உள்ளடக்கத்துக்குச் செல்

ஏழு கொடிய பாவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

ஓவியர் இரானிமசு போசு வால் வரையப்பட்டஏழு கொடிய பாவங்கள் மற்றும் நான்கு கடைசி விஷயங்கள் ஓவியம்
பரிசுத்த ஆவியும் ஏழு கொடிய பாவங்களும் . வால்டர்ஸ் கையெழுத்துப் பிரதி W.171 இலிருந்து (15 ஆம் நூற்றாண்டு)

ஏழு கொடிய பாவங்கள் என்பது முதன்மையான தீமைகள் அல்லது அடிப்படையான பாவங்கள் என்றும் அழைக்கப்படும். இந்த ஏழு தீமைகள், கிறிஸ்தவ போதனைகளில் வகைப்படுத்தப்பட்ட [1] பட்டியலின் படி, பெருமை, பேராசை, கோபம், பொறாமை, காமம், பெருந்தீனி மற்றும் சோம்பல் போன்றவைகளேயாகும். மேலும் இவை ஏழு மூலதன நற்பண்புகளுக்கு முரணானது. இந்த பாவங்கள் பெரும்பாலும் ஒருவரின் இயல்பான திறன்கள் அல்லது உணர்ச்சிகளின் அதீத பிரயோகங்கள் என்றும் கருதப்படுகிறது (உதாரணமாக, பெருந்தீனி என்பது ஒருவரின் அடிப்படை தேவையான சாப்பிடும் விருப்பத்தை அதிகப்படியாக பிரயோகம் செய்வதைக் குறிக்கிறது).

இந்த வகைப்பாடு கிறித்தவ பாதிரியாரான தெர்துல்லியன் மூலம் உருவாக்கப்பட்டு மற்றொறு பாதிரியாரான எவாக்ரியஸ் பொன்டிகஸ் மூலம் முறைப்படுத்தபட்டது. [2]

இந்த ஏழு கொடிய பாவங்களும் கத்தோலிக்க சபைகளில் உள்ள ஓவியங்கள் மற்றும் சிற்ப அலங்காரங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன மற்றும் பழைய ஆய்வுக் கட்டுரைகளில் விவாதிக்கப்பட்டுள்ளன[1]

வரலாறு[தொகு]

கிரேக்க-ரோமன் முன்னோடி[தொகு]

ஓராசு போன்ற ரோமானிய எழுத்தாளர்கள், அவர்களது காலகட்டத்தில் பல்வேறு நல்லொழுக்கங்களைப் போற்றி எழுதி வந்ததோடு பல்வேறு தீமைகளையும் பட்டியலிட்டு மக்களை எச்சரித்துள்ளனர். அவரது முதல் நிருபங்கள், "துன்பத்தை விட்டு ஓடுவது அறத்தின் ஆரம்பம், முட்டாள்தனத்தை விட்டொழிப்பது ஞானத்தின் ஆரம்பம்" என்று தொடங்குகின்றன.

ஏழு கொடிய பாவங்களுக்கு உட்பட்ட மனித இதயத்தை சித்தரிக்கும் ஒரு உருவக படம், ஒவ்வொரு பாவமும் ஒரு மிருகத்தால் குறிக்கப்படுகிறது (கடிகார திசையில்: தேரை = பேராசை; பாம்பு = பொறாமை; சிங்கம் = கோபம்; நத்தை = சோம்பல்; பன்றி = பெருந்தீனி; ஆடு = காமம்; மயில் = பெருமை) .

தற்போது கிறித்தவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏழு கொடிய பாவங்களின் வரலாறு[தொகு]

இந்த "பாவ எண்ணங்களை" பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தப்படுள்ளது: [3]

 • உடல் காரணியாக இருக்கும் பாவங்கள் (உணவு, பாலியல் இன்பம் மற்றும் பெரும் பசியால் உருவாக்கப்படும் எண்ணங்கள்)
 • உணர்ச்சி காரணியாக இருக்கும் பாவங்கள் (மனச்சோர்வு, எரிச்சலூட்டும் அல்லது புறக்கணிக்கும் மனநிலையால் ஏற்படும் எண்ணங்கள்)
 • மனம் காரணியாக இருக்கும் பாவங்கள் (பொறாமை, தற்பெருமை அல்லது பகட்டு மனநிலையால் ஏற்படும் எண்ணங்கள்)

