என்றென்றும் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என்றென்றும்
இயக்கம்சினிசு
தயாரிப்புசினிசு சிறீதரன்[1]
இசைதரண்
நடிப்புசதீசு
பிரியங்கா ரெட்டி
ஒளிப்பதிவுசரவணன்
வெளியீடுமார்ச்சு, 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என்றென்றும் 2014 மார்ச்சில் வெளிவந்த திரைப்படமாகும். இதை சினிசு இயக்கியுள்ளார். சதீசு, பிரியங்கா ரெட்டி, தீனா போன்றோர் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்[தொகு]

பிரியங்கா ரெட்டி சென்னையில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். அங்கு இவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியை போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார். அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் இவருக்கு போதை மருந்து தருபவராக உள்ளார். ஆசிரியையும் உடற்கல்வி ஆசிரியரும் சேர்ந்து போதை மருந்தை உட்கொண்டு உச்சத்தில் இருக்கும்போது, உடற்கல்வி ஆசிரியர் அந்த ஆசிரியையிடம் தவறாக நடக்க முயல்கிறார். அதை விரும்பாத அந்த ஆசிரியை அவரிடமிருந்து தப்பிக்க முயல்கிறாள். அப்போது அங்கு வரும் பிரியங்கா ரெட்டி அவர்களை பார்த்துவிடுகிறாள். பிரியங்கா ரெட்டி பார்த்ததை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் அவளை பிடிக்க முயலும்போது அவரிடமிருந்து தப்பிச்செல்லும் பிரியங்கா காரில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்றுவிடுகிறாள்.

இந்த நிலையில் தன்மீது பாசமாக இருந்த தாய் இறந்துவிட்டதால், தன்னுடைய காதலியான பிரியங்காவை தேடி சென்னைக்கு வருகிறார் சதீசு வந்த இடத்தில் கோமா நிலையில் பிரியங்கா இருப்பதை அறிந்து அவளின் இந்த நிலைக்கு யார் காரணம் என்பதை அறிய முற்படுகிறான். இறுதியில், நாயகியின் நிலைக்கு காரணமானவனை கண்டுபிடித்து பழி வாங்கினாரா? நாயகியுடன் இணைந்தாரா? என்பதை இயக்குநர் சுவையாக சொல்லியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]