உள்ளடக்கத்துக்குச் செல்

சார்லசு சந்தியாகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லசு சந்தியாகோ
Yang Berbahagia
YB Tuan Charles Santiago
Charles Santiago
சிலாங்கூர் கிள்ளான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
8 மார்ச் 2008 – 19 நவம்பர் 2022
(14 ஆண்டுகள்)
பெரும்பான்மை17,701 (2008)
24,685 (2013)
78,773 (2018)
தேசிய நீர் சேவைகள் ஆணைய தலைவர்
(Chairman National Water Services Commission)
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மார்ச் 2023
மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் தேர்வுக் குழுத் தலைவர்
பதவியில்
4 டிசம்பர் 2019 – 19 நவம்பர் 2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சார்லசு அந்தோனி சந்தியாகோ
(Charles Anthony s/o R. Santiago)

1 நவம்பர் 1960 (1960-11-01) (அகவை 63)
சிலாங்கூர், மலேசியா
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சிஜனநாயக செயல் கட்சி (DAP)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் ராக்யாட் (PR)
(2008–2015)
பாக்காத்தான் ஹரப்பான் (PH)(2015)
முன்னாள் கல்லூரிநியூயார்க் சமூக ஆய்வுப் பல்கலைக்கழகம்[1]
வேலைஅரசியல்வாதி

சார்லசு சந்தியாகோ (Charles Anthony s/o R. Santiago; மலாய்: Charles Anthony Santiago; சீனம்: 查尔斯圣地亚哥) (பிறப்பு: 1 நவம்பர் 1960) என்பவர் பாக்காத்தான் (Pakatan Harapan) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சி (Democratic Action Party) சார்ந்த மலேசிய அரசியல்வாதி.

இவர் மலேசிய நாடாளுமன்றத்தின் கிள்ளான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 8 மார்ச் 2008-இல் இருந்து 19 நவம்பர் 2022 வரையில், ஏறக்குறைய 14 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணி புரிந்துள்ளார்.

சீனர்கள் மிகுதியாக வாழும் கிள்ளான் தொகுதியில் நன்கு செல்வாக்கு பெற்றவராக அறியப்படுகிறார்.

பொது

[தொகு]

இவர் நவம்பர் 2018 முதல் ஏப்ரல் 2023 வரையில், பதவியில் இருந்து நீக்கப்படும் வரை தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (National Water Services Commission) (SPAN) தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[2][3]

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மனித உரிமைகள் கூட்டமைப்பின் (Association of Southeast Asian Nations Parliamentarians for Human Rights) தலைவராகவும் உள்ளார்.[4][5] அத்துடன் அவர் டிசம்பர் 2019 முதல் நவம்பர் 2022 வரை பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் தேர்வுக் குழுவின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் ஆளும் பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணிக்கு எதிராகப் போட்டியிட்டு; கிள்ளான் தொகுதியில் வெற்றிபெற்ற சார்லசு சந்தியாகோ மலேசிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்கு முன்னர், சந்தியாகோ ஒரு பொருளாதார நிபுணராகப் பணியாற்றி வந்தார்.[6]

அவர் தனியார் நீர் மயமாக்கலுக்கு எதிரான கூட்டணி; மற்றும் மலேசியாவின் உலகமயமாக்கல் நிலைத்தன்மையை கண்காணிப்பது (Coalition Against Water Privatisation and Monitoring Sustainability of Globalisation Malaysia) போன்ற அரசு சாரா நிறுவனங்களுக்காகப் பணியாற்றினார்.

இரண்டாவது முறையாக 2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலிலும்; மூன்றாவது முறையாக 2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலிலும் கிள்ளான் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசிய மக்களவை: P110 கிள்ளான் தொகுதி, சிலாங்கூர்[7][8][9][10][11]
ஆண்டு வாக்குகள் % போட்டியாளர் வாக்குகள் % வாக்குகள் பெரும்பான்மை வாக்களித்தவர்கள்
2008 சார்லசு சந்தியாகோ (ஜசெக) 37,990 65.18% சிங் டோ எங்
(Ch'ng Toh Eng) (மசீச)
20,289 34.81% 59,323 17,701 76.23%
2013 சார்லசு சந்தியாகோ (ஜசெக) 53,719 64.82% தே கிம் பூ
(Teh Kim Poo) (மசீச)
29,034 35.04% 84,214 24,685 86.75%
2018 சார்லசு சந்தியாகோ (ஜசெக) 98,279 77.34% சிங் இயூ பூன்
(Ching Eu Boon) (மசீச)
19,506 15.35% 128,536 78,773 86.06%
கைருல் சா அப்துல்லா
(Khairul Shah Abdullah) (பாஸ்)
9,169 7.22%
புவனந்தரன் கணேசமூர்த்தி
(Puvananderan Ganasamoorthy) (சுயேச்சை)
120 0.09%

மேற்கோள்கள்

[தொகு]
 1. Charles Santiago staff. "About Charles Santiago". பார்க்கப்பட்ட நாள் 6 March 2016.
 2. "Charles Santiago reappointed as SPAN chairman". The Star. 27 March 2023. பார்க்கப்பட்ட நாள் 28 March 2023.
 3. Tarrence Tan (1 November 2018). "Charles Santiago appointed SPAN chairman". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/nation/2018/11/01/charles-santiago-appointed-span-chairman/. 
 4. Abdullah, Maria Chin (4 December 2019). "Maria Chin Abdullah". facebook.com. பார்க்கப்பட்ட நாள் 9 December 2019.
 5. Charles Santiago (27 August 2017). "ASEAN Needs to Act Urgently on Myanmar Military Violence in Rakhine State". ASEAN Parliamentarians for Human Rights (APHR). Archived from the original on 31 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 17 January 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 6. "Turning thirst into trade". New Straits Times. 15 March 2003. https://news.google.com.au/newspapers?id=8KktAAAAIBAJ&sjid=YHsFAAAAIBAJ&pg=3440,2603257&dq=charles-santiago&hl=en. 
 7. "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 27 May 2010. Percentage figures based on total turnout.
 8. "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 19 April 2013. Results only available from the 2004 Malaysian general election (GE11).
 9. "KEPUTUSAN PILIHAN RAYA UMUM 13". Sistem Pengurusan Maklumat Pilihan Raya Umum. Election Commission of Malaysia]]. Archived from the original on 14 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)Results only available for the 2013 Malaysian general election|2013 election.
 10. "SEMAKAN KEPUTUSAN PILIHAN RAYA UMUM KE - 14". Election Commission of Malaysia. Archived from the original on 13 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help) Percentage figures based on total turnout.
 11. "The Star Online GE14". The Star (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 24 May 2018. Percentage figures based on total turnout.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_சந்தியாகோ&oldid=3947413" இலிருந்து மீள்விக்கப்பட்டது