உடனே நான் கண்டது "இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் ஆதியான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று."

ஆனால் , என் கருத்து:"இந்து சமயம் என ஒன்று இருந்தது" என்பதில் உடன்பாடு இல்லை. இந்து சமயம், திராவிட சமயம் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. ஆரியர் முதலில் வந்திறங்கிய இடம் சிந்துநதி தீரம். சிந்து நாடென அழைத்தனர்.

பாரசீகர்கள், சகரத்தைத் தங்கள் வழக்கப்படி ஹகரமாக்கி,ஹிந்து நாடென்றனர். கிரேக்கர்கள் அதை இந்தியாகச் சிதைத்தனர். ஆங்கிலேயரோ, இந்தியாவாக்கிவிட்டனர். ஆக இந்து சமயம் என எப்படிக் கூறுவது? வட இந்தியாவில் இருந்த சமயங்களை ஒன்று சேர்த்து, இந்து சமயம் என்றனர். தமிழகத்தில், தமிழரின் சமயம் மட்டுமே இருந்தது; உள்ளது. காலவழக்கில் தங்களின் போக்குக்கு ஏற்றார்போல் வளைக்கப் பட்டுவிட்டது. மொழியாராய்ச்சிக்குச் செல்வதால் காலம்தான் வீணாகும். இருந்ததும் இருப்பதும் தமிழ்ச் சமயமே.

நமக்குத் தேவை:

சமயம் இருந்தது. இருக்கின்றது. அது பிளவுபட்டு 6 அகச்சமயங்களாகவும், 6 புறச்சமயங்களாகவும் இருக்கிறது. அகச்சமயங்கள் : சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம். புறச்சமயங்கள் : உலோகாதயம், பெளத்தம், ஆருகதம், மீமாஞ்சம், மாயாவாதம், பாஞ்சராத்திரம். இவைகளில் உள்ளவைகளில் சிலவற்றை ஒன்று திரட்டி "இந்து சமயம்" என்றாக்கி உள்ளனர். இதை உள்ளிடுவதா? வேண்டாமா?--ஞானவெட்டியான் 07:49, 12 மார்ச் 2007 (UTC)

உங்கள் குறிப்பில் உள்ள தகவல்களும் சேர்க்கப்பட வேண்டியவை. ஒரு விதத்தில் நல்ல திருத்தம். வரையறையை சற்று மாற்றி எழுதலாம். எ.கா: இந்தியாவில் மிகவும் ஆதியான காலம் முதல் இருந்த பல நம்பிக்கைகளும், பின்னர் வளர்ந்த வெளியிலுருந்து வந்து கலந்த நம்பிக்கைகள் அல்லது சமயங்களும் ஒருங்கே இணைந்து இந்து சமயம் எனப்படுகின்றது. மற்றைய தகவல்களையும் தகுந்த மாதிரிக்கு இணைக்கலாம். --Natkeeran 14:40, 12 மார்ச் 2007 (UTC)

எக்கருத்தாக இருந்தாலும் அது உறுதிப்படுத்திக்கொள்ளக்கூடிய கருத்தாக இருந்தால் மட்டுமே இடுங்கள். ஆனால், முறைப்படி ஆராயப்படாத வெறும் கருதுகோள்கள், பார்வைகள் ஆகியவற்றை சேர்க்க வேண்டாம். சமயம் சார்ந்த கட்டுரைகளில் உசாத்துணைகளுடன் (references) எழுதுவது அவசியம்--Ravidreams 15:34, 12 மார்ச் 2007 (UTC)

ஞான வழிகளுக்கு யாரும் விளக்கமாகப் பொத்தகம் எழுதவில்லை. உசாத்துணை வேண்டுமெனில் சித்தர் பாடல்களையும் திருமந்திரத்தையும் மட்டுமே அழைக்கவியலும். அதுவும் பாடல் வடிவில் இருப்பதால், அதில் சூக்குமக் கருத்துக்கள் மறைபட்டுள்ளன. அங்ஙனமிருக்கையில், ஞானம் யோகம் ஆகியவற்றிற்குக் கட்டுரை வடிப்பது எவ்வாறு? வழிகாட்டுங்கள். --ஞானவெட்டியான் 15:40, 13 மார்ச் 2007 (UTC)

ஞானம் என்பதற்கு ஒருவாறு இணையான wisdom என்பதைப் பற்றி ஆங்கில விக்கியில் எப்படி எழுதியுள்ளார்கள் என்று பார்கவும் - . அக்கட்டுரையும் போதிய அளவு மேற்கோள்கள், உறுதிபயக்கும் அடிக்கோள்கள் காட்டப்படவில்லை என்னும் முன்அறிவுப்புடன் தான் அங்கு உள்ளது. பொதுவாக கருத்துக்களை, முன்பு அது பற்றி அறியாதவர்கள் அறிந்து கொள்ளுமாறு பக்குவமாய், படிப்படியாய் விளக்கி சிறந்த கட்டுரை நடையில் எழுதப்படல் வேண்டும். கருத்துக்கள் கோர்வையாகவும், ஒன்றன் பின் ஒன்று வருவதில் ஏரண ஒழுக்கம் உடையதாகவும் இருத்தல் வேண்டும். பயனர் மயூரநாதன் அவர்கள் எழுதிய பல கட்டுரைகளைப் பார்த்து உணரலாம். --செல்வா 16:09, 14 மார்ச் 2007 (UTC)

ஆய்த எழுத்து

[தொகு]

நீங்கள் தமிழ் கட்டுரையில் ஆய்த எழுத்தைத் ஆயுத எழுத்து என்று மாற்றியது பற்றி, அங்கே பேச்சுப்பக்கத்தில் கீழ்க்காணும் குறிப்பை இட்டுள்ளேன். பார்க்கவும்:

ஞானவெட்டியான், ஆய்த எழுத்தை ஆயுத எழுத்து என மாற்றியுள்ளார். இது சரியில்லை. தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் இரண்டாவது நூற்பாவே, "அவைதாம், குற்றியலிகாரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன" என்று உள்ளது. ஆய்தம் என்பதை ஆயுதம் என்று எழுதினால் அடிப்படைப்பொருளே மாறுகின்றது. ஆய்தம் வேறு அயுதம் வேறு. மீண்டும் ஆய்தம் என்றே மாற்றுமாறு வேண்டுகிறேன். --செல்வா 13:00, 12 மார்ச் 2007 (UTC)

ஆம். தவறுதான். இதைக் கொத்திக்கொண்டிருக்கும்போதே என் கணினியின் தடையற்ற மின் சக்தி தருவான்(UPS புகைந்துவிட்டது. அது கைப்படி எடுத்ததில் தவறு. தப்பு தப்புதான். கணினி சரியானதும் மற்றிவிடுகிறேன்.

"குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே" - தொல்காப்பியம், எழுத்து அதிகாரம் , நூன்மரபு - 5. ஆயினும் " அஃகேனம் ஆய்தம் தனிநிலைபுள்ளி
ஒற்றிப்பால ஐந்தும் இதற்கே" என்றதால் அஃகேனம் சரியே.(யாப்பெருங்கலக்காரிகை உறுப்பியல் ஒத்துக்கொள்கிறது) தவறுக்குப் பொருத்தருள்க.

ஞானவெட்டியான் ஐயா, வணக்கம். உங்கள் UPS புகைந்தது அறிந்து வருந்துகிறேன். பல வகையான பிழைகளும்., தவறுகளும் நிகழ்வது இயல்பே. கூட்டாக நாம் அனைவரும் நமக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் உரையாடி சரி செய்து கொள்ளலாம். கடைசியில் கட்டுரை சரியாக இருக்கவேண்டும் என்பதே நீங்களும் நானும் உட்பட எல்லோருடைய குறிக்கோளும் ஆகும். உங்கள் பங்களிப்பைக் கண்டு மகிழ்பவர்களில் நானும் ஒருவன். --செல்வா 12:30, 13 மார்ச் 2007 (UTC)

வரும் தலைமுறைக்குத் தவறான தகவல்களை விட்டுச் செல்லுவதில் எனக்கும் உடன்பாடில்லை. சின்னட்களுக்கு எப்படி எப்படிச் செய்யவேண்டுமென வழிகாட்டுங்கள். என்னாலியன்றவரை தொகுப்புக்கள் தருகிறேன். கோர்ப்பதை யாராகிலும் மேற்பார்வையிட்டு தவறிருப்பின் சொல்லுங்கள்.--ஞானவெட்டியான் 14:16, 13 மார்ச் 2007 (UTC)

வேண்டுகோள்.

[தொகு]

ஞானவெட்டியான் ஐயா (உங்களை ஞானவெட்டியான் என்றே அழைக்கலாமா? விக்கியில் வயது, வணக்கத்தை வலியுறுத்தும் சொற்களைத் தவிர்க்கிறோம். இது சிறுவர்களும், மாணவர்களும் தயக்கமின்றி தாங்கள் சரியென கருதும் கருத்தை தெரிவிக்க உதவும்) உங்களிடம் ஒரு வேண்டுகோள். நீங்கள் நன்றாக தமிழ் அறிந்தவர்களாகவும் உரைகளில் உள்ள இலக்கண, எழுத்துப் பிழைகளைத் திருத்த வல்லவராகவும் இருக்கிறீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் பல கட்டுரைகளில் இது போன்று பிழைகளை இருக்கின்றன. அவற்றைத் திருத்தி உதவு முடியுமா? இது போன்ற பணிகளில் தற்போது வெகு சிலரே ஈடுபட்டுள்ளோம். ஆனால், இது போன்ற உரைத் திருத்தப் பணிகளும் மிகவும் அவசியம். தவிர, பல கட்டுரைகளை இப்படி நீங்கள் பார்வையிடும்போது தமிழ் விக்கி கட்டுரை நடை, கலைக்களஞ்சிய நடை, விக்கி நுட்பம் ஆகியவற்றை புரிந்து கொள்ள உதவும்.--Ravidreams 15:00, 13 மார்ச் 2007 (UTC)

அப்படியே அழைக்கலாம். தவறாக எண்ணமாட்டேன். தங்களின் கருத்துக்கு நன்றி. பிழை திருத்தும் பணியை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆயினும் என்னுடைய சிறு கட்டுரைகளையும் யாரேனும் விக்கி நடையில் தொகுத்து இட்டால் கட்டுரைகள் பெருகும். யாரேனும் உதவ இயலுமா? --ஞானவெட்டியான் 15:33, 13 மார்ச் 2007 (UTC)

உங்கள் கட்டுரைகளை நானும் இன்னும் பலரும் விக்கிக்கு ஏற்றவாறு திருத்தி எழுதுவோம். என்னால் இயன்றதை நான் கட்டாயம் செய்கிறேன். சில கட்டுரைகள் மிகப்பெரிதுமாக மாற்றம் செய்ய வேண்டியது, எடுத்துக்காட்டாக கலை, நுண்கலைகள், ஞானம், அறிவு முதலியவை நான் ஏற்கனவே திருப்ப்தியில் முடிவெட்டுபவன் மாதிரி பல கட்டுரைகளைத் தொடங்கிவிட்டு ஓரளவிற்கேனும் முடிக்காமலும் திருத்தாமலும் விட்டு வைத்துள்ளேன். நான் கட்டாயம் என்னால் ஆன உதவிகளைச் செய்கின்றேன்.--செல்வா 16:10, 13 மார்ச் 2007 (UTC) மேலும் ஒன்று உங்கள் கையொப்பம் இட தொகுப்புத் திரையின் மேலே உள்ள கடைசி பொத்தானுக்கு முன்னர் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும். உங்கள் சுட்டெலியை (மவுஸை) அப்பொத்தானுக்கு மேல் கொண்டு சென்றால் அது என்ன பொத்தான் என்று அதுவே காட்டும், எனவே நீங்கள் எளிதாகக் கையொப்பம் இடலாம்.--செல்வா 16:15, 13 மார்ச் 2007 (UTC)

10000 கட்டுரை என்ற இலக்கை அடையவிருக்கும் தமிழ்விக்கியில் எழுத்துபிழை,இலக்கண பிழைகள் இன்றி இனிவரும் காலங்களில் வளர்தெடுப்பது அவசியமான பணியாகும்.இதற்கு தாங்கள் மகிழ்ச்சியுடன் உதவுவீர் என எண்ணுகின்றேன்.புதிதாக கட்டுரைகள் வரையப்படும்போது அக்கட்டுரையினை அவதானித்து எழுத்துப்பிழைகள்,ஒற்றுப்பிழை,இலக்கணப்பிழை போன்றவறினை கண்டு உண்ர்ந்து அவற்றினை திருத்திவிடுவிடுவது நல்ல நடவடிக்கையாக இருக்கும் மேலும் ,தூய தமிழ் புழக்கதினை நாம் விருப்புகின்றோம் எதாவது ஒரு திசைச்சொல்லிற்கு பதிலியாக நல்ல தமிழ் சொல் இருக்குமாயின் அதனையும் மாற்றி உதவலாம் எடுத்துக்காட்டு :முன்பு நாங்கள் உதாரணம் என சொல்லிவந்ததை தற்போது எடுத்துக்காட்டு என்று மாற்றியதுபோல .நன்றி.--கலாநிதி 17:21, 13 மார்ச் 2007 (UTC)

மிக்க நன்றி - காலாநிதி--ஞானவெட்டியான் 02:57, 14 மார்ச் 2007 (UTC)

தொகுத்து முடிக்கப்பட்ட கட்டுரைகள் எங்கே உள்ளன? அவைகளை அடைய வழி என்ன?--ஞானவெட்டியான் 11:55, 14 மார்ச் 2007 (UTC)

