ஹோமி மோதிவாலா
ஹோமி டேடி மோதிவாலா (Homi Dady Motivala பிறப்பு: சூன் 18, 1958) ஓர் இந்தியப் பாய்மரகுப் போட்டி விளையாட்டு வீரர் ஆவார். [1]
1993 ஆம் ஆண்டிற்கான படகுப்பயணத்தில் சிறந்த செயல்திறனுக்கான அருச்சுனா விருதும், 1994-95 ஆம் ஆண்டுக்கான விளையாட்டில் ஒட்டுமொத்த சிறந்த செயல்திறனுக்காக தயான் சந்த் கேல் ரத்னா விருதையும் பி கே. கார்க்குடன் இணைந்து பெற்றார் [2] பயிற்சியில் சிறந்து விளங்கியதற்காக துரோணாச்சார்யா விருது பெற்றார். 2002 ஆம் ஆண்டிற்கான படகுப் போட்டியில் [3] கார்க்குடன் இணைந்து, பெய்ஜிங் மற்றும் ஹிரோஷிமாவில் முறையே 1990 மற்றும் 1994 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துணிவாண்மைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். [4] 1993 ஆம் ஆண்டு இதே பிரிவில் உலக வாகையாளர் பட்டம் பெற்றார்.
மோதிவாலா இந்திய கடற்படையின் தளபதி பதவியில் உள்ளார்.1983 இல் அதன் வீரதீரச் செயலுக்கான சௌர்ய சக்கர விருதைப் பெற்றார்.
சான்றுகள்
[தொகு]- ↑ Garg, Chitra (2010). Indian champions : profiles of famous Indian sportspersons. Delhi: Rajpal & Sons. pp. 365–366. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170288527.
- ↑ "List of Rajiv Khel Ratna Awardees". Sports Authority of India. Archived from the original on 12 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.
- ↑ "National Sports Awards". Yachting Association of India. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.
- ↑ "Asian Games Sailing". Yachting Association of India. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.