விஜய் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜயகுமார்
வாழிடம்அமெரிக்கா
தேசியம்இந்தியன்
துறைரோபோடிக்ஸ்
பணியிடங்கள்பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம்

விஜயகுமார் (Vijay Kumar, பிறப்பு ஏப்ரல் 12, 1962) ஒரு இந்திய எந்திரனியல் வல்லுனர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பென்சில்வானியா பவுண்டேசன் பேராசியர். இவர் இப்பல்கலைக்கழகத் துறை முதல்வராக ஜூலை 01 முதல் பதவி ஏற்க உள்ளார்[1]. இவரது தலைமையின் கீழ் உள்ள குழு தரை மற்றும் வான் (இரு வெளியிலும்) தன்னிச்சையாக இயங்ககூடிய எந்திரங்கள் கண்டிபிடிப்பது, குழு நடதைகளுக்காக உயிர் -ஊக்க வழிமுறைகள் வடிவமைத்தல், மற்றும் ரோபோ திரள்கள் வடிவமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது..[2][3] இவரது குழு பல மாநாடுகளில் சிறந்த கட்டுரைகளுக்கான பரிசுகளையும் வென்றுள்ளது.

கல்வி[தொகு]

 • பி.டெக். , மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மே-1983, இந்திய தொழில்நுட்பக் கழகம், கான்பூர் , இந்தியா.
 • எம்.எஸ்சி. மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மார்ச்-1985, ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம், கொலம்பஸ் , ஓஹியோ.
 • பிஎச்.டி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், செப்டம்பர்-1987, ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம், கொலம்பஸ் , ஓஹியோ.

இவரது ஆய்வு[தொகு]

இவரது அடிப்படை பங்களிப்புகள், கோட்பாடு மற்றும் நடைமுறை ஆகிய இரண்டிலும் - பல ரோபோக்கள் ஒன்று கூடி கட்டுப்பாடு மற்றும் திட்டமிடல், தேடுவது, ஆராய்வது, படமிடுவது மற்றும் முப்பரிமான சூழலில் தம்மை தாமே எவ்வாறு கையாள்வது. இவர் தான் முதன் முதலில் எவ்வாறு பல ரோபோக்கள் ஒன்று கூடி இயற்றப்படவும் மற்றும் பல ரோபோக்கள் கூட்டுறவு மொபைல் கையாளுதலுக்கான தீர்வை 90 களில் கண்டார். மேலும் ரோபோக்கள் தன்னை தானே குழுக்களுக்குள் தகுந்தவாறு கட்டுபடுத்துதல், சூழ்நிலைக்கு ஏற்ப மற்ற ரோபோக்களுடன் நடந்து கொள்ளுதல்.

பாராட்டுகள் விருதுகள்[தொகு]

 • ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் ஜனாதிபதி பெல்லோஷிப் (1986)
 • NSF தலைமை இளம் ஆராய்ச்சியாளராக விருது (1991)
 • சிறப்புமிகு போதனை லின்ட்பக் விருது , பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் (1996)
 • வழிமுறைகள் மற்றும் ரோபோவியல் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக பெர்டினாண்ட் பிரஐதேன்ச்டீன் விருது
 • இயங்கியலும் எந்திரியறிவியல் 5 வது தேசிய மாநாடு ( 1997)
 • சிறந்த கட்டுரை விருது, தன்னாட்சி ரோபோடிக் அமைப்புகளின் வினியோகம் (2002)
 • மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் அமெரிக்கன் சொசைட்டி சக உறுப்பினராக ஏற்றுக்கொண்டது (2003)
 • கயமொறி சிறந்த கட்டுரை விருது , ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் ஆண்டு IEEE சர்வதேச மாநாடு (2004)
 • IEEE ரோபோவியல் மற்றும் ஆட்டோமேஷன் சமூகம் சிறப்புமிகு விரிவுரையாளர் (2005)
 • மின்சார மற்றும் மின்னணு பொறியியல் நிறுவனம் (IEEE) சக உறுப்பினராக ஏற்றுக்கொண்டது ( 2005)
 • IEEE ரோபோவியல் மற்றும் ஆட்டோமேஷன் சமூகம் சிறப்புமிகு விருது (2012)
 • ஆராய்ச்சி மேதகு ஜார்ஜ் எச் ஹெய்ல்மியர் பீடம் விருது (2013)[4]
 • பாப்புலர் மெக்கானிக்ஸ் திருப்புமுனை விருது (2013)
 • ஐ.ஐ.டி கான்பூர் கட்டுப்பாடு மற்றும் பல ரோபோ அமைப்புக்களையும் ஒருங்கிணைப்பு பகுதியில் அவரது அளப்பரிய பங்களிப்புகள் பெற்ற முன்னாள் மாணவர் விருதை 2013-14
 • எந்திரியறிவியல் தொழில்கள் சங்கம் ஜோசப் என்கேல்பேர்கேர் விருது (2014)

மேற்கோள்கள்[தொகு]

 1. "BREAKING: Vijay Kumar named new dean of engineering". The Daily Pennsylvanian. பார்த்த நாள் 3 March 2015.
 2. Desai, J.P.; Ostrowski, J.P.; Kumar, V. (2001). "Modeling and control of formations of nonholonomic mobile robots". Robotics and Automation, IEEE Transactions on 17 (6): 905–908. doi:10.1109/70.976023. http://ieeexplore.ieee.org/xpls/abs_all.jsp?arnumber=976023. பார்த்த நாள்: 2008-06-29. 
 3. Desai, J.P.(1998). "Controlling formations of multiple mobile robots". Robotics and Automation, 1998. Proceedings. 1998 IEEE International Conference on.
 4. "Vijay Kumar Receives Heilmeier Research Award". Penn Engineering. பார்த்த நாள் 23 February 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_குமார்&oldid=2215009" இருந்து மீள்விக்கப்பட்டது