அஞ்சு பாபி ஜார்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஞ்சு பாபி ஜார்ஜ்
தனித் தகவல்கள்
பிறந்த நாள்19 ஏப்ரல் 1977 (1977-04-19) (அகவை 45)
பிறந்த இடம்சங்கனாச்சேரி, கேரளா, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா

அஞ்சு பாபி ஜார்ஜ் (பிறப்பு 19 ஏப்ரல் 1977) ஒர் இந்தியத் தடகள வீராங்கனை ஆவார். 2003-ம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகளப் போட்டியில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். மேலும் இவரே உலக தடகளப் போட்டியில் வென்ற முதல் இந்திய தடகள வீரர் ஆவார். 2003-04 -ம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.

தனி வாழ்க்கை[தொகு]

அஞ்சு ராபர்ட் பாபி ஜார்ஜ்-ஐ மணந்தார், மும்முறை தாண்டுதல் போட்டியில் முன்னாள் தேசிய வெற்றியாளரான இவர் அஞ்சுவின் பயிற்றுனரும் ஆவார். தற்போது அஞ்சு இந்திய சுங்கத் துறையில் பணிபுரிகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சு_பாபி_ஜார்ஜ்&oldid=3399459" இருந்து மீள்விக்கப்பட்டது