நான்காம் நூற்றாண்டின் துறவி எவாக்ரியஸ் பொன்டிகஸ்எவாக்ரியஸ் பொன்டிகஸ் அவரது காலத்தில் சொல்லப்பட்ட ஒன்பது பாவங்களை பின்வருமாறு எட்டாகக் குறைத்தார்: [4] [5]

 1. Γαστριμαργία (gastrimargia) பெருந்தீனி
 2. Πορνεία (porneia) பால்வினைத் தொழில், விபச்சாரம்
 3. Φιλαργυρία (philargyria) பேராசை (greed)
 4. Λύπη (lypē) கவலை, பிலோகாலியா என்ற புத்தகத் தொகுப்பில் பொறாமை எனவும், அடுத்தவரின் அதிர்ஷ்டத்தைப் பற்றி அடையும் வருத்தமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது   
 5. Ὀργή (orgē) கோபம்
 6. Ἀκηδία (akēdia) கவனமின்மை, பிலோகாலியாவில் மனத்தளர்ச்சி என சித்தரிக்கப்பட்டுள்ளது
 7. Κενοδοξία (kenodoxia) பெருமை பேசுதல்
 8. Ὑπερηφανία (hyperēphania) பெருமை, சில நேரங்களில் கர்வம்,சுய மதிப்பீடு, திமிர் அல்லது பெருமை என்றும் மொழிபெயர்க்கப்படுகிறது  [6]

மேற்கண்ட எவாக்ரியஸின் பாவப் பட்டியல் இலத்தீன் மொழியில் [7] [8] ஜான் காசியன் துறவியால் மேற்கத்திய கிறித்தவ போதனை புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மேற்கத்திய கிறித்தவ பாரம்பரியத்தின் ஆன்மீக பீடங்கள் அல்லது கத்தோலிக்க பக்திகளின் போதனைகளின் பகுதியாக பின்வருமாறு மாறியுள்ளது  [3]

 1. Gula (பெருந்தீனி)
 2. Luxuria/Fornicatio (இச்சை, விபச்சாரம்)
 3. Avaritia (பேராசை)
 4. Tristitia (துயரம்/மனத்தளர்ச்சி)
 5. Ira (கோபம்)
 6. Acedia (சோம்பல் (கொடிய பாவம்))
 7. Vanagloria (வீண்)
 8. Superbia (பெருமை)

கி.பி 590 இல், போப் கிரிகோரி I பொதுவான பட்டியலை உருவாக்க எண்ணி இந்தப் பட்டியலைத் திருத்தினார். [9] கிரிகோரி (tristitia) துயரம் பாவத்தை சோம்பல் (acedia) உடனும் வீண்(vanagloria) பாவத்தை (superbia) என்பதுடனும் ஒருங்கிணைத்ததோடு லத்தீன் மொழியில் invidia பொறாமை என்ற பாவத்தை சேர்த்து பொதுவான ஒரு பட்டியலை உருவாக்கியுள்ளார். தாமஸ் அக்வினாஸ் கிரிகோரியின் இந்தப் பட்டியலை தனது இறையியலின் சுருக்கம் எனற நூலில் பயன்படுத்தியதோடு அவற்றை "மூலதன பாவங்கள்" என்று அழைக்கிறார், ஏனெனில் இவையே மற்ற எல்லா பாவங்களுக்கும் தலையாயதும் காரணிகளுமாகும். [10]

ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம், [11] மற்றும் மெதடிசம், [12] [13] போன்ற பல்வெறு கிறிஸ்தவ பிரிவுகள் இன்னும் இந்தப் பட்டியலைப் பின்பற்றி வருகிறது, மேலும் பில்லி கிரஹாம் போன்ற நவீன கிறித்தவ பரப்புரையாளர்கள் இந்த ஏழு கொடிய பாவங்களை விளக்கியுள்ளனர்.

வரலாற்று மற்றும் நவீன வரையறைகள் மற்றும் பார்வைகள்[தொகு]

கத்தோலிக்க மதகுரு ஹென்றி எட்வர்ட் மானிங்கின் கூற்றுப்படி, ஏழு கொடிய பாவங்கள் கிறித்தவர்களின் நித்திய மரணத்திற்கான ஏழு வழிகள் ஆகும்.

