தரண் குமார்
தரண் குமார் | |
---|---|
பிறப்பு | 8 அக்டோபர் 1983[1] இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
இசை வடிவங்கள் | திரைப்பட பின்னணி இசை, ஹிப் ஹாப் |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசை இயக்குநர் |
இசைத்துறையில் | 2006–தற்போது வரை |
தரண்குமார் (பிறப்பு 8 அக்டோபர் 1983) என்பவர் ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரையுலகில் திரைப்பட பாடல்களுக்கான இசையையும், பின்னணி இசையையும் அமைத்துள்ளார். இவர் பாரிஜாதம் படத்தின் வழியாக அறிமுகமானார்.[2] இயக்குனரும் நடிகருமான கே. பாகியராஜை இவர் தன் குருவாகப் பாராட்டுகிறார். [3]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
தரண், 1983 அக்டோபர் 8 ஆம் நாள் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். சென்னை செயின்ட் ஜான்ஸ், டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் அண்ணா ஜெம் பள்ளிகளில் தனது பள்ளிப்படிப்பை படித்தார். ஹாரிஸ் ஜயராஜின் உதவியாளராக காக்க காக்க, செல்லமே, அந்நியன் போன்ற படங்களில் பணியாற்றத் தொடங்கினார்.
தொழில்[தொகு]
திரைப்பட பின்னணி இசை[தொகு]
தரண், கல்லூரியில் பயின்ற காலத்தில் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார், இயக்குனர் கே. பாக்கியராஜின் மகள் சரண்யா பாக்யராஜ் இவருடன் படித்தார். 2005இல் ஒரு இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தார்.[4] சரண்யா பாக்யராஜின் அறிமுகத்தின் காரணமாக, அவரது தந்தை இயக்கிய பரிஜாதம் படத்தின் இசையமைப்பாளராக பரிந்துரைத்தார். அந்த படத்தின் பாடலான "உன்னைக் கண்டேன்" பாடல் அந்த ஆண்டின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது.[5] படத்துக்கு விமர்சன எழுதிய சிஃபி, தரணின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் "ஒரு முக்கிய சிறப்பம்சமாக" குறிப்பிட்டது. இது வணிக ரீதியாகவும் வெற்றியாகவும் ஆனது.[6]
புதுமுகங்கள் நடித்த குறைந்த செலவில் எடுக்கப்பட்ட[ [சிவி]] என்ற திகில் படம் இவரது அடுத்த படமாகும். இந்த படத்தின் பாடல்கள் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[2] [7] [8] அதே நேரத்தில் தரணின் பின்னணி இசையும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.[9] இந்த படம், சாதகமான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், வணிக ரீதியாக மோசமாக தோல்வியடைந்தது. 2009 ஆம் ஆண்டில், இவரது அடுத்த திரைப்படமான லாடம் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. இது ஹிப் ஹாப் இசையை அடிப்படையாகக் கொண்டது, இதில் மலேசிய ராப்பர்கள் டாக்டர் பர்ன் மற்றும் எம்ஸி ஜெஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.[10] பிரபு சாலமன் இயக்கிய இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் குண்டாக மாறி இவரது தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு உதவியது.[11]
2010ஆம் ஆண்டில், தரணின் முதல் வெளியீடான பரத் நடித்த "தம்பிக்கு இந்த ஊரு" படம் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை. இதன் பிறகு கே. பாக்கியராஜின் சித்து +2 படத்திற்கு இசையமைத்தார். படத்தின் இசை 2009இல் வெளியிடப்பட்டது. இதறகாக இவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோரை ஒவ்வொரு பாடலைப் பாடச் செய்தார்.[12] பிரித்விராஜ் சுகுமாரன் நடித்த தி த்ரில்லர் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர், சல்சா அடிப்படையிலான காதல்-இசை படமான போடா போடி படத்திற்கு இசையமைத்தார்.[13]
திரைப்படம் இசைப் பணிகள்[தொகு]
