உள்ளடக்கத்துக்குச் செல்

சித்து +2 (2010 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்து +2
இயக்கம்கே. பாக்கியராஜ்
தயாரிப்புK.பாக்கியராஜ்
கதைகிருஷ்ணா டாவின்சி
கே. பாக்கியராஜ்]]
இசைதரண்
நடிப்புசாந்தனு பாக்யராஜ்
சாந்தினி தமிழரசன்
ஒளிப்பதிவுராசமதி
படத்தொகுப்புசுபாஷ்
கலையகம்KBR Medias
விநியோகம்Moser Baer Entertainment
வெளியீடு10 திசம்பர் 2010 (2010-12-10)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சித்து +2 (Siddhu +2), 2010 இல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே. பாக்கியராஜ் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தின் கதாநாயகர்களாக கே. பாக்கியராஜின் மகன் சாந்தனு பாக்கியராஜ் மற்றும் அறிமுக நடிகை சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்திருந்தனர் [1]. இப்படம் திசம்பர் 10, 2010 அன்று திரையிடப்பட்டது.[2]

கதைச்சுருக்கம்

[தொகு]

ஒரு பள்ளியின் அதிபரின் மகனான சித்தார்த் (சாந்தனு) +2 பரீட்சையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக வீட்டைவிட்டு வெளியேறுகின்றான். அவனைப்போல கதாநாயகியான பவித்ராவும்(சாந்தினி) +2 பரீட்சையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக வீட்டைவிட்டு வெளியேறுகின்றாள். பின்னர் இருவரும் சந்திப்பதுடன் கதை ஆரம்பிக்கிறது. பின்னர் சித்து தற்கொலை எண்ணத்துடன் பவித்திராவுடன் சென்னை வந்தடைகிறான். அங்கு அனைத்தையும் மறந்து ஒருவரை ஒருவர் காதல் கொள்ள இருவரும் இணைந்து ஒரு புதிய வாழ்வைத் தொடங்க தீர்மானிக்கின்றனர். பின்னர் பல காரணங்களால் ஒரு மிருகத்தனமாக போலிசிடம் மாட்டிக்கொள்ள அவர் பவித்ரா +2 பரீட்சையில் தோல்வி அடையவில்லை என்பதனை அவளுக்கு அறியத்தருகின்றனர். அதன்பின்னர் தான் சித்து தன்னிடம் உண்மையை மறைத்தமை பவித்ராவிற்கு தெரியவருகின்றது. பின்னர் பவித்ரா தனது சொந்த ஊருக்கு திரும்பி மருத்துவக் கல்வியை மேற்கொள்கிறாள். இதனையறிந்த சித்து பவித்ராவுடன் சேரும் நோக்கத்தில் அவள் வீட்டிற்கு எதிரேயுள்ள சவரக்கடையில் (கஞ்சா கறுப்பு) வந்து தங்குகின்றான். அங்கு பவித்ராவின் தந்தை, மாமா, சித்துவை காதலிக்கும் குஜராத்தி பெண் ஆகிய தடைகளைத் தாண்டி சித்து பவித்ராவை கரம் பிடிக்கிறான்.

இசை

[தொகு]

தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பாளருக்கு பாரிஜாதம் [3] படத்திற்கு பிறகு இப்படம் கே. பாக்கியராஜுடன் இரண்டாவதாகும். இப்படத்தின் இசை அக்டோபர் 31, 2009 ஆம் ஆண்டு வெளிடப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]
  • சாந்தனு பாக்கியராஜ்-சித்தார்த் (சித்து)
  • சாந்தினி தமிழரசன்-பவித்ரா
  • கௌசா ராக்- கௌசா
  • கஞ்சா கறுப்பு- சலுன் கடை முதலாளி
  • சீதா
  • சீமா
  • பிரகதி
  • ராஜேஷ்
  • அனு மோகன்
  • அவினாஷ்
  • அனிருத்
  • மனோபாலா
  • கே. பாக்கியராஜ் (சிறப்பு தோற்றம்)
  • செந்தில்  (சிறப்பு தோற்றம்)
  • தலைவாசல் விஜய் (சிறப்பு தோற்றம்)

வெளியீடு

[தொகு]

இப்படம் உருவாக்கப்பட்டு ஒருவருடமாகத் திரையிடப்படாமல் இருந்தது.பின்னர் இப்படத்தை 2011 ம் ஆண்டு தை மாதம் வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்டது. எனினும் அத்திகதிக்கு முன்னதாகவே 2010 ம் ஆண்டு மார்கழி மாதம் வெளியிடப்பட்டது.இப்படத்தின் கதை லவ் இன் ஹைதராபாத் [4] எனும் பெயரில் தெலுங்கில் இன்னுமொரு படம் தயாரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Puthiya Vaarpugal again from Bagyaraj! | News - Oneindia Entertainment பரணிடப்பட்டது 12 சூலை 2012 at Archive.today. Entertainment.oneindia.in (2007-12-07). Retrieved on 2012-11-08.
  2. Siddu postponed to Pongal!. Sify.com (2010-11-17). Retrieved on 2012-11-08.
  3. Siddu Plus Two First Attempt Music Review songs lyrics பரணிடப்பட்டது 2009-10-31 at the வந்தவழி இயந்திரம். IndiaGlitz (2009-11-05). Retrieved on 2012-11-08.
  4. "Santhanu becomes Siddu for dad". indiaglitz.com. Archived from the original on 2009-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்து_%2B2_(2010_திரைப்படம்)&oldid=3792909" இலிருந்து மீள்விக்கப்பட்டது