சைவ தத்துவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சைவ தத்துவங்கள் எண்ணும் எழுத்தும் குறிப்பவை:

ஒன்று[தொகு]

 • ஆண்டவன்
 • அறிவு
 • முக்தி

இரண்டு[தொகு]

மூன்று[தொகு]

நான்கு[தொகு]

ஐந்து[தொகு]

ஐந்து வடிவங்களூம், திசைகளூம்[தொகு]

பெயர் தொழில் திசை வடிவம் நிறம்
சத்யோ ஜாதம் படைத்தல் மேற்கு நிலம் பால் நிறம்..
வாமதேவம் காத்தல் வடக்கு நீர் சிவப்பு நிறம்
அகோரம் அழித்தல் தெற்கு நெருப்பு அஞ்சன (கறுப்பு) நிறம்
தற்புருடம் மறைத்தல் கிழக்கு காற்று மஞ்சள் குங்கும நிறம்
ஈசானம் அருளல் வடகிழக்கு ஆகாயம் படிக நிறம்.

[1][2]

ஆறு[தொகு]

 • ஆறு வேதாங்கங்கள் : சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதம், சோதிடம்.
 • ஆறு உட்பகைகள் : அவா, வெகுளி, இவறல், மயக்கம், செருக்கு, பொறாமை(காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்.)
 • ஆறு புறச்சமயங்கள் : உலோகாதயம், பௌத்தம், ஆருகதம், மீமாஞ்சம், மாயாவாதம், பாஞ்சராத்திரம்.
 • ஆறு அகச்சமயங்கள் : சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம்.

ஏழு[தொகு]

 • நாட்டுக்கு வரும் குற்றங்கள் ஏழு : விட்டில், தொட்டியர், பன்றி, கள்வர், அவமழை, யானை, கிளி.
 • ஏழு முனிவர் : அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்.
 • ஏழு நரகம் : கூடசாலம், இரெளரவம், கும்பிபாகம், பூதி, அள்ளல், செந்து, மகாபூதி.
 • ஏழு கீழுலகம் : அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதால(ள)ம்.
 • ஏழு மேலுலகம் : பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்.
 • ஏழு கடல் : உப்புக்கடல், கறுப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற் கடல், சுத்த நீர்க் கடல்.
 • ஏழு திரைகள் :
  • கருப்பு - மாயா சக்தி
  • நீலத்திரை - கிரியா சக்தி
  • பச்சை - பரா சக்தி
  • சிவப்பு – இச்சா சக்தி
  • பொன்வண்ணம் - ஞான சக்தி
  • வெண்மை - ஆதி சக்தி
  • கலப்பு - சிற்சக்தி
 • ஏழு பிறப்பு :
  • ஐந்து மாதம் வரை – குழவிப் பருவம்.
  • அவயவங்கள் உற்பத்திக் காலம்.
  • பிண்டம் வெளிப்பட்ட காலம்.
  • குழந்தைப் பருவம்.
  • பாலப் பருவம்.
  • குமரப் பருவம்.
  • முதுமைப் பருவம்.
 • இதில் சூட்சமப் பிறப்பு 7 :
  • சாக்கிரம்
  • சொப்பனம்,
  • சுழுத்தி
  • சாக்கிரத்தில் சொப்பனம்
  • சாக்கிரத்தில்சுழுத்தி
  • சொப்பனத்தில் சொப்பனம்
  • சொப்பனத்தில் சுழுத்தி
 • ஏழு தாதுக்கள் : இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலமாகிய விந்து.

எட்டு[தொகு]

ஒன்பது[தொகு]

 • ஒன்பது தாரணை : நாம தாரணை, மாயா தாரணை, வச்சிர தாரணை, சித்திர தாரணை, சத்த தாரணை, வத்து தாரணை, சதுரங்க தாரணை, செய்யுள் தாரணை, எண்பொருட்டாரணை(நினைவு,குறைவு ஆகிய).
 • பெரியோருக்குச் செய்யும் புண்ணியம் ஒன்பது : எதிர்கொளல், பணிதல், ஆசனத்திருத்தல், கால் கழுவல், அருச்சித்தல், தூபங்காட்டல், தீபங்காட்டல், துதித்தல், அமுதூட்டல்.

காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவ_தத்துவங்கள்&oldid=3200833" இருந்து மீள்விக்கப்பட்டது