காமம்[தொகு]

காமம் அல்லது ஒழுக்கங்கெட்ட தன்மை ( இலத்தீன்: luxuria "சரீர") உடலின்பத்தைக் குறித்த தீவிர ஏக்கம் ஆகும். இது பொதுவாக தீவிரமான அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் ஆசையாக கருதப்படுகிறது, [14] இது கூடா ஒழுக்கம் ( விபச்சாரம் உட்பட), கற்பழிப்பு, மிருகத்தனம் மற்றும் பிற பாலியல் பாவ செயல்களுக்கு ஆதார காரணியாகும். இருப்பினும், பல சமயங்களில், இது பணம் அல்லது அதிகாரம் போன்ற கட்டுப்பாடற்ற ஆசையின் பிற வடிவங்களையும் குறிக்கலாம். காமத்தின் தூய்மையற்ற தன்மை ஒருவரை "பிசாசின் அடிமையாக" மாற்றுகிறது என்று ஹென்றி எட்வர்ட் மேனிங் விளக்குகிறார்.

காமம் பொதுவாக மிகக் கடுமையான பாவமாக கருதப்படுகிறது. [15] [16] தாமஸ் அக்வினாஸ், மனிதர்கள் விலங்குகளுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு துஷ்பிரயோகப் பிரிவு என்றும், இத்தகைய மாம்சத்தின் பாவங்கள் ஆன்மீகப் பாவங்களை விட குறைவானது என்றும் கருதுகிறார். [17]

பெருந்தீனி[தொகு]

இன்னும் வாழ்க்கை: மிகை ( ஆல்பர்ட் அங்கர், 1896)

பெருந்தீனி ( இலத்தீன்: gula ) என்பது அதிக நுகர்வு மற்றும் வீணாகும் அளவுக்கு எதையும் அதிகமாக உட்கொள்வது என்பதைக் குறிக்கும். இந்த வார்த்தை இலத்தீன் சொல்லான gluttire என்பதிலிருந்து வந்தது, விழுங்குதல் அல்லது முழுங்குதல் என்று பொருள். இதற்க்கு காரணம் என்னவென்றால், செழிப்பானவர்களின் பசி மற்றும் பெருந்தீனி, தேவைப்படுபவர்களை பசியுடன் இருக்கச்செய்யும் என்பதாலேயெ. [18]

தாமஸ் அக்வினாஸ் போன்ற இடைக்கால கிறித்தவ தேவாலயத் தலைவர்கள் பெருந்தீனியைப் பற்றி மிகவும் விரிவாக கூறியுள்ளனர், [18] அது உணவைப் பற்றிய வெறித்தனமான எதிர்பார்ப்பு மற்றும் சுவையான உணவுகள் மற்றும் விலையுயர்ந்த உணவுகளில் அதிக ஈடுபாடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக சொல்லியுள்ளனர். பெருந்தீனியின் ஐந்து வடிவங்களையும் அக்வினாஸ் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்:

 • Laute – மிகவும் விலை உயர்ந்த உணவை சாப்பிடுவது
 • Studiose – மிகவும் சுவையாக சாப்பிடுவது
 • Nimis – மிகவும் அதிகமாக சாப்பிடுவது
 • Praepropere – மிகவும் விரைவாக சாப்பிடுவது
 • Ardenter – மிகவும் ஆவலுடன் சாப்பிடுவது

பேராசை[தொகு]

ஈவ்லின் டி மோர்கன் எழுதிய மம்மோன் வழிபாடு (1909).

ஹென்றி எட்வர்ட் மானிங்கின் வார்த்தைகளில், "பேராசை ஒரு மனிதனை இந்த உலகின் சேற்றில் ஆழமாக ஆழ்த்துகிறது, அதனால் அவன் அதையே தன்னுடைய கடவுளாக ஆக்குகிறான்." அந்தளவு பெருமை ஒரு மனிதனை மாற்றிவிடும் என்று கூறுகிறார். [19] 

கிறித்தவ போதனைகளுக்கு வெளியே வரையறுக்கப்பட்டுள்ளபடி, பேராசை என்பது தன்க்கு தேவையான ஒன்றுக்கு மேற்பட்ட தேவைகளை அடைவதற்க்கு அல்லது பொருளை தன்க்கு சொந்தமாக வைத்திருப்பதற்கும், குறிப்பாக பொருள் செல்வத்தைப் பொறுத்த வரையில் உள்ள அளவுகடந்த ஆசையாகும். [20] பெருமையைப் போலவே, பேராசையும் தீமைக்கு வழிவகுக்கும் என்று அக்வினாஸ் கருதுகிறார். [21]

