பில்லி கிரகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்லி கிரகாம்
Billy Graham bw photo, April 11, 1966.jpg
பில்லி கிரஹாம் (1966 இல்)
பிறப்புவில்லியம் ஃபிராங்க்ளின் கிரஹாம் Jr.
நவம்பர் 7, 1918 (1918-11-07) (அகவை 104)
சார்லட், வட கரோலினா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 21, 2018(2018-02-21) (அகவை 99)
மொண்ட்ரியாட், வட கரொலைனா
தேசியம்அமெரிக்கர்
பணிநற்செய்தியாளர்
பட்டம்டாக்டர் (கௌரவ)
சமயம்நற்செய்திக் கிறித்தவர்
வாழ்க்கைத்
துணை
ரூத் கிரஹாம்
(திருமணம். 1943–2007; இறப்பு)
பிள்ளைகள்ஃபிராங்கிளின்
நெல்சன்
வர்ஜீனியா
ஆனி
ரூத்
கையொப்பம்
வலைத்தளம்
www.billygraham.org

வில்லியம் பிராங்கிளின் அல்லது பில்லி கிரகாம் (Billy Graham, நவம்பர் 7, 1918 - பெப்ரவரி 21, 2018) அமெரிக்காவைச் சார்ந்த கிறித்தவ நற்செய்தியாளர். தெற்கத்திய ஞானஸ்நான சபையின் ஊழியராக[1] கிறிஸ்தவ வாழ்கையைத் தொடங்கிய இவர், உலகக் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்தது 1949ல் தான். இவர் மிகப்பெரிய உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு கூட்டங்களை நடத்தி மக்களை ஈர்த்தார். இவரது வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரசங்கங்கள் இன்றும் பல நாடுகளில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

பில்லி கிரஹாம் பிரசங்கித்த நாடுகள்[2]

இவர் அமெரிக்காவின் பல அதிபர்களுக்கு ஆன்மீக ஆலோசகராக இருந்துள்ளார். அவர்களில் டுவைட் டி ஐசன்கோவர், லின்டன் ஜான்சன் மற்றும் ரிச்சர்டு நிக்சன் போன்றோர் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக அறியப்பட்டனர். குடிசார் உரிமைகள் இயக்கம் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இவர் தனது எழுப்புதல் கூட்டங்களுக்கு வரும் இருவினத்தவருக்கும் ஒரே மாதிரியான நாற்காலிகள் வழங்கப்பட வேண்டும் என கோரினார். இதன் தொடர்ச்சியாக 1957ம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் நடந்த கூட்டத்தில் அவ்வியக்கத்தின் தலைவரான மார்ட்டின் லூதர் கிங்கை தன்னுடன் சேர்ந்து போதிக்க அழைத்தார். மேலும் 1960ம் ஆண்டு திரு கிங் அவர்கள் கைது செய்யப்பட்டபோது இவர்தான் அவரை பிணையில் எடுத்து சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indepth: Billy Graham". CBC. Archived from the original on December 11, 2013. http://archive.is/eqYp. பார்த்த நாள்: December 1, 2011. 
  2. "Pilgrim Preacher: Billy Graham, the Bible, and the Challenges of the Modern World". Museum of the Bible. 21.4.2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_கிரகாம்&oldid=3428966" இருந்து மீள்விக்கப்பட்டது