வீட்டுப் பன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீட்டுப் பன்றி
Sus scrofa scrofa.jpg
சுவிட்சர்லாந்தில், சோலோதர்ன் என்னும் இடத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வீட்டுப் பன்றி ஒன்று
வளர்ப்பு விலங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஆர்ட்டியோடக்டைலா
குடும்பம்: சுளிடீ
பேரினம்: சுசு
இனம்: S. scrofa
துணையினம்: S. s. டொமெசுட்டிக்கா
மூவுறுப்புப் பெயர்
சுசு இசுக்குரோஃபா டொமசுட்டிகா
லின்னேயசு, 1758
வேறு பெயர்கள்
சுசு இசுக்குரோஃபா டொமசுட்டிகா

வீட்டுப் பன்றி என்பது, வளர்ப்பு விலங்குகளுள் ஒன்று. இது இதன் இறைச்சிக்காகப் பெயர் பெற்றது. சில வீட்டுப் பன்றி வகைகளின் உடலில் கம்பளி போலத் தடித்த உரோமங்கள் காணப்படினும், பெரும்பாலான பன்றிகளின் உடலில் மிகவும் அரிதாகவே உரோமங்கள் காணப்படுகின்றன. வீட்டுப் பன்றிகள், காட்டுப் பன்றிகள் எனப்படும் காட்டில் வாழும் பன்றி இனத்தின் ஒரு துணை இனம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து. இதன்படி வீட்டுப் பன்றிகளின் அறிவியல் பெயர் சுசு இசுக்குரோஃபா டொமசுட்டிகசு (Sus scrofa domesticus) ஆகும். காட்டுப்பன்றி சுசு இசுக்குரோஃபா (Sus scrofa) என்னும் அறிவியல் பெயருடையது. சில உயிரியலாளர்கள் வீட்டுப் பன்றிகள் தனியான இனத்தைச் சேர்ந்தவையாகக் கருதுகிறார்கள். இக் கருத்தின் அடிப்படையில் வீட்டுப் பன்றியின் அறிவியல் பெயர் சுசு டொமசுட்டிக்கசு (Sus domesticus) என்பதாகும்.


மிகப்பழைய காலத்திலேயே பன்றிகள் மனிதனோடு தொடர்பு பட்டிருந்ததற்குச் சான்றுகள் உண்டு. தப்பிச் சென்ற வீட்டுப் பன்றிகள் பல கட்டாக்காலியாக உலகின் பல பாகங்களிலும் உள்ளன. இவை சூழலுக்குக் குறிப்பிடத்தக்க சேதத்தை விளைவிக்கின்றன.

தோற்றம்[தொகு]

கிமு 13,000 - 12,700 காலப்பகுதியிலேயே டைகிரிசுப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளை வீட்டில் வளர்ப்பது இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. தற்காலத்தில் சில நியூ கினியர்கள் செய்வதுபோல் அக்காலத்திலும் காடுகளைலேயே வைத்துப் பன்றிகள் வளர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. கிமு 11,400 ஆம் ஆண்டுக்குப் முற்பட்ட பன்றிகளில் எச்சங்கள் சைப்பிரசுப் பகுதியில் காணப்பட்டன. இப் பன்றிகள் தலைநிலத்தில் இருந்தே கொண்டுவரப் பட்டதாகக் கருதப்படுவதால், தலை நிலத்தில் பன்றி வளர்ப்பு முன்னரேயே தொடங்கியிருக்கக்கூடும் எனவுக் கூறுகின்றனர். சீனாவிலும் தனியாகப் பன்றிகளை வீட்டில் வளர்ப்பது இடம்பெற்றதாகத் தெரிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுப்_பன்றி&oldid=2223826" இருந்து மீள்விக்கப்பட்டது