சோம்பல்[தொகு]

வால்டர்ஸ் கலை அருங்காட்சியகம், ஆபிரகாம் ப்ளூமெர்ட் எழுதிய கோதுமை மற்றும் தேர்களின் உவமை (1624)

சோம்பல் ( இலத்தீன்: tristitia அல்லது acedia "கவனம் இல்லாதல்") என்பது பழங்காலத்திலிருந்தே மனம், ஆன்மீகம், நோயியல் மற்றும் உடல் நிலைகள் அனைத்துக்கும் உட்பட ஒரு விசித்திரமான குழப்பத்தை குறிக்கிறது. இது எதிலும் ஆர்வமின்மை அல்லது உடல் உழைப்புக்கு விருப்பமின்மை எனவும் சொல்லப்படலாம். [22]

இறையியலின் சுருக்கம் என்ற நூலில் தூய தாமஸ் அக்வினாஸ் சோம்பலை "ஆன்மீக நன்மையை பற்றிய வருத்தம்" என்று வரையறுத்துள்ளார்.

சோம்பலின் அடிப்படை மிகவும் பரந்தது. ஆன்மீக ரீதியில், கவனமின்மை, முதலில் கிறித்தவர்களுக்கு, குறிப்பாக துறவிகளுக்கு ஏற்படும் ஒரு சோதனையைக் குறிப்பிடுகிறது, அவர்கள் கடவுளுக்கான தங்கள் கடமைகள் மற்றும் வேலைகளில் அலட்சியமாகிவிட்டதைக் கூறுகிறது.

மனரீதியாக, கவனமின்மை இன்னும் பல தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது; இவற்றில் மிக முக்கியமானது எதைப் பற்றியும் பாதிப்பின்மை, அதோடு தன்னைப் பற்றியோ அல்லது பிறரைப் பற்றியோ எந்த உணர்வும் இல்லாமை, சலிப்பு, வெறித்தனம், அக்கறையின்மை மற்றும் செயலற்ற செயலற்ற தன்மை அல்லது மந்தமான மனநிலை ஆகியவற்றைக் கொடுக்கும் மன நிலை என்பதை உள்ளடக்கியது.


உடல் ரீதியாக, கவனமின்மை என்பது உடல் இயக்கம் நிறுத்தப்படுதல் மற்றும் வேலை செய்வதில் அக்கறையின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது; அது சோம்பல் மற்றும் செயலற்ற தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. [19]

சோம்பல் என்பது பரிசுத்த ஆவியால் கொடுக்கப்பட்ட ஏழு கிருபைகளை ( ஞானம், புரிதல், அறிவுரை, அறிவு, பக்தி, வலிமை மற்றும் கர்த்தருக்குப் பயம் ) பயன்படுத்துவதை புறக்கணிப்பதை உள்ளடக்கியது; இத்தகைய புறக்கணிப்பு நித்திய வாழ்வை நோக்கிய ஆன்மீக முன்னேற்றம் குறைவதற்கும், அக்கம் பக்கம் உள்ள வீட்டாரிடம் செய்ய வேண்டிய பலவிதமான தொண்டுகளை புறக்கணிப்பதற்கும், கடவுளை நேசிப்பவர்கள் மீது ஏற்படும் பகைமைக்கும் வழிவகுக்கும்.

மேலும் சோம்பல் உடலின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கிறது, அதன் அன்றாட உணவுகளை கவனிக்காமல், மனதை மெதுவாக்குகிறது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் அதன் கவனத்தை நிறுத்துகிறது. சோம்பல் மனிதனை அவனது நீதியான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறது, இதனால் மனிதனின் செயலிழப்புக்கு ஒரு பயங்கரமான காரணமாகிறது. [23]

கோபம்[தொகு]

கோபம், ஜெகியூஸ் தே லாங் வரைந்தது

கோபம் ( ira) கோபம், ஆத்திரம் மற்றும் வெறுப்பு போன்ற தன்னால் கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள் என வரையறுக்கலாம் . பழிவாங்கும் ஆசையில் கோபம் அடிக்கடி வெளிப்படுகிறது.

