சுராஜ் (இயக்குநர்)
சுராஜ் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 31, 1977[1] செங்கல்பட்டு, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1998 - தற்போது வரை |
சுராஜ் (Suraj; திசம்பர் 31, 1977) ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் படங்களில் இயங்கி வருகிறார். இவர், அதிரடி மசாலாப் படங்களை இயக்குவதில் மிகவும் பிரபலமானவர். [2]
தொழில்[தொகு]
1996 ஆம் ஆண்டில், சுந்தர் சி.யின் நகைச்சுவைத் திரைப்படமான உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி ஆகியவற்றில் சுராஜ் உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். 1997ஆம் ஆண்டில், இரசினிகாந்து நடித்த அருணாச்சலம் படத்தில் சுந்தர் சி.க்கு தொடர்ந்து உதவினார், மேலும் ஜானகிராமன் படத்தின் இணை இயக்குனராகவும் இருந்தார். 1998ஆம் ஆண்டு சரத்குமார், தேவயானி ஆகியோர் நடிப்பில் இவரது முதல் இயக்கத்தில் வெளியான மூவேந்தர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்வியடைந்தது.[3] பிறகு, சுந்தர் சி.க்கு அவரது படங்களில் உதவுவதற்காக திரும்பினார். 2006ஆம் ஆண்டில், இவர் தலை நகரம் மூலம் இயக்குனராக மீண்டும் அறிமுகமானார். இவரது வழிகாட்டியான சுந்தர் சி., ஜோதிர்மயி, வடிவேலு போன்றோர் இதில் நடித்திருந்தனர். படம் மிகப் பெரிய வெற்றிப் படமானது. அடுத்த ஆண்டு, சுராஜ் தனது மூன்றாவது படமான மருதமலையை உருவாக்கினார். இதில் அர்ஜுன், நிலா , வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், படம் வெற்றி பெற்றது. 2009இல், இவர் தனுஷ் , தமன்னா நடித்த படிக்காதவன் படத்தை இயக்கினார். மேலும் வடிவேலுவுக்கு பதிலாக நகைச்சுவை நடிகர் விவேக் நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் விநியோகித்த படமான இது வெற்றி பெற்றது. 2011இல், 1989இல் வெளியான மாப்பிள்ளை படத்தை அதே பெயரில் (மாப்பிள்ளை) என மறு ஆக்கம் செய்து வெளியிட்டார். இப்படத்தில் நடிகர் தனுஷ், ஹன்சிகா மோட்வானி, மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்திருந்தனர். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் படம் திரையரங்கத்தில் வெற்றி பெற்றது. [4] கார்த்திக், அனுசுக்கா செட்டி நடிப்பில் அலெக்ஸ் பாண்டியன் என்ற படம் 11 ஜனவரி 2013 அன்று வெளியானது. இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அலெக்ஸ் பாண்டியனின் தோல்விக்குப் பிறகு ஜெயம் ரவி, அஞ்சலி, திரிசா நடித்த சகலகலா வல்லவன் படத்தை 31 சூலை 2015 அன்று வெளியிட்டார். எதிர்மறையான விமர்சனங்களையே பெற்ற இப்படம் சராசரி வசூலையேக் கொண்டிருந்தது. பிறகு விஷால், தமன்னா, சூரி, வடிவேலு நடித்த கத்தி சண்டை படத்தை இயக்கினார். இப்படம் 23 திசம்பர் 2016 அன்று வெளியிடப்பட்ட இது விமர்சகர்களாலும் பார்வையாளர்களாலும் பெரிதும் விரும்பாமல் போனது. மேலும், வணிகரீதியாகவும் பெரும் தோல்வியடைந்தது.
சர்ச்சைகள்[தொகு]
இவரது கத்தி சண்டை பட வெளியீட்டு நிகழ்ச்சியின் போது, இவர் இந்திய படங்களில் பாலினமாக கருதப்படும் நடிகைகள் பற்றி கருத்து தெரிவித்தார். குறைந்த ஆடைகளை அணிவதற்கு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும், "சமூக வகுப்பு" பார்வையாளர்களை திருப்திப்படுத்த அவர்கள் வெளிப்படையான ஆடைகளை அணிவதை உறுதி செய்வதாகவும் கூறினார். \[5]
இது நெட்டிசன்கள் பலரையும் கோபப்படுத்தியது. மேலும், நடிகை நயன்தாரா, படத்தின் நாயகி தமன்னா ஆகியோர் சூரஜின் இத்தகைய மலிவான அறிக்கைகளை கண்டித்து பேசினர். \[6] அன்றைய தினம், இவர் மன்னிப்பு கேட்டு தனது அறிக்கையை திரும்பப் பெற்றார்.
சான்றுகள்[தொகு]
- ↑ "Iflicks: Latest Tamil cinema news - Kollywood latest news - Tamil movie stills". iflicks.in இம் மூலத்தில் இருந்து 16 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160816183718/http://www.iflicks.in/StarPage/Director/Suraj. பார்த்த நாள்: 28 June 2016.
- ↑ "Entertainment News: Latest Bollywood & Hollywood News, Today's Entertainment News Headlines" இம் மூலத்தில் இருந்து 19 January 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030119044058/http://screenindia.com/20010727/rtam3.html.
- ↑ "YouTube" இம் மூலத்தில் இருந்து 2014-05-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140529135929/http://www.youtube.com/watch?v=weajD42uSGI.
- ↑ "Chennai Box Office - April 29 to May 1, 2011". Sify.com. 4 May 2011 இம் மூலத்தில் இருந்து 25 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160425110716/http://www.sify.com/movies/boxoffice.php?id=14968998.
- ↑ "Tamannaah Bhatia praised for standing up to 'sexist' filmmaker Suraj". BBC News. 27 December 2016. https://www.bbc.com/news/world-asia-india-38441702.
- ↑ sify.com