பகவதி சரண் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பகவதி சரண் வர்மா என்பவர் இந்தி மொழிக் கவிஞர் ஆவார். இவர் பல புதினங்களை எழுதியுள்ளார். அவற்றுள் சித்ரலேகா என்ற புதினம் குறிப்பிடத்தக்கது. இதைத் தழுவி, 1941, 1964-ஆம் ஆண்டுகளில் இரண்டு இந்தித் திரைப்படங்கள் வெளியாகி வெற்றியடைந்தன.[1][2]

1961-ஆம் ஆண்டில் இந்தி மொழிக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். இது பூலே பிஸ்ரே சித்ரா என்ற நூலுக்காக வழங்கப்பட்டது.[3] 1971-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[4]

1978-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[5]

எழுதியவை[தொகு]

புதினங்கள்[தொகு]

  • பதன்
  • சித்ரலேகா
  • தீன் வர்ஷ்
  • டேடே மேடே ராஸ்தே
  • அப்னே கிலௌனே
  • பூலே பிஸ்ரே சித்ர

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவதி_சரண்_வர்மா&oldid=2715007" இருந்து மீள்விக்கப்பட்டது