தரண், திரைப்படம் அல்லாத இசைப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். 2009இல், மைக்கேல் ஜாக்சனுக்கு காணிக்கையாக "சிங் ஒன் மோர் டைம்" என்ற ஒற்றை பாடலை இவர் உருவாக்கினார்.[14] தரண் "தனது குழந்தைப்பருவத்தில் மிகப்பெரிய தாக்கம்" செலுத்தியவர் என்று மைக்கேல் ஜாக்சனை குறிப்பிட்டார்.[2] [13] இது பத்து பாடகர்களால் வழங்கப்பட்டது மற்றும் காணொளி தொகுப்பாகவும் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற 2010 சேலஞ்சர் பீச் கைப்பந்து வாகையர் போட்டிக்கான கருப்பொருள் பாடலையும் இவர் அமைத்தார்.[15] தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ஜிங்கிள் இசையமைப்பதைத் தவிர. தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் துடுப்பாட்ட அணியான ரூபி திருச்சி வாரியர்ஸுக்கு அணி கீதங்களை தரண் அமைத்தார்.[16] பன்முகத் திறமை வாய்ந்த டி. ராஜேந்தர் பாடலின் 2016 ஆண்டு பதிப்பு கீதத்தில் குரல் கொடுத்தார். பாடல் வரிகளை ஆர். ஜே. விஜய் எழுதியுள்ளார். அதே நேரத்தில் 2017 ஆண்டு பதிப்பு கீதத்திற்கு குரலை், பாடல் என இரண்டையும் ஆர். ஜே. விஜய் வழங்கினார்.[17] 2018 சனவரியில், ஆர். ஜே. விஜய் மற்றும் தரண் ஆகியோர் இணைந்து "யாரு கிட்ட" என்ற ஏறுதழுவல் கீதத்தை 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்கு காணிக்கையாக உருவாக்கினர்.[18] 2021 மார்ச்சில், தரண் சிவாங்கி கிருஷ்ணகுமாருடன் இணைந்து, கவின் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோரைக் கொண்ட "அஸ்கு மாரோ " என்ற பாடல் தொகுப்பை (ஆல்பம்) வெளியிட்டார். இதை கார்த்திக் மற்றும் டோங்லி ஜம்போ இயக்கினர்.[19] [20]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
2017 செப்டம்பரில் தரண் திரைப்பட நடிகை தீட்சிதா மாணிக்கத்தை மணந்தார்.
திரைப்படவியல்[தொகு]
வெளிவந்த திரைப்படங்கள்[தொகு]
ஆண்டு | தமிழ் | பிற மொழி | மொழிமாற்ற வெளியீடுகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2006 | பாரிஜாதம்• | |||
2007 | சிவி • | |||
2008 | யாரடி நீ மோகினி • | 2 பாடல்கள் (இரண்டாவது வெளியீட்டில்) | ||
2009 | லாடம் • | 16 டேஸ் (தெலுங்கு) | ||
நான் அவள் அது • | நேனு தானு ஆமே (தெலுங்கு) | 1 பாடல் (விளம்பரம்) | ||
சித்து +2 • | ||||
2010 | தம்பிக்கு இந்த ஊரு • | வராசுடொச்சாடு (தெலுங்கு) | ||
திரில்லர் (மலையாளம்) • | ||||
2012 | போடா போடி • | மிஸ்டர் மன்மதன் பார் சேல் (தெலுங்கு) | ||
2013 | சமர் # | வெட்டடு வெனடடு (தெலுங்கு) | ||
விரட்டு | தேகா (தெலுங்கு) | |||
என்றென்றும் | ||||
தகராறு | ||||
இங்க என்ன சொல்லுது | ||||
2014 | ஆஹா கல்யாணம் | |||
நாய்கள் ஜாக்கிரதை | ||||
2015 | காவல் # | 1 பாடல் | ||
2016 | மணல் கயிறு 2] | |||
2017 | காதல் கசக்குதய்யா | |||
2018 | அபியம் அனுவும் | அபியுடே கத அனுவிண்டேயும் (மலையாளம்) | ||
மாணிக் | ||||
2019 | ழகரம் | |||
நட்புன்னா என்னான்னு தெரியுமா | ||||
பப்பி | ||||
50/50 | ||||
2020 | இரண்டாம் குத்து | பிஜிஎம் மட்டும் |
தனிப் பாடல்கள்[தொகு]
ஆண்டு | பாடல்கள் | குறிப்புகள் |
---|---|---|
2018 | யாரு கிட்ட | |
2019 | ராசாத்தி நெஞ்ச | |
2021 | அஸ்கு மாரோ |
வரவிருக்கும் திரைப்படங்கள்[தொகு]
- கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா
- பிஸ்தா
- தக்கு முக்கு திக்கு தாலம்
- முருங்கைக்காய் சில்லுகள்
தொலைக்காட்சி[தொகு]
- 2008 மானாட மயிலாட
- 2014 உயிர்மெய்
- 2021 தாலாட்டு
குறிப்புகள்[தொகு]