"தொகுத்து முடிக்கப்பட்ட கட்டுரைகள்" என்று எதுவும் இல்லை. எல்லாமே யாரும் எப்பொழுதும் தொகுக்கலாம். இல்லாமே திறந்த வெலியில் தான் உள்ளது. இடையூறு செய்பவர்களிடம் இருந்து காக்க சில கட்டுரைகள் பூட்டப்படலாம். அப்பொழுது அதனைப் பொதுப் பயனர்கள் யாரும் தொகுக்க இயலாது. ஒரு குறிப்பிட்ட பயனரின் பங்களிப்புகளை (தொகுக்கப் பட்ட கட்டுரைகள் உட்பட எல்லாமும்) பயனர் பெயருடன் பதிவாகி இருக்கும் "பங்களிப்புக்ள்" என்னும் சொல்லைச் சொடுக்கினால் பார்க்கலாம். --செல்வா 12:34, 14 மார்ச் 2007 (UTC)

பயனர் பக்கத்தில் பின்புலம்

[தொகு]

உங்கள் பயனர் பக்கத்தில் பின்புலம் தந்தமைக்கு நன்றி. நீங்கள் மிக விரைவாக த.வி-யின் முறைகளுக்கு ஏற்றவாறு பணியாற்றத் தொடங்கிவிட்டீர்கள். உங்கள் வரவு வளம் சேர்க்கும் என்று எண்ணுகிறேன். --செல்வா 12:34, 14 மார்ச் 2007 (UTC)

நன்றி, செல்வா. table insert செய்வது எப்படி? "நரம்பு" என்னும் தலைப்பில் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 நரம்புகளின் எண்ணிக்கையைத் தொகுத்துள்ளேன். கண்டு, சென்று வழிகாட்டுங்கள்.--ஞானவெட்டியான் 13:12, 14 மார்ச் 2007 (UTC)

"இக் கட்டுரை விக்கிக்கு ஏற்ற முறையில் இல்லை" அப்படியெனில் இதை எங்கு சேற்கவேண்டும்?--ஞானவெட்டியான் 14:07, 14 மார்ச் 2007 (UTC)

எங்கேயும் சேர்க்க இயலாது. ஒன்று இதனை நீங்களோ, அல்லது வேறு யாரோ திருத்தியோ, மாற்றியோ எழுதவேண்டும். அல்லது நீக்கப்படவேண்டும். --செல்வா 15:05, 14 மார்ச் 2007 (UTC)

அட்டவணை எப்படிச் செய்வது?

[தொகு]

wikitable என்னும் ஒரு எளிய அட்டவணை ஆக்கும் முறையை கீழ்க்காணும் எடுத்துக்காட்டின் வழி அறியலாம். கீழே கொடுத்துள்ளது தமிழகப் பழங்குடிகள் என்னும் காட்டுரையில் இருந்து வெட்டி எடுத்தது. இன்னும் பலப் பல வகைகளில் அட்டவணைகள் ஆக்கலாம். பொதுவாக இவ்வகையான கேள்விகளுக்கு, Wikipedia:உதவி என்னும் பக்கத்தை நாடலாம். அங்கே அட்டவனைப்படுத்துவது பற்றி கொடுத்துள்ளார்கள் :Wikipedia:அட்டவணைப்படுத்துதல்.

பழங்குடி பெயர் வாழும் பகுதி மொழி
அரநாடன் கோவை, ஆனைமலை மலையாளக் கிளை மொழி
அலுகுறும்பர் நீலகிரி கன்னடக் கலப்பு மொழி
இருளர் கோவை, சேலம், காஞ்சிபுரம், நீலகிரி, விழுப்புரம் இருள மொழி தமிழ் கிளைமொழி

--செல்வா 15:02, 14 மார்ச் 2007 (UTC)

உதவி

[தொகு]

உதவிப் பக்கங்கள் - தமிழில்; ஆங்கிலத்தில் --Ravidreams 19:15, 14 மார்ச் 2007 (UTC)

பெண்ணடிமைத் தனம்

[தொகு]

பெண்ணடிமைத் தனம் மாற்றங்கள் செய்துள்ளேன். பார்க்கவும். --Natkeeran 19:22, 14 மார்ச் 2007 (UTC) அன்பு நட்கீரன், மிக்க நன்றி. விக்கி தரத்துக்கு எழுத இயலாமையால் காலம் வீணாகிறாதோ என ஐயுற்றேன் எங்கே சிந்தனைகளைப் பதிக்கமுடியாதோ என்னும் ஆதங்கம் வந்துவிட்டது. --ஞானவெட்டியான் 01:47, 15 மார்ச் 2007 (UTC)

ஞானவெட்டியான் ஐயா, உங்களால் நிச்சியமாக முடியும். நீங்கள் எழுதிய ஒரு இரு வரிகளைத் தவிர அனைத்து கருத்துக்களும் அங்கே உள்ளன. எமக்கு இலக்கிய அறிவு மட்டு, அதில் இருந்து கருத்துக்களை அல்லது எடுத்துக்காட்டுக்களை தர முடியுமென்றால், அது த.வி (தமிழ் விக்கிப்பீடியாவி) ற்கு வலு சேர்க்கும். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகின்றேன். நன்றி. --Natkeeran 13:47, 15 மார்ச் 2007 (UTC)

மிக்க நன்றி, நட்கீரன் அவர்களே!--ஞானவெட்டியான் 13:50, 15 மார்ச் 2007 (UTC)


வாமனர்

[தொகு]

திருமாலின் பத்து அவதாரங்கள் என்னும் தலைப்பில் "வாமணர்" என்று குறிக்கப் பட்டுள்ளது. இதை "வாமனர்" என மாற்ற வழி என்ன?--ஞானவெட்டியான் 04:32, 15 மார்ச் 2007 (UTC)

இதனை மாற்றியுள்ளேன். பிற திருத்தங்களும் செய்துள்ளேன். --செல்வா 12:19, 15 மார்ச் 2007 (UTC)

தலைப்பு இன்னும் "வாமணர்" என்றுதான் உள்ளது. அதைத் திருத்தவெ வழிகேட்டேன்.--ஞானவெட்டியான் 13:46, 15 மார்ச் 2007 (UTC)

கட்டுரை உள்ள சட்டத்திற்கு மேலே "நகர்த்து" என்று ஒரு பிரிவு சுட்டும் பொத்தான் உண்டு. அதனை சொடுக்கினீர்கள் என்றால், நீங்கள் புதிய தலைப்பு இட முடியும். நிச்சயமாகத் தவறென்றால் (எழுத்துபிழை முதலியன), உடனே மாற்றலாம். வேறு தலைப்பு பொருந்தும் எனில், பேச்சுப் பக்கத்தில் கருத்தை இட்டு, சிறு கருத்துரையாடலுக்குப் பின் மாற்றலாம். எழுத்துப்பிழை, சில நேரங்களில் இலங்கைத் தமிழருக்கும் தமிழ்நாட்டுத் தமிழருக்கும் சற்று வேறுபடும். அருள்கூர்ந்து இதனையும் கருத்தில் கொள்ளுங்கள். நான் வார்ப்புரிவில் வாமனர் என்று மாற்றினேன்.--செல்வா 14:05, 15 மார்ச் 2007 (UTC)

நன்றி செல்வா. கருத்தில் கொள்வேன்.--ஞானவெட்டியான் 14:21, 15 மார்ச் 2007 (UTC)

இந்து சமயம்

[தொகு]

நீங்கள் கேட்ட இந்து சமயம் குறித்த வார்ப்புருப் பக்கம் - வார்ப்புரு:இந்து சமயம். இதைத் திருத்துவதன் மூலம் இந்த வார்ப்புரு வரும் பக்கங்கள் அனைத்திலும் மாற்றங்கள் தரலாம்.