கத்தோலிக்க திருச்சபையின் படி, கோபத்தின் விளைவு ஒரு அப்பாவி நபருக்கு எதிராக தேவையற்ற, வலிமையான அல்லது நீடித்திருக்கும் படி காட்டப்படும்போது, அல்லது அவர்களுக்கு அதிகப்படியான தண்டனையை பெற விரும்பும் போது அத்தகைய கோபம் பாவமாக மாறும். "கோபத்தின் காரணமாக, தனது அண்டை வீட்டாரைக் கொல்ல அல்லது அவர்களைத் தீவிரமாக காயப்படுத்த வேண்டுமென்று ஆசைப்பட்டால், அது அறத்திற்கு எதிரானது; அது ஒரு மரண பாவம்." (சிசிசி 2302) வெறுப்பு என்பது பிறர் துன்பம் அல்லது தீமைக்கு ஆளாக வேண்டும் என்று விரும்புவதன் பாவமாகும், மேலும் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் கடுமையான தீங்கை பெற விரும்பும்போது அதுவும் மரண பாவமாகும் (சிசிசி 2302-03). [24]


ஹென்றி எட்வர்ட் மேனிங், "கோபம் கொண்டவர்கள் அதற்க்கு தங்களே அடிமைகள்" என்று கருதுகிறார்.

பொறாமை[தொகு]

பொறாமையும் (invidia) பேராசை மற்றும் காமம் போன்ற மனிதனின் தீராத ஆசையால் ஏற்படும் பாவமாக வகைப்படுத்தப்படுகிறது. இது வேறொருவரின் குணாதிசயங்கள் அல்லது உடைமைகள் மீது ஏற்படும் சோகமான அல்லது கோபமான பேராசை என்று கூறப்படலாம். அது மற்றொரு பாவமான, வீண்பெருமையிலிருந்து வருகிறது [25] மேலும் இத்தகைய பாவம் ஒரு மனிதனை அவனது அண்டை வீட்டாரில் இருந்து பிரித்துவிடுகிறது.

புனித தாமஸ் அக்வினாஸின் கூற்றுப்படி, பொறாமையால் தூண்டப்படும் போராட்டம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது: முதல் கட்டத்தில், பொறாமை கொண்ட நபர் மற்றொருவரின் நற்பெயரைக் கெடுக்க முயற்சிக்கிறார்; இரண்டாம் கட்டத்தில், பொறாமை கொண்ட நபர் "மற்றொருவரின் துரதிர்ஷ்டத்தில் மகிழ்ச்சி" (மற்ற நபரை அவதூறு செய்வதில் வெற்றி பெற்றால்) அல்லது "மற்றொருவரின் செழிப்பில் துக்கம்" (அவர் தோல்வியுற்றால்) என்ற நிலையை அடைகிறார் மூன்றாவது நிலை வெறுப்பாக மாறுதல், ஏனெனில் "துக்கம் வெறுப்பை ஏற்படுத்துகிறது".

பெர்ட்ரண்டு ரசல், பொறாமை என்பது மனிதனின் மகிழ்ச்சியின்மைக்கு பொறுப்பான சக்திவாய்ந்த காரணங்களில் ஒன்றாகும், எனவும் பொறாமை படுபவர்களுக்கு துக்கத்தையும், மற்றவர்களுக்கு வலியையும் ஏற்படுத்துவதற்கான தூண்டுதலை அவர்களுக்கு அளிக்கிறது. [26] எனவும் கூறியுள்ளார்.

பெருமை[தொகு]

ஹைரோனிமஸ் போஷ் எழுதிய ஏழு கொடிய பாவங்கள் மற்றும் நான்கு கடைசி விஷயங்களிலிருந்து பெருமை பற்றிய விவரம் 1500

பெருமை ( superbia ), ஹப்ரிஸ் ( பண்டைய கிரேக்கத்தில் ὕβρις ) அல்லது பயனற்ற தன்மை என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்து தற்போது வரை பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பட்டியலிலும் உள்ள ஏழு கொடிய பாவங்களில் இது முதன்மையும் மோசமானதாகவும் கருதப்படுகிறது, [27] இது மற்ற மூலதன பாவங்களின் ஆதாரமாகவும் கருதப்படுகிறது. பெருமை என்பது பணிவு என்ற நற்பண்புக்கு எதிரானதாகும். [28]

