அரநாடன்
அரநாடன் என்போர் தமிழகப் பழங்குடியின வகையைச் சேர்ந்த பழங்குடியினர் ஆவர். இவர்கள் கோவைமாவட்டத்தைச் சேர்ந்த ஆனைமலையில் வாழ்கின்றனர். பாம்பிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் நுட்பத்தை அறிந்ததினால் இவர்கள் அரநாடன் என்னும் பெயர் பெற்றனர். இவர்கள் மலையாளம் கலந்த கிளை மொழி ஒன்றைப் பேசுகின்றனர்.