கீத் சேத்தி
கீத் ஸ்ரீ ராம் சேத்தி | |
---|---|
பிறப்பு | தில்லி | ஏப்ரல் 17, 1961
தேசியம் | இந்தியா |
பணி | பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் |
கீத் சேத்தி (Geet Sethi) இந்திய பில்லியர்ட்சு விளையாட்டு வீரர் ஆவார். இவ் விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கு கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் இந்தியாவின் பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
பிறப்பு
[தொகு]கீத் ஸ்ரீ ராம் சேத்தி இந்தியாவின் புது டெல்லியில் 1961-இல் ஒரு பஞ்சாபி குடும்பதில் பிறந்தார். பின் அகமதாபாத்தில் வளர்ந்தார்.
சாதனை
[தொகு]கீத் சேத்தி ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்; பதக்கங்களையும் வென்றுள்ளார்.
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
ஆண்களுக்கான பில்லியர்ட்ஸ் விளையாட்டு | ||
நாடு இந்தியா | ||
Asian Games | ||
1998 Bangkok | Teams | |
1998 Bangkok | Singles | |
2002 Busan | Teams | |
2002 Busan | Singles | |
2006 Doha | Teams |
விருது
[தொகு]1986 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருது மற்றும் அருச்சுனா விருதும், 1992 இல் இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதும், 1993 இல் கே. கே. பிர்லா விருதும் வழங்கப்பட்டது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Geet Sethi Profile". ILoveIndia.com. pp. "Sport in India" section. பார்க்கப்பட்ட நாள் 30 November 2007.
- ↑ "Geet Sethi Page". TNQ.in. TNQ Sponsorship (India) Pvt. Ltd. 1998. பார்க்கப்பட்ட நாள் 30 November 2007.
- 11-10-2013-இல் வெளிவந்த தினத்தந்தி சிறுவர் தங்க மலர் நூல்
- தெரிந்து கொள்ளுங்கள்: பில்லியர்ட்ஸின் மறுபெயர்