- ↑ "Dharan – Tamil Movie News – Dharan celebrates – Dharan | Parijatham | Laadam | Naan Aval Adhu". Behindwoods.com. 8 October 2010. 13 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 2.2 "Tamil singers' tribute to MJ". Rediff.com. 31 August 2009. 13 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dharan: I owe my success to Bhagyaraj sir - Times of India". The Times of India (ஆங்கிலம்). 2021-05-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "'I am still waiting for the right break', says Dharan Kumar". The New Indian Express. 2021-05-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Musical year this, in Kollywood – Tamil Movie News". IndiaGlitz. 13 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "'Parijatham' is a hit!". Sify.com. 14 June 2006. 1 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "SIVI MUSIC REVIEW MUSIC DIRECTOR DHARAN AUDIO RELEASE AMEER VASNTHABALAN Dharan Yogi grandson of Thengai Srinivasan hot stills picture image gallery". Behindwoods.com. 26 November 2006. 13 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Bheema vs Sivi". Yahoo Movies. 17 August 2007. 13 October 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "Movie Review:Sivi". Sify.com. 14 October 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Music review By Malathy Sundaram". Behindwoods. 25 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Charmme on a comeback trail". The Times of India. 11 April 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Yuvan and Venkat Prabhu croon for Dharan – Tamil Movie News – Siddu +2 First Attempt | K Bagyaraj | Moser Baer Entertainment | Shantanu". Behindwoods.com. 21 October 2009. 13 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 13.0 13.1 "Poda Podi is a romantic musical: Dharan". Timesofindia.indiatimes.com. 4 August 2010. 13 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Tribute to Michael Jackson – Tamil Movie News – King of Pop | Dharan | Paarijatham". Behindwoods.com. 29 August 2009. 13 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "CHENNAI-SAVAAL: Beach Volleyball World Cup, thats happening in our very own". Timesofindia.indiatimes.com. 29 September 2010. 13 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ RUBY KANCHI WARRIORS (TNPL) - Official Music Video | DHARAN KUMAR | T.RAJENDHARR | MIRCHI VIJAY (ஆங்கிலம்), 2021-05-04 அன்று பார்க்கப்பட்டது
- ↑ "Dharan Gives Music For Ruby Kanchi Warriors". Desimartini.com. 22 August 2012. 28 September 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Jallikattu Anthem - Official Video | Dharan Kumar | Mirchi Vijay (ஆங்கிலம்), 2021-05-04 அன்று பார்க்கப்பட்டது
- ↑ Asku Maaro Video | Kavin, Teju Ashwini | Dharan Kumar | K. Sivaangi | Dongli Jumbo | Sandy (ஆங்கிலம்), 2021-05-04 அன்று பார்க்கப்பட்டது
- ↑ "Watch Latest Telugu Song Music Video - 'Asku Maaro' (Promo) Sung By Dharan Kumar and K. Sivaangi Featuring Kavin and Teju Ashwini | Telugu Video Songs - Times of India". timesofindia.indiatimes.com (ஆங்கிலம்). 2021-05-04 அன்று பார்க்கப்பட்டது.