தின்னப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தின்னப்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

தின்னப்பள்ளி (Tinnapalle ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் பாகலூர் ஊராட்சிக்கும் ஒசூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊரின் முக்கியத் தொழில் விவசாயமாகும். இந்த ஊரின் வெப்பநிலை ஏற்றுமதிக்கு உகந்த ரோஜா மலர்கள் சாகுபடி செய்ய ஏற்றதாக உள்ளதால் இங்கு ரோஜாமலர் சாகுபடி செய்து பெங்களூர் விமான நிலையம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்த ஊரில் சில தொழிற்சாலைகளும் உள்ளன அதில் முதன்மையானது பிரிமியர் ஸ்பின்னிங் & வீவிங் மில் பிரவேட் லிமிடெட் என்ற நெசவாலை இயங்கி வருகிறது. [2] இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 53 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலையகரான சென்னையில் இருந்து 298 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 10 கி.மீ தொலைவில் உள்ள கர்நாட மாநிலத்தில் உள்ள பங்காருபேட்டை தொடர்வண்டி நிலையம் மற்றும் 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூர் தெடர்வண்டி நிலையமாகும்.

குறிப்பு[தொகு]

  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. "Name and Address of the Industry". பட்டியல். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தின்னப்பள்ளி&oldid=2661984" இலிருந்து மீள்விக்கப்பட்டது