விஜேந்தர் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜேந்தர் குமார்
பிறப்பு(1985-10-29)அக்டோபர் 29, 1985
கலுவாஸ், அரியானா இந்தியா இந்தியா
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
பணிகுத்துச்சண்டையாளர், நடு எடை பிரிவு
உயரம்182 cm (6 அடி 0 அங்)

விஜேந்தர் குமார் சிங் பெனிவால் (இந்தி: विजेन्द्र सिंह बेनीवाल) ஓர் இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர் ஆவார். பெய்ஜிங்கில் நடைபெறும் 2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இந்திய ஒலிம்பிக் அணியை சேர்ந்த விஜேந்தர் நடு எடை பிரிவுப் (middleweight) போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.இந்த விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை உடையவர்.இந்த வெற்றியை பாராட்டி ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் பெற்றார்.2009ஆம் ஆண்டு நடந்த உலக தொழில்முறையல்லாத குத்துச்சண்டை சாதனைப்போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.குவாங்சோ ஆசிய விளையாட்டுக்களில் 75கி குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

மார்ச்சு 8, 2013 அன்று மொகாலியின் சிராக்பூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்ககத்திலிருந்து பஞ்சாப் காவல்துறை 130 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை இரு மகிழுந்துகளிலிருந்து கைப்பற்றினர்;இந்த வழக்கில் விஜேந்தர் போதைப்பொருளை பயன்படுத்தவோ அல்லது விற்கவோ முயன்றிருக்கலாம் எனக் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்[1] இந்த இரு மகிழுந்துகளில் ஒன்று விஜேந்தரின் மனைவியினுடையது என்றும் மற்ற மகிழுந்திலிருந்து 10 கிலோ எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மார்ச்சு 3 அன்று கைது செய்யப்பட்ட குற்றவாளி அனூப் சிங் கஹ்லோன் விஜேந்தருக்கும் உடன் குத்துச் சண்டையாளர் இராம்சிங்கிற்கும் போதைப்பொருள் விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளான். மேலும் அனூப் பெரிய அளவில் பன்னாட்டுக் கடத்தலில் ஈடுபட்டிருந்ததாகவும் காவலர்கள் ஐயுறுகின்றனர். தற்போது இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-11. பார்க்கப்பட்ட நாள் 2013-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜேந்தர்_குமார்&oldid=3572025" இலிருந்து மீள்விக்கப்பட்டது