ஹிப் ஹாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஹிப் ஹாப் (இலங்கை வழக்கு ஹிப் ஹொப்) ஓர் இசை வகையும் பண்பாடு அசைவியக்கமுமாகும். இது 1970களிலிருந்து ஆபிரிக்க அமெரிக்கர்களாலும் இலத்தீன் அமெரிக்கர்களாலும் நியூயோர்க் நகரத்தில் உருவாக்கப்பட்டதாகும். 1970களில் நியூயோர்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் தோன்றிய ஹிப் ஹாப் இசை பின்னர் ஒரு வாழ்க்கைமுறையாக மாறியது. இன்று ஹிப் ஹாப் கலாசாரம் தேசிய, இன, மத அடையாளங்களைத் தாண்டி உலகெங்கும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

ஹிப் ஹாப் பண்பாட்டில் உள்ள ராப் இசை, தடை ஆட்டம், சுவரோவியம் (Graffiti), Beat-boxing, Turntablism (DJ கலை) ஆகிய ஐந்து வகைகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிப்_ஹாப்&oldid=1995902" இருந்து மீள்விக்கப்பட்டது