விலங்குகளுடனான பாலுறவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விலங்குகளுடனான பாலுறவு (Zoophilia) என்பது மாந்தர் ஒருவர் மனிதரல்லாத விலங்குகளுடன் பாலுறவு கொள்ளுதல் ஆகும். ஜூப்பியா என்ற கிரேக்க வார்த்தைக்கு விலங்குகளுடன் காதல் கொள்ளுதல் என்று பொருள். பெஷ்ட்டியாலிட்டி (Bestiality) என்பது மனிதன் விலங்குகளோடு பாலுறவு கொள்ளுதல் ஆகும்.

ஆய்வு[தொகு]

விலங்களுடனான பாலுறவு கொள்ளுதலை "மனச்சிதைவு நோயின் வெளிப்பாடு" என ஆராய்ச்சியாளர் Stephanie LaFarge தெரிவிக்கிறார். இவர் நியூ ஜெர்சி மருத்துவ பள்ளியில் துணை பேராசிரியாக இருப்பவர். இவ்வாறான பாலுறவு கொள்ளும் நபர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தினைக் குறிப்பிடுகிறார். இது ஒரு மன நோய் என்றும், இவ்வாறு செய்பவர்களை மனநோயாளிகள் என்றும் கூறுகிறார். மற்றொரு ஆராய்ச்சியாளர் Kinsey நான்கு சதவீத ஆண்களும், மூன்று புள்ளி ஐந்து சதவீத பெண்களும் இவ்வாறான உறவில் ஈடுபடுவதாகக் குறிப்பிடுகிறார்.

வரலாறு[தொகு]

8000 BC லிருந்து இந்த விதமான உடல் உறவு இருந்ததற்கான அத்தாட்சியாக வடக்கு இத்தாலியில் காணப்பட்ட ஓவியம் உள்ளது. இந்தியாவில் உள்ள கஜோரோ கோயில் வெளிப்புறத்தில் உள்ள சிற்பத்தில் ஒரு குதிரையுடன் ஒரு ஆணின் இணைவுக் காட்சி உள்ளது.

சட்டத்தின் பார்வையில்[தொகு]

சில நாடுகளில் விலங்குகளுடனான பாலுறவு கொள்ளுதல் தடை செய்யப்படா விட்டாலும், பெரும்பாலான நாடுகளில் மிருக வதைச் சட்டத்தின் கீழும், இயற்கைக்கு மாறான குற்றம் என்ற வகையிலும் இவ்வகைப் பாலுறவு சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தியத் தண்டனைச் சட்டம் IPC377 ல் இவ்வாறான பாலுறவுக் குற்றம் என கூறப்பட்டுள்ளது.

இந்து, கிறித்துவ மக்களின் திருமணச் சட்டத்தில் தகாத உறவுகளோடு விலங்குகளோடு வைத்துக் கொள்ளும் புணர்ச்சியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவியல் ரீதியாக[தொகு]

விலங்குடன் புணர்தல் மனிதர்களுக்கு ஆரோக்கியம் இல்லை என்றே அறிவியல் எடுத்துரைக்கின்றது. விலங்கின் எச்சில், சிறுநீர், கழிவு, யோனியின் நீர் போன்றவற்றின் மூலம் புரூசிலோசிஸ், க்க்யூ காய்ச்சல், எலி காய்ச்சல் , டாக்சோகேரிஸ் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பெண்ணின் பெண் உறுப்பில் செலுத்தப்படும் விலங்கின் விந்து தீவிர ஒவ்வாமை ஏற்படுத்தி மரணம் கூட நிகழலாம்.

மிருகத்தின் விந்து, பெண்ணையோ, ஆணின் விந்து பெண் விலங்கையோ கருவுறச் செய்ய இயலாது என்றும் இதற்குக் குரோமசோம்களின் முரண்பாடு முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்குகளுடனான_பாலுறவு&oldid=3711397" இலிருந்து மீள்விக்கப்பட்டது