உள்ளடக்கத்துக்குச் செல்

செந்தில்நாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தில்நாதன் ஜம்புலிங்கம்
பிறப்புசெந்தில்நாதன் ஜம்புலிங்கம்
26 நவம்பர் 1957 (1957-11-26) (அகவை 67)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், தயாரிப்பாளர்

செந்தில்நாதன் ஜம்புலிங்கம் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் முதன்மையாக சென்னை மையமாகக் கொண்ட தமிழ்த் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றுகிறார். இவர் அதிரடி-மசாலா படங்களுக்கு மிகவும் பிரபலமானவர். 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் எம். ஜி. ராமச்சந்திரன் நடித்த நம் நாடு படத்தை இயக்கிய இயக்குநர் ஜம்புலிங்கத்தின் மகன் ஆவார்.

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

இவர் துவக்கத்தில், சூலம் (1980), பக்கத்து வீட்டு ரோஜா (1982) ஆகிய படங்களில் இயக்குநர் எம். பாஸ்கரின் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் எஸ். ஏ. சந்திரசேகரின் உதவி இயக்குநராக ஏழு ஆண்டுகள் சட்டம் ஒரு இருட்டறை முதல் நீதிக்குத் தண்டனை (1987) வரை பணியாற்றினார். அந்த நேரத்தில், இவர் நடிகர் விசயகாந்துடன் நட்பு கொண்டிருந்தார், அவர் எதிர்காலத்தில் இவரது படங்களில் நடிப்பதாக உறுதியளித்தார். இவர் இயக்கும் ஒரு படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வந்தபோது, இவர் விஜயகாந்தை சந்தித்தார். ஆனால் அப்போது விஜயகாந்த் பல படங்களில் பரபரப்பாக நடித்துக்கொண்டு படத்திற்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருந்தார். அவர் நேரம் ஒதுக்குவதற்காக காத்திருந்த இவர், வி. அழகப்பனின் உதவி இயக்குநராக மூன்று படங்களில் பணியாற்றினார். இறுதியில் செந்தில்நாதன் 1988 ஆம் ஆண்டு பூந்தோட்ட காவல்காரன் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். படம் பெருவெற்றியடைந்தது.[1]

2001 ஆம் ஆண்டில், தயாரிப்பாளர் இப்ராஹிம் ரவுத்தருடன் காதல் முதல் காதல் வரை என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்க இவர் ஒப்புக் கொண்டார், இதில் அறிமுக நாயகன் பாலகுமரன் மற்றும் உமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் எனப்பட்டது. அப்படமானது இயக்குனரின் 25 வது படமாக இருக்கும் எனப்பட்டது. ஆனால் நிதி சிக்கல்கள் படம் தயாரிப்பாளரால் கைவிடப்பட்டது.[2]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் குறிப்புகள்
1988 பூந்தோட்ட காவல்காரன் அறிமுக படம்
1988 பட்டிக்காட்டு தம்பி
1989 படிச்ச புள்ள
1989 முந்தானை சபதம்
1989 பெண்புத்தி முன்புத்தி
1990 பாட்டாளி மகன் நடிகராகவும்
1990 பெரிய இடத்து பிள்ளை
1990 பாலைவன பறவைகள் நடிகராகவும்
1991 இரவு சூரியன்
1991 நாட்டை திருடாதே
1991 காவல் நிலையம் நடிகராகவும்
1991 தங்கமான தங்கச்சி நடிகராகவும்
1992 இளவரசன் நடிகராகவும்
1992 இதுதாண்டா சட்டம் நடிகராகவும்
1992 நட்சத்திர நாயகன் நடிகராகவும்
1992 போக்கிரி தம்பி நடிகராகவும்
1992 சின்னப் பூவை கிள்ளாதே
1992 பாலைவன ராகங்கள்
1992 தெய்வ குழந்தை
1995 என் பொண்டாட்டி நல்லவ
1996 ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
1997 தம்பிதுரை நடிகராகவும்
1998 ஆசைத் தம்பி
2002 கம்பலஹள்ளி கன்னட படம்
2002 ஜெயா
2008 உன்னை நான் தயாரிப்பாரும்

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தொடர் பாத்திரம் கதாபாத்திரத்தின் பெயர் அலைவரிசை
2009 ருத்ரா இயக்குநர் ஜீ தமிழ்
2009–2011 மகள் நடிகர் அய்யன்னார் சன் தொலைக்காட்சி
2011–2013 தங்கம் வெற்றிமாறனின் மாமனார்
2014–2016 பொன்னூஞ்சல்
2018–2020 நாயகி எம். கூத்தபிரான்
2020 மின்னலே உரையாடல் எழுத்தாளர்
2021 - தற்போது மகராசி நடிகர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Exodus Begins as Over 1,000 DMDK Cadre Join AIAD". The New Indian Express. 2012-02-08. பார்க்கப்பட்ட நாள் 2014-03-16.
  2. https://web.archive.org/web/20030629231635/http://www.chennaionline.com/entertainment/filmplus/ibrahim.asp
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தில்நாதன்&oldid=4167137" இலிருந்து மீள்விக்கப்பட்டது