பெருமை அனைத்து பாவங்களுக்கும் தாய் என்று முத்திரை குத்தப்பட்டு, பிசாசின் மிக முக்கியமான பண்பாகக் கருதப்படுகிறது. சிஎஸ் லூயிஸ் விஞ்சி மிகையளவான கிறித்தவம் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார், பெருமை என்பது "கடவுளுக்கு எதிரான" நிலை, மட்டுமல்ல அகங்காரமும் சுயமும் கடவுளை நேரடியாக எதிர்க்கும் நிலை. மேலும் "அசுத்தம், கோபம், பேராசை, குடிப்பழக்கம் மற்றும் அனைத்து பாவங்களையும் ஒப்பிடுகையில் பெருமையே மற்ற எல்லாத் தீமைகளுக்கும் இட்டுச் செல்கிறது மற்றவையெல்லாம் வெறும் வெறுக்கத்தக்கவையே. பெருமையின் மூலம்தான் தேவதை ஒன்று பிசாசாக மாறியது. இது முழு கடவுள்-எதிர்ப்பு மனநிலையாகும்." [29] பெருமை என்பது கடவுளிடமிருந்து மனிதனின் ஆவியைத் துண்டிக்கிறது, மட்டுமல்லாமல் அவருடைய உயிர் மற்றும் கருணை-தரும் பிரசன்னம்ஆகியவற்றையும் துண்டிக்கிறது.

பெருமையின் நவீன பயன்பாடு விவிலியப் நீதிமொழியில் சுருக்கமாகப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. "அழிவுக்கு முன்னானது பெருமை, வீழ்ச்சிக்கு முன்னானது அகந்தை" (சுருக்கமாக "வீழ்ச்சிக்கு முன்னானது பெருமை", நீதிமொழிகள் 16:18). "கண்மூடித்தனமான பெருமை" பொது அறிவுக்கு எதிரான முட்டாள்தனமான செயல்களை ஏற்படுத்துகிறது. [30] அரசியல் பகுப்பாய்வில், "தற்பெருமை" என்பது பல ஆண்டுகளாக பெரும் சக்தியைக் தன்னகத்தே கொண்டுள்ள தலைவர்கள், தங்களின் தற்பெருமை காரணமாக எவ்வாறு மேலும் மேலும் பகுத்தறிவற்ற தன்னம்பிக்கை மற்றும் அறிவுரைகளை அவமதிப்பவர்களாக மாறுகிறார்கள் என்பதை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. [30]

வரலாற்றுப் பாவங்கள்[தொகு]

கவனக்குறைவு[தொகு]

கவனக்குறைவு மொசைக், நோட்ரே-டேம் டி ஃபோர்வியரின் பசிலிக்கா

அசிடியா (லத்தீன், acedia "கவனக்குறைவு"; கிரேக்க மொழியில் ἀκηδία) என்பது ஒருவர் செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை சரிவர கவனிக்காமல் இருப்பதைக் குறிக்கும். இது அக்கறையற்ற கவனக்குறைவு எனவும் மகிழ்ச்சி இல்லாமல் மனச்சோர்வு எனவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மனச்சோர்வுடன் தொடர்புடையது; கவனக்குறைவு ஒருவரின் நடத்தையை விவரிக்கிறது ஆனால் மனச்சோர்வு அதை உருவாக்கும் உணர்ச்சியைக் குறிக்கிறது. ஆரம்பகால கிறிஸ்தவ சிந்தனையில், கவனக்குறைவு என்பது மகிழ்ச்சியின் பற்றாக்குறை கடவுளின் நன்மையை அனுபவிக்க வேண்டுமென்றே மறுப்பதாகக் கருதப்பட்டது. மாறாக, அக்கறையின்மை என்பது தேவைப்படும் நேரங்களில் மற்றவர்களுக்கு உதவ மறுப்பதாகக் கருதப்பட்டது.

