ஈகை
Appearance
கொடையிலிருந்து வேறுபட்டது ஈகை (ⓘ). திருவள்ளுவர் ஈகைக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
வறியார்க்குஒன்று ஈவதேஈகை; மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து
என்னும் குறளில் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்ககால மக்கள் எண்ணி வாழ்ந்தனர்.முகம்மது நபி காலத்தில் ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. முப்பது நாட்கள் நோன்பிருந்து சிறப்பிக்கும் திருநாளாகும்.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஈகை