ஈட்டி எறிதல் (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:35, 10 பெப்பிரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)

ஈட்டி எறிதல் என்பது ஈட்டி அல்லது ஈட்டி போன்ற ஒன்றை எவ்வளவு தூரம் எறிய முடியும் என்று பார்க்கும் ஒரு தட கள விளையாட்டு ஆகும். ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு தட களத்தில் ஓடிவந்து அந்த விசையுடன் எறிவர். ஒவ்வொருவருக்கும் மூன்று சுற்றுக்கள் தரப்படும். ஈட்டியின் முனை முதலில் நிலைத்தைக் குத்தினால், அந்த முனையில் இருந்து தூரம் கணக்கிடப்படும். ஈட்டி கிடையாக போய் விழுந்தால், ஈட்டியின் இறுதி முனையில் இருந்து தூரம் கணக்கிடப்படும். எந்தப் போட்டியாளர் அதிக தூரம் எறிகிறாரோ அவரே வெற்றியாளர்.