கவனக்குறைவு என்பது கிரேக்க வார்த்தையான κηδεία இன் எதிர்மறை வடிவமாகும்( Kēdeia ), இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டைக் கொண்டுள்ளது. 'Kēdeia' என்பது இறந்தவர்களுக்கான துணையும், அன்பையும் மற்றும் மரியாதையையும் குறிப்பாகக் குறிக்கிறது. [31]

போப் கிரிகோரி இதை துயரம் என்ற பாவத்தை இதனுடன் இணைத்து சோம்பலாக தனது பட்டியலில் சேர்த்தார். தாமஸ் அக்வினாஸ் பட்டியலின் விளக்கத்தில் இதனை விவரித்தபோது, "மனதின் அமைதியின்மை" என்று கூறியுள்ளார், அமைதியின்மை மற்றும் உறுதியற்ற தன்மை போன்ற சிறிய பாவங்களுக்கு இதுவே முன்னோடியாக இருந்துள்ளது. [32]

வீண்பெருமை[தொகு]

வீண்பெருமை (லத்தீன், vanagloria ) என்பது நியாயமற்ற மற்றும் தகுதியில்லாத பெருமையாகும். போப் கிரிகோரி அதை பெருமையின் ஒரு வடிவமாகக் கருதி முதன்மை பாவங்களை பட்டியலிடும் போது வீண் பெருமையை பெருமையுடன் இணைத்துக் கொண்டார். அக்வினாஸின் கூற்றுப்படி, இது பொறாமையின் முன்னோடியாகும்.

லத்தீன் சொல் gloria (புகழ்ச்சி) தோராயமாக பெருமை பேசுவதைக் குறிக்கிறது, இருப்பினும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு பெருமை என்ற வர்த்தைக்கு பிரத்தியேகமாக நேர்மறையான பொருளைக் கொண்டுள்ளது. வரலாற்று ரீதியாக, வீண் என்ற சொல் பயனற்றது என்று பொருள்படும் (நவீன வெளிப்பாட்டில் "வீண்" என்ற பொருளில் தக்கவைக்கப்பட்டது), ஆனால் பதினான்காம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட தற்காதலின் குறிப்புகளை இன்றும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. [33]

ஒப்புதல் வாக்குமூலங்களின் வடிவங்கள்[தொகு]