உங்கள் பங்களிப்பையும் அதற்கு நீங்கள் செலவிடும் நேரத்தையும் மிகவும் மதிக்கிறோம். சிரமப்பட்டு எழுதிய வரிகள் நீக்கப்படும்போது எவருக்கும் உறுத்தலாகத் தான் இருக்கும். ஆனால், தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளில் செய்யப்படும் மாற்றங்களை கவனித்தாலே உங்கள் பங்களிப்பு விக்கி நடைக்கு ஏற்ப மாறி விடுமல்லவா? வந்த புதிதில் பலருக்கு இந்த உறுத்தல் வருவது உண்மை. சில சமயம் நீளமாக எழுதப்பட்ட கட்டுரைகளையும் நாங்கள் அழிக்க வேண்டி இருக்கிறது. இதில் வருத்தமே. கொஞ்ச நாள் தொடர்ந்து இங்கு இருப்பவர்கள் விக்கி நடையை கைக்கொண்டு விடுகிறார்கள் என்பதே என் அனுபவம். நன்றி--Ravidreams 07:49, 15 மார்ச் 2007 (UTC)

என் காலம் குறுகியது. அதற்குள் என் மூளையில் உள்ளதைக் கொட்டிச் செல்லவேண்டுமென்பதே என் வாழ்க்கையின் நோக்கம். என் வரிகள் நீக்கப்படுவது எனக்கு உறுத்தலில்லை. இக்காலத்தில் வேறேதகிலும் பயனுள்ளதாகச் செய்திருக்கலாமே! எனும் ஆதங்கம். அவ்வளவுதான்.இனி, எனக்குத் தெரிந்தவற்றக் குறுங் கட்டுரைகளாகத் தந்துவிடுகிறேன். பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் போல. அவைகளைக் கோர்க்கும் பணியினை யாரேனும் எடுத்துக்கொள்ளுங்கள். "இந்து சமயம் வார்ப்புரு" சரியாகத் தொக்குக்கப்படவில்லை என்பது எமது கருத்து. எடுத்துக்காட்டாக, "ஸ்மிருதியில்" தந்திரம், யோகமும், சடங்குகளில், "சோதிடம், ஆயுள்வேதம்" ஆகியவைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்புக்களும் சரியானதாகத் தெரியவில்லை. சற்றே சிந்திக்கலாமா?சிந்தித்துத் தலைப்புகளை மற்றியபின் அவைகளில் எவைஎவை அடங்குமோ அவைகளில் பட்டியல் இடுவது நல்லது..--ஞானவெட்டியான் 13:20, 15 மார்ச் 2007 (UTC)

அந்த வார்ப்புரு ஆங்கில விக்கியிலுருந்து எடுத்து மொழிபெயர்க்கப்பட்டது. எனவே தமிழ்வழிப் பார்வை இல்லாமல் இருக்கலாம். அதை தகுந்த வழியில் மீள் உருவாக்குவதற்கு உங்கள் கருத்துக்கள் உதவும். சற்று விரிவாக உங்கள் கருத்துக்களை முன்வைத்தால் நன்று. அதாவது என்ன என்ன எல்லாம் உள்ளடக்கப்படலாம் என்ற நோக்கில். நன்றி. --Natkeeran 13:43, 15 மார்ச் 2007 (UTC)

ஆகட்டும் பொறுமையாகக் சிந்தித்து எழுதுகிறேன்.--ஞானவெட்டியான் 14:23, 15 மார்ச் 2007 (UTC)

தமிழ் விக்கி நடை

[தொகு]

த.வி யில் விடய நோக்கில் எழுதப்பட வேண்டும், உலக நோக்கில் எழுதப்பட வேண்டும். முதலில் நீங்கள் செல்ல எடுத்த விடயத்தை முதல் வரியிலோ அல்லது பந்தியிலோ வரையறை செய்தல் நன்று. பொதுக் கட்டுரை என்றால் பரப்பு கூடியும் ஆழம் குறைவாகவும், துல்லியமான தலைப்பு கட்டுரைகள் என்றால் ஆழம் கூடியும் பரப்பு சுருங்கியும் இருத்தல் நன்று. ஆரம்பத்தில் அனேகருக்கு சற்று சிக்கலாக இருந்தாலும், சில நாட்களிலேயே நீங்கள் நிச்சியம் புரிந்துகொண்டு நன்றாக பங்களிப்பீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் எமக்கில்லை. --Natkeeran 13:52, 15 மார்ச் 2007 (UTC)

இறையாணை எப்படியோ? அப்படியே நடக்கட்டும்.--ஞானவெட்டியான் 14:25, 15 மார்ச் 2007 (UTC)

மாணிக்கவாசகர்

[தொகு]


"மாணிக்கவாசகர்" என்னும் தலைப்பில் என் கட்டுரை இட்டுள்ளேன். முன்னர் இருந்த கட்டுரையில் அரசன் வரகுண பாண்டியன் என்றுள்ளது. ஆனால் அரசனோ, "அரிமர்த்தன பாண்டியன்." இரு கட்டுரைகளில் எது நன்றாக உள்ளதோ அதையே வைத்துக்கொள்ளலாம்.--ஞானவெட்டியான் 15:46, 16 மார்ச் 2007 (UTC)

பேச்சு பக்கத்தில் தனி தலைப்பு கொடுத்து துவக்கம் செய்வது எவ்வாறு? --ஞானவெட்டியான் 15:46, 16 மார்ச் 2007 (UTC)

சோதனைமுறையில் நானே கண்டுபிடித்துவிட்டேன். தொல்லைக்கு வருந்தும்--ஞானவெட்டியான் 15:50, 16 மார்ச் 2007 (UTC)

