அபினவ் பிந்த்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபினவ் பிந்த்ரா
Abhinav Bindra and Mary Kom - British High Commission, Delhi, 27 July 2011 (cropped).jpg
பிறப்புசெப்டம்பர் 28, 1982 (1982-09-28) (அகவை 39)
தேராதூன், இந்தியா
இருப்பிடம்சண்டிகர், இந்தியா
பணிதுப்பாக்கி சுடுதல் வீரர்
தொழிலதிபர்
உயரம்173cm / 5'8"
எடை65 kg

அபினவ் பிந்த்ரா (பிறப்பு செப்டம்பர் 28, 1982) ஒரு இந்தியத் தொழிலதிபரும் ஒலிம்பிக் விளையாட்டு வீரரும் ஆவார். இவரின் வணிக நிறுவனம், அபினவ் ஃபியூச்சரிஸ்டிக்ஸ், கணினி விளையாட்டுகளுக்காக பொருட்களை விற்பனை செய்கிறது. விளையாட்டு உலகில் குறி பார்த்துச் சுடுதல் செய்கிறார்.

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை பெற்றார். இவர் ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றவர்களில் முதலாம் இந்தியர் ஆவார்.

இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்[தொகு]

ரியோ டி ஜனேரோ 2016 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக ஒலிம்பிக் விளையாட்டு வீரர் அபினவ் பிந்த்ரா இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்..[1]

வெளி இணைப்புக்கள்[தொகு]

அபினவ் பிந்த்ராவின் வணிக நிறுவனம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஒலிம்பிக் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்". தமிழ் இந்து. பார்த்த நாள் May 13, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபினவ்_பிந்த்ரா&oldid=2711979" இருந்து மீள்விக்கப்பட்டது