ஜேசுட் அறிஞர் ராபர்டோ புசா 2009 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி. ஆண்களால் பாதிரியார்களிடம் ஒப்புக்கொள்ளப்படும் பொதுவான கொடிய பாவம் காமமாகவும் பெண்களால் ஒப்புக்கொள்ளப்படும் பொதுவான கொடிய பாவம் பெருமையாகவும்[34] உள்ளதாக அறிய முடிகிறது. இந்த வேறுபாடுகள் ஒவ்வொரு பாலினமும் செய்த உண்மையான எண்ணிக்கையிலான மீறல்களால் ஏற்பட்டதா அல்லது "கணக்கிடப்படும்" அல்லது ஒப்புக்கொள்ளப்பட வேண்டியவற்றின் மாறுபட்ட கருத்துக்கள் கவனிக்கப்பட்ட வடிவத்தை ஏற்படுத்தியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. [35]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Tucker, Shawn (2015). The Virtues and Vices in the Arts: A Sourcebook. Cascade. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1625647184.
 2. "The Seven Deadly Sins". பார்க்கப்பட்ட நாள் 2023-09-30.
 3. 3.0 3.1 Refoule, F. (1967) "Evagrius Ponticus," In New Catholic Encyclopaedia, Vol. 5, pp. 644f, Staff of Catholic University of America, Eds., New York: McGraw-Hill.
 4. Evagrio Pontico, Gli Otto Spiriti Malvagi, trans., Felice Comello, Pratiche Editrice, Parma, 1990, p.11-12.
 5. Evagrius (22 June 2006). The Greek Ascetic Corpus. Oxford and New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0199297088.
 6. In the translation of the Philokalia by Palmer, Ware and Sherrard.
 7. "NPNF-211. Sulpitius Severus, Vincent of Lerins, John Cassian – Christian Classics Ethereal Library".
 8. The Institutes.
 9. "For pride is the root of all evil, of which it is said, as Scripture bears witness; Pride is the beginning of all sin. [Ecclus. 10, 1] But seven principal vices, as its first progeny, spring doubtless from this poisonous root, namely, vain glory, envy, anger, melancholy, avarice, gluttony, lust." Gregory the Great, Moralia in Iob, book XXXI
 10. "SUMMA THEOLOGICA: The cause of sin, in respect of one sin being the cause of another Prima Secundae Partis, Q. 84; I-II,84,3)". பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.
 11. "Mighty Menacin' Midianites". பார்க்கப்பட்ட நாள் 26 March 2017.
 12. "What Would a United Methodist Jesus Do?". பார்க்கப்பட்ட நாள் 26 March 2017.
 13. "Falling angels : allegories about the 7 sins and 7 virtues". பார்க்கப்பட்ட நாள் 6 August 2023.
 14. "Definition of LUST". பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.
 15. Dorothy L. Sayers, Purgatory, Introduction, pp. 65–67 (Penguin, 1955).
 16. Pyle, Eric (31 December 2014). William Blake's Illustrations for Dante's Divine Comedy: A Study of the Engravings, Pencil Sketches and Watercolors (in ஆங்கிலம்). McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781476617022.
 17. Aquinas, St Thomas (1 January 2013). Summa Theologica, Volume 4 (Part III, First Section) (in ஆங்கிலம்). Cosimo. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781602065604.
 18. 18.0 18.1 Okholm, Dennis. "Rx for Gluttony". Christianity Today, Vol. 44, No. 10, 11 September 2000, p.62
 19. 19.0 19.1 Manning, Henry Edward (1874). Sin and Its consequences.
 20. "greed". (5th). (2016). Houghton Mifflin Harcourt. 
 21. Summa Theologica (All Complete & Unabridged 3 Parts + Supplement & Appendix + interactive links and annotations). e-artnow.
 22. "the definition of sloth". பார்க்கப்பட்ட நாள் 3 May 2016.
 23. Lyman, Stanford (1978). The Seven Deadly Sins: Society and Evil.
 24. International Handbook of Anger. p. 290
 25. Aquinas, Thomas. Summa Theologica, Volume 3 (Part II, Second Section).
 26. Russell, Bertrand (1930). The Conquest of Happiness. New York: H. Liverwright. p. 86.
 27. Climacus, John. The Ladder of Divine Ascent, Translation by Colm Luibheid and Norman Russell.
 28. Acquaviva, Gary J. Values, Violence and Our Future. Rodopi.
 29. Mere Christianity, C.S. Lewis, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-065292-0
 30. 30.0 30.1 Hollow, Matthew (2014). "The 1920 Farrow's Bank Failure: A Case of Managerial Hubris". Journal of Management History (Durham University) 20 (2): 164–178. doi:10.1108/JMH-11-2012-0071. https://www.academia.edu/6081830. பார்த்த நாள்: 1 October 2014. 
 31. Henry George Liddell and Robert Scott. A Greek-English Lexicon. Revised by Sir Henry Stuart Jones and Roderick McKenzie. Oxford: Clarendon Press, 1940.
 32. McCarron, Bill; Knoke, Paul (2002), "From Gent to Gentil: Jed Tewksbury and the Function of Literary Allusion in A Place to Come To", Robert Penn Warren Studies
 33. Oxford English dictionary
 34. "Two sexes 'sin in different ways'". http://news.bbc.co.uk/2/hi/7897034.stm. 
 35. "True Confessions: Men And Women Sin Differently". பார்க்கப்பட்ட நாள் 24 July 2010.

மேலும் படிக்க[தொகு]

 •  
 •  
 • Schumacher, Meinolf [de] (2005): "Catalogues of Demons as Catalogues of Vices in Medieval German Literature: 'Des Teufels Netz' and the Alexander Romance by Ulrich von Etzenbach." In In the Garden of Evil: The Vices and Culture in the Middle Ages. Edited by Richard Newhauser, pp. 277–290. Toronto: Pontifical Institute of Mediaeval Studies.
 • The Concept of Sin, by Josef Pieper
 • The Traveller's Guide to Hell, by Michael Pauls & Dana Facaros
 • Sacred Origins of Profound Things, by Charles Panati
 • The Faerie Queene, by Edmund Spenser
 • The Seven Deadly Sins Series, Oxford University Press (7 vols.)
 • Rebecca Konyndyk DeYoung, Glittering Vices: A New Look at the Seven Deadly Sins and Their Remedies, (Grand Rapids: BrazosPress, 2009)
 • Solomon Schimmel, The Seven Deadly Sins: Jewish, Christian and Classical Reflections on Human Psychology, (New York: Oxford University Press, 1997)
 •  
 • Tucker, Shawn. The Virtues and Vices in the Arts: A Sourcebook, (Eugene, OR: Cascade Press, 2015)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழு_கொடிய_பாவங்கள்&oldid=3849733" இலிருந்து மீள்விக்கப்பட்டது