"மாணிக்கவாசகர்" என்னும் தலைப்பில் என் கட்டுரை இட்டுள்ளேன். முன்னர் இருந்த கட்டுரையில் அரசன் வரகுண பாண்டியன் என்றுள்ளது. ஆனால் அரசனோ, "அரிமர்த்தன பாண்டியன்." இரு கட்டுரைகளில் எது நன்றாக உள்ளதோ அதையே வைத்துக்கொள்ளலாம்.--ஞானவெட்டியான் 15:46, 16 மார்ச் 2007 (UTC)

இன்னும் "மாணிக்கவாசகர் தேவாரம் பாடிய மூவருடன் முதல் வைத்து எண்ணத்தக்க இன்னொருவர். இவர் 9ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர்." என்னும் கருத்து கட்டுரையில் உள்ளதே!--ஞானவெட்டியான் 07:54, 19 மார்ச் 2007 (UTC)

மறுபடியும் தொகுத்துள்ளேன்--ஞானவெட்டியான் 05:15, 20 மார்ச் 2007 (UTC)

திருநீறு

[தொகு]

புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர்,அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம்,குங்குமம்,திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது.அவ்விடத்தில் அருட்சோதி தோன்று அதனைக் குறிக்கவே நீறு இடுவர்.[1]"

இது தற்பொழுது உள்ள குறிப்பு.

1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.


2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.

அச்சு ஏறிய பொத்தகம் என்பதற்காக, அதில் சொல்லியவை எல்லாம் உசாத்துணை என எடுத்துக்கொள்ளுதல் இளைய தலைமுறைக்கு நல்லதல்ல. "மெய்யியல்" தெரிந்தோரின் கருத்தறியக் காத்துள்ளேன்.--ஞானவெட்டியான் 13:33, 17 மார்ச் 2007 (UTC)

மெய்யியல்

[தொகு]

மெய்யியலுக்குத் தனியாகப் பகுப்பு உள்ளதா? இல்லையெனில் உருவாக்குவது பற்றி விக்கியரின் கருத்தை அறியக் காத்துள்ளேன்.--ஞானவெட்டியான் 13:33, 17 மார்ச் 2007 (UTC)

பகுப்பு:மெய்யியல் --Natkeeran 13:35, 17 மார்ச் 2007 (UTC)

மெய்யியல் பகுப்பு கண்டேன்.--ஞானவெட்டியான் 14:05, 17 மார்ச் 2007 (UTC)

மும்மலங்கள்

[தொகு]

மும்மலங்கள் - ஆணவம், கன்மம் மாயை என்றுதால் இங்கே இலங்கைப் பாடப்புத்தங்களில் எழுதியுள்ளனர். அதே மாதிரி மாற்றியமைக்கவா?. கன்மம் அல்லது வினை என்னும் தலைப்பை கன்மம் இற்கு வழிமாற்றிவிடவா. மற்றவர்களுக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும். --Umapathy 13:56, 17 மார்ச் 2007 (UTC)

கன்மம் என்பது சமக்கிருதம் என்பதால் கன்மம் அல்லது வினை எனக் குறித்துள்ளேன். கன்மம் = வினை--ஞானவெட்டியான் 14:09, 17 மார்ச் 2007 (UTC)

ஆணவம், மாயை ஆகியவைகளினால் தூண்டப்பட்டு, ஒரு மனிதனைத் தீவினை புரிய வைக்கும். - அதனால் ஆணவம், மாயை, கன்மம் அல்லது வினை என வரிசைப் படுத்தப் பட்டுள்ளது. --ஞானவெட்டியான் 14:09, 17 மார்ச் 2007 (UTC)

தமிழர் வானவியல்

[தொகு]

அன்பு மயூரநாதன், "தமிழர் உறவுமுறை - தமிழரை மையமாக வைத்து ஒரு பொது அடிப்படை கட்டுரை. ஏற்கனவே பல கட்டுரைகள் இந்த புலத்தில் எழுதியுள்ளீர்கள். எனவே ஒப்பிட்டு அல்லது ஒப்பி எழுதுவது சாத்தியமா இருக்கும்." - எனக்குப் புரியவில்லை சற்றே விளக்கவும்.--ஞானவெட்டியான் 19:21, 17 மார்ச் 2007 (UTC)

மா(மகா) மாயை

[தொகு]

திருத்தி எழுதப் பட்டுள்ளது.--ஞானவெட்டியான் 05:30, 18 மார்ச் 2007 (UTC)

தமிழ்ச் சொற்கள் திரட்டு (A)

[தொகு]

என் திரட்டிலிருக்கும் தமிழ்ச் சொற்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறு முயற்சி.--ஞானவெட்டியான் 04:37, 18 மார்ச் 2007 (UTC)

இக்கட்டுரையை தமிழ் விக்சனரியில் சேர்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.--Sivakumar \பேச்சு 04:53, 18 மார்ச் 2007 (UTC)

தமிழ் - ஒலியனியல்

[தொகு]

எனக்குத் தெரிந்த தமிழை எடுத்தியம்ப முற்பட்ட ஒரு சிறு முயற்சி. விக்கி நடைக்கு ஒத்து வருகிறதா? இல்லையெனில் அடுத்த தலைப்புக்கு முயலுவேன்.--ஞானவெட்டியான் 06:13, 18 மார்ச் 2007 (UTC)

மாண்டூக்ய காரிகை

[தொகு]

//"ஆன்மாவும் இறைவனும் வேறு" என்னும் இருமை இல்லாத நிலைக்கு, அதாவது அத்துவிதத்துக்கு விளக்கமும், கண்ணில் தெரியும் உலகம் ஒரு மாயத் தோற்றமே எனத் தன் "மாண்டூக்ய காரிகை"யில் கெளடபாதர் விளக்குகிறார்.//

  • மாண்டூக்ய காரிகையா அல்லது மாண்டூக்ய காரிகையா? எது சரியானது?

மற்றும், விக்கியில் கட்டுரை எழுதும் போது கவனிக்க வேண்டியவை:

  1. கட்டுரைத் தலைப்பு முதல் பந்தியில் விளக்கப்பட வேண்டும். உ+ம்: மாண்டூக்ய காரிகை (??) என்பது கௌடபாதர் என்பவர் எழுதியுள்ள ஒரு நூல். (இந்நூல் பற்றிய மேலும் சில தகவல்கள் சேர்க்கப்பட்டால் நல்லது. எழுதிய ஆண்டு போன்ற விபரங்கள். எதைப் பற்றி இந்நூல் பொதுவாகச் சொல்கிறது, பதிப்புகள்...
  • பின்னர் இந்நூலில் தரப்பட்டுள்ள தகவல்களைத் தரலாம். உ+ம்: ஆன்மாவும் இறைவனும் வேறு என்னும் இருமை இல்லாத நிலைக்கு...நன்றி.--Kanags 08:56, 18 மார்ச் 2007 (UTC)

மாண்டூக்ய காரிகை - சரி.
அறிந்தன, கிடைத்தன, உசாத்துணை ஆகிவையெல்லாம் தந்துவிட்டேன். கிட்டாதவைகளை அறிந்தோர் விரித்துரைக்க. விக்கி நடை கைவர சற்றே காலமாகும். அதுவரை தொகுத்து உதவினால் வளம் பெருகும்; இல்லையேல் ஆர்வம் குன்றும்.--ஞானவெட்டியான் 11:22, 18 மார்ச் 2007 (UTC)

http://ta.wikipedia.org/wiki/%22%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%22 காண்க. "மாண்டூக்ய கரிகை" - தவறுதலாகக் கொத்தப்பட்டுவிட்டது. மாண்டூக்ய காரிகை - சரி. சரி செய்து உதவுங்கள்.--ஞானவெட்டியான் 11:45, 18 மார்ச் 2007 (UTC)

ஞானவெட்டியான், தவறு சரி செய்யப்பட்டுவிட்டது. கட்டுரைத்தலைப்புகளில் " " இடுவது தேவையற்றது மட்டுமல்ல, பிழையானது. அதனையும் திருத்திவிட்டேன்.--11:49, 18 மார்ச் 2007 (UTC)

தொடர்புக்கு

[தொகு]

ravidreams_03 at yahoo dot com என்ற முகவரிக்கு கோப்புகளை அனுப்பி வையுங்கள். தமிழ் ஒலியன்கள் குறித்த கட்டுரை நன்று. தொடர்ந்து எழுதுங்கள்--ரவி 11:37, 18 மார்ச் 2007 (UTC)

Excell கோப்பு முழுமையும் அனுப்பிவிட்டேன். சொற்குவை இன்னும் விரிவுபடுத்தப்படலாம். "தமிழ் ஒலியன்கள் தொடரும்.--ஞானவெட்டியான் 11:42, 18 மார்ச் 2007 (UTC)

சித்த வைத்தியம் - மூலிகைகள்

[தொகு]

இத்தலைப்பில் "பாதிரி" என்னும் மூலிகைக்கு முன் "பீனிசப் புல்" பற்றிய வரிகள் இணைத்துள்ளேன். அத்தலைப்பு அட்டவணைப் பகுதியில் தெரியவில்லை. உதவுக.--ஞானவெட்டியான் 13:36, 18 மார்ச் 2007 (UTC)

பீனிசப் புல்

[தொகு]

பொருளடக்கப் பட்டியல் வராதது குறித்து எழுதி உள்ளீர்கள் என்று நினைக்கிறேன். அதை சரி செய்து உள்ளேன். பீனிசப்புல்லும் பாதிரியும் ஒன்றா?--ரவி 16:11, 18 மார்ச் 2007 (UTC)

இல்லயில்லை. பாதிரி வேறு; பீனிசப் புல் வேறு. பகரவரிசையில் வரிசைசைப் படுத்தவே கேட்டேன். வழிமுறை என்னவென விளக்கினால் அடுத்த முறை தொல்லை கொடுப்பதைத் தவிர்க்கலாம். தற்பொழுது "பாதிரி"யின் வகையில் சேர்த்திருப்பதை நகர்த்தித் தனியாகப் "பீனிசப் புல்" என்னும் தலைப்பில் இடவேண்டும்.--ஞானவெட்டியான் 01:32, 19 மார்ச் 2007 (UTC)

பார்க்க - உதவி:கட்டுரைகளை அகரவரிசைப்படுத்தல். உங்கள் பீனிசப் புல் கட்டுரையை தனிப்பக்கத்து நகர்த்தி இருக்கிறேன். மூலிகைகள் பட்டியல் [[பகுப்பு:மூலிகைகள்]] என்ற பக்கத்தில் தானாகவே அகரவரிசையில் காட்டப்படும். --ரவி 21:15, 19 மார்ச் 2007 (UTC)

ஆதிசங்கரர்

[தொகு]

"ஆதிசங்கரர், அத்வைதம் - இரண்டற்ற நிலை என்கிற தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டிய தமிழர். இன்றைய கேரளத்திலுள்ள காலடி என்னுமிடத்தில் பிறந்தார்." இதிலிருந்து, இவர் கேரளத்தச் சேர்ந்தவர் என்பது தெள்ளத் தெளிவு. ஆகவே இவர் "தமிழர்" என்னும் குறிப்பை நீக்கவேண்டும்.--ஞானவெட்டியான் 04:33, 19 மார்ச் 2007 (UTC)

பகுப்பு:ஆன்மீகவாதிகள்

[தொகு]

ஆன்மீகம் என்பது ஆன்ம+ஈகம் என்றாகும். ஈகம் என்றால் கொடை. இங்கு கொடை ஒன்றுமில்லை. ஆகவே,"ஆன்மீகம்" என்பது சரியல்ல; "ஆன்மிகம்" தான் சரி. தொழில் நுட்பம் தெரிந்தோர் மாற்றித் தருக.--ஞானவெட்டியான் 04:56, 19 மார்ச் 2007 (UTC)

ஆன்மிகவாதிகள் என்ற பலுக்கல் தான் சரி. தவறை சரி செய்கிறோம். சுட்டிக்காட்டியதற்கு நன்றி--ரவி 21:15, 19 மார்ச் 2007 (UTC)

பொருளடக்கம்

[தொகு]

பொருளடக்கத்தில் தற்பொழுது இட்டுள்ள இரு (# 27.1 ஆதிசங்கரர், பகுப்பு:ஆன்மீகவாதிகள்) ஆகியவை உட்பகுப்பாகக் காட்டப்படுகிறதே! யாரேனும் வழிகாட்டுங்களேன்.--ஞானவெட்டியான் 04:56, 19 மார்ச் 2007 (UTC)

குழப்பமாக உள்ளபடியால் யாரேனும் திருத்திக் கொடுங்களேன்.--ஞானவெட்டியான் 13:09, 19 மார்ச் 2007 (UTC)

ஆதி சங்கரர் கட்டுரை தற்போது நன்றாகவே தெரிகிறது. உங்கள் வேண்டுகோள் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் சற்று விளக்க முடியுமா? நன்றி--ரவி 21:15, 19 மார்ச் 2007 (UTC)

என் பேச்சு பக்கத்தில் பொருளடக்கத்தில் தற்பொழுது 27.1 பீனிசப் புல் உள்ளது. அதற்கு அப்புறம் உள்ள தலைப்புக்கள் sub-heading போல் வருகின்றன. 27.1,27.2,27.3,27.4 ..........இதை வரிசையாக 28,29,30,31 என வரிசையாக வருமாறு மாற்ற என்ன வழி?--ஞானவெட்டியான் 02:24, 20 மார்ச் 2007 (UTC)

==தலைப்பு எழுத்து== என்று எழுதினால் தலைப்புகள் 1,2, என்று வரிசையாக வரும். ===துணைத்தலைப்பு=== என்று எழுதினால் 1.1, 1.2 என்று வரும். இது குறித்தான மாற்றங்களைச் செய்துள்ளேன். தற்போது உங்கள் பக்கம் நன்றாக உள்ளது. Wikipedia:தொகுத்தல்#Sections, paragraphs, lists and lines பாருங்கள்.--ரவி 07:19, 20 மார்ச் 2007 (UTC)

மிக்க நன்றி இரவி.--ஞானவெட்டியான் 11:29, 20 மார்ச் 2007 (UTC)

சித்தர் பட்டியல்

[தொகு]

சித்தர் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாற்றமிருப்பின் தெரிவிக்கவும்/ மாற்றவும்.--ஞானவெட்டியான் 05:29, 19 மார்ச் 2007 (UTC)

நீங்கள் மிகுந்த உடற் சிரமத்துக்கு இடையில் விக்கியில் எழுதுவதாக சொல்லி இருக்கிறீர்கள். ஒரு விரல் (அல்லது ஒரு கை?) கொண்டு நீங்கள் தட்டச்சுவதாக சொன்னது மனதைத் தொட்டது. விக்கி போக பல இடங்களிலும் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை செய்கிறீர்கள். உங்களுக்கு நல்லாயுளையும் உடல்நலத்தையும் இயற்கை அளிக்க வேண்டுகிறேன். உடற்சிரமத்துக்கு இடையில், இது போன்ற குறிப்புகளை தர வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் காட்டப்படும். எனவே, அனைத்து மாற்றங்களையும் பிற ஆர்வமுடைய பயனர்கள் கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள்.--ரவி 21:15, 19 மார்ச் 2007 (UTC)

சைவ தத்துவங்கள்

[தொகு]

இக்கட்டுரை முற்றுப்பெறவில்லை. இதில் கூறியுள்ளவற்றை அறியாது சைவ சமயக் கருத்துக்களையோ, நூல்களையோ புரிந்துகொள்ள இயலாது. பெரிய மலைப்புடனேதான் இக்கட்டுரையைத் தொடங்கியுள்ளேன். இதில் கூறியுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு. இது முற்றுப்பெற சின்னாட்களாகலாம். தொழில் நுட்பக் குறைவு, ஒரு விரலால் கொத்தல், இன்னும் முதுமை ஆகியவைகளிருப்பினும் என் ஆயுள் முடிவதற்குள் இதை முழுவதுமாகத் தொகுத்துவிடவேண்டுமெனும் ஆர்வத்தில் தொடங்கியுள்ளேன். இறையாணை எப்படியோ? அறியேன்.

வேண்டுகோள்: இதில் மாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன. மாற்றங்கள் செய்வதற்குமுன் என் பேச்சுப் பகுதியில் உரையாடித் தெளிந்து பின் செய்தால் நன்றியுள்ளவனாவேன். இதில் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையன(பேய்ச்சுரைக்காய்போல). சிக்கல் விழுந்தால் முற்றுப்பெறுதல் கடினம். முன்னன்றியுடன்--ஞானவெட்டியான் 07:45, 19 மார்ச் 2007 (UTC)

நிச்சயம், உங்கள் நோக்கம் நல்லபடியாக நிறைவேறும். வாழ்த்துக்கள். ஒரு வேண்டுகோள். தொடர்புடைய உரையாடல்களை நீங்கள் அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலேயே இட்டால், பின்னால் அக்கட்டுரையைப் படிப்போருக்கும் புரிந்து கொள்ள உதவும். தற்போதும், சில கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களிலேயே நீங்கள் கருத்து இடுகிறீர்கள், இதை நீங்கள் அனைத்துக் கட்டுரைகளுக்கும் பின்பற்றலாம். பக்கத்தின் மேல் உள்ள "கவனி" என்றtabஐ அழுத்தினால் நீங்கள் கவனிக்க விரும்பும் கட்டுரைகள் ஒரு பட்டியலாக சேரும். பக்கத்தின் தொடக்கத்தில் மேலே வல மூலையில் "என் கவனிப்புப் பட்டியல்" என்று ஒன்று உள்ளதை பார்க்கிறீர்கள் தானே? அந்த இணைப்பில் நீங்கள் கவனிக்கும் கட்டுரைகளின் மாற்றங்கள் மட்டும் தனியாகத் தெரியும். இது உங்கள் கட்டுரைகளில் யார் யார் என்னென்ன மாற்றங்கள் செய்கிறார்கள் என்று கவனிக்க உதவும். --ரவி 21:15, 19 மார்ச் 2007 (UTC)

ஒருவரிக் கட்டுரைகள்

[தொகு]
சைவ தத்துவங்கள் கட்டுரை பார்த்தேன். இக்கட்டுரை விக்கி நடைக்கேற்ப எழுத வேண்டியுள்ளது. நீங்களே அக்கட்டுரையை மிக எளிய நடையில் சைவர்கள் அல்லாதோரும் விளங்கிக்கொள்ளத்தக்க முறையில் எழுதி உதவினால் நன்று. அத்துடன், ஒரு வரிக்கட்டுரைகள் விக்கியில் வரவேற்கப்படுவதில்லை. உ+ம்: உத்தம தானம், மத்திம தானம், அதம தானம், சாத்துவீக குணம், தாமத குணம் போன்றவை. இவை வெறும் வரைவிலக்கணங்களையே கொண்டுள்ளன. கட்டுரைகள் குறைந்தது இரு பந்திகளையாவாது கொண்டிருத்தல் நலம். அல்லது மேலும் விரிவாக்கப்படக்கூடியவை என்றாலும் பரவாயில்லை. எனவே ஒரு வரிக்கட்டுரைகளைத் தவிர்க்கலாம். வரைவிலக்கணங்களை மூலக்கட்டுரைகளிலேயே தரலாம். (விக்சனரியில் இவற்றை இடலாமா என்பது பற்றி ரவி தான் சொல்ல வேண்டும்). மேலும் விரிவாக்கப்பட முடியாத ஒருவரிக்கட்டுரைகளை எடுத்து விடலாம் என்பது எனது கருத்து. நன்றி.--Kanags 08:43, 19 மார்ச் 2007 (UTC)
என் கருத்தும் கனகினுடையதே. ஞானவெட்டியான், நீங்கள் அருமையாக த வி-க்கு உதவக்கூடும். நீங்கள் முன்பின் அறியாதவருக்கு விளங்குமுகமாக, எளிய தமிழில், மேற்கோள்களுடன், சூழலை விளக்கி எழுத வேண்டும். உங்களால் இது முடியும். சிறு முயற்சி செய்தாலே போதும் என நினைக்கிறேன்.--செல்வா 11:56, 19 மார்ச் 2007 (UTC)

கருணைக்கு நன்றி, நண்பர்களே!
"சமயம்" என்னும் கடலை ஒரு கோப்பைக்குள் அடைக்கும் முயற்சியாக எழுந்ததுதான் இக்கட்டுரை. சமயம் தலைப்புக்குச் சரியான வார்ப்புரு தர இக்கட்டுரை வழிகாட்டி. எளிய நடையில் சைவர்கள் அல்லாதோரும் விளங்கிக்கொள்ளத்தக்க முறையில் எழுதத்தான் முயலுகிறேன். ஆயினும் சமயத்தின் சொல்லாட்சி கடினமான ஒன்று. சமக்கிருதத்தை ஒதுக்கி விள்ளப் பெரு முயற்சி தேவைப்படுகிறது. இது ஒரு வரைவுக் கட்டுரைதான்; ஆங்கிலத்தில் flow chart போல. இதில் மாற்றங்கள் செய்து உருவாக்கியபின் , இணைப்புக்கள் கொடுத்தபின் (70%முடிந்தவுடன் தெரிந்துவிடும்)ஒருவரிக்கட்டுரைகளைத் தாய் பகுப்புக்கு மாற்றிவிடுவோம்.

//இக்கட்டுரை விக்கி நடைக்கேற்ப எழுத வேண்டியுள்ளது. //

எளிய முறையில் விளக்குமுகமாகத்தான், உடைத்து உடைத்துக் கொடுத்துள்ளேன். இவைகளைக் கட்டுரை வடிவில் தந்தால் ஒன்றும் புரியாது என்பதால் ஒரு வரி வினா விடைபோலக் கொடுத்து, அதிலிருந்து இணைப்புக்கள் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். சரியோ தவறோ தெரியவில்லை. மெய்யியல் அறிந்தோர் வழிகாட்டுங்கள். காத்துள்ளேன்.

நல்லதொரு கட்டுரையைத் தமிழுலகினுக்கு விட்டுச் செல்வதற்காகவே, என் நேரம் முழுமையும் செலவிட்டு இம்முடிவினை எடுத்துள்ளேன். சற்றே பொறுங்கள். எல்லாம் இனிதாகவே முடியும். --ஞானவெட்டியான் 13:06, 19 மார்ச் 2007 (UTC)

ஞானவெட்டியான், நீங்கள், "ஆயினும் சமயத்தின் சொல்லாட்சி கடினமான ஒன்று. சமக்கிருதத்தை ஒதுக்கி விள்ளப் பெரு முயற்சி தேவைப்படுகிறது." எனக் கூறுகின்றீர்கள். சமசுகிருதத்தை ஒதுக்க வேண்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்து சமயத்தில் உள்ள பெரும்பாலான கருத்துக்கள், தமிழிலிருந்து சமசுகிருத்த்திற்கு சென்றது என்று சொல்வாரும் உள்ளனர். நாள்தோறும் ஆழ்வார் பாசுரங்களைக் கேட்ட வைணவர் இராமானு'சர் பின்னர் சமசுகிருதத்தில் எழுதினார். இன்றைய கேரளம் அன்றைய சேர நாடு (தமிழ்நாடு), அவர் எழுதியதெல்லாம் சமசுகிருதமாக இருப்பினும், அவர் பெற்றதில் தமிழ்ன் தாக்கம் (குறிப்பாக தேவார மூவர்) மறுக்கொணாதது. திராவிட சிசு என்று அவரே குறிப்பிட்டுள்ளார். சமசுகிருதத்தில் உள்ள பல சமயச் சொற்களுக்கு மூலமான தமிழ்ச்சொற்களின் பொருளாழம் மிகக் கூடியது. சமயக் கருத்துக்கள் தழைத்துக் கூர்ப்பேறிய தமிழ்நாட்டில் தமிழில் அளக்கக் கடினமான ஆழ் கருத்துக்கள் உள்ளன (சமயக் கருத்துக்கள்). ஆனால், த.வி -யில் நிறுவப்படாத புது ஆய்வுகளும், ஒரு சில குருமார்கள் சொல்லும் ஒருதலையான கருத்துக்களும் தவிர்க்கப்படவேண்டியன. நடுநிலையோடு, போதிய சான்றுகளுடன் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் (குறிப்பாக பெய்யியல் சமயக் கட்டுரைகள் - ஏனெனில் பிணக்குகள் ஏற்படக்கூடிய துறை!).--செல்வா 14:02, 19 மார்ச் 2007 (UTC)

சொற்களின் பொருளை ஒரு வரியில் விளக்குவது மட்டுமே குறுகிய கால நோக்கம் என்றால் அதற்கு ஒரு வரிக்கட்டுரைகள் தொடங்குவதற்கு பதில் விக்சனரியில் பொருள் தந்துவிட்டு அதற்கு இங்கிருந்து இணைப்பு தரலாம். விக்சனரிச் சொற்களுக்கு எப்படி இணைப்பு தருவது என்று அறிய இங்கு பார்க்கவும். இல்லை, இதில் சிரமம் இருந்தால், இது போன்ற பொருள் விளக்கச் சொற்களை எல்லாம் ஒரு பக்கத்தில் குவியுங்கள். எடுத்துக்காட்டுக்கு, சைவக் கலைச் சொற்கள், இந்து சமயக் கலைச் சொற்கள் என்ற தலைப்புகளில் இதை செய்யலாம். --ரவி 21:15, 19 மார்ச் 2007 (UTC)

தயவு செய்து ஒரு வரி பொருள் விளக்கக் கட்டுரைகளைத் தொடர வேண்டாம். மேல் உள்ள ஆலோசனைப் படி அவற்றை ஒரு பக்கத்தில் அகரவரிசைப் படி தொகுத்துத் தந்தால் நன்று--ரவி 13:25, 20 மார்ச் 2007 (UTC)

நன்றி. தொடரவில்லை.--ஞானவெட்டியான் 15:17, 20 மார்ச் 2007 (UTC)

சங்கரராய்?

[தொகு]

தங்களுடைய ஆன்மிகக்கட்டுரைகளில் 'சங்கரராய்' என்பவர் கௌடபாதருக்கும் முன்னால் இருந்ததாகச்சொல்கிறீர்கள். இப்படி ஒருவர் இருந்ததாக நான் வடமொழி நூல்களிலோ அல்லது ஆன்மிகப்பேச்சாளர்கள் மூலமோ கேள்விப்பட்டதில்லை. ஏதாவது சான்றுகள் தரமுடியுமா? நன்றி. நான் தவி க்குள் புதிதாய் நுழைந்தவன். --Profvk 19:47, 13 ஏப்ரல் 2007 (UTC)

wisdom

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Njaanam,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், Njaanam!

தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

தங்களுடைய சைவ தத்துவங்கள் என்ற அரிய சைவக்கட்டுரையை தமிழுக்கு தந்தமைக்கு நன்றி. தங்களால் விக்கித்தி்ட்டம் சைவத்திற்கு வழிகாட்டுதலாக இருக்க இயலும் என்று நம்புகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:40, 6 மே 2013 (UTC)[பதிலளி]

  1. * துரை இராஜாராம் திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Njaanam&oldid=1416029" இலிருந்து மீள்விக